துணை முதல்வருக்கு சுத்தமா நேரம் சரி இல்ல! இன்றைய கால சைக்கிள்களில் இந்த வசதி இருக்குறது கூடவா தெரியல?

டி.கே சிவகுமார் (DK Sivakumar), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல் உள்ளதா. சமீபத்தில் ஆர்சிபி (RCB) கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போதும், அதனால் ஏற்பட்ட 11 உயிரிழப்புகளின் போதும் அடிக்கடி செய்திகளில் கேட்டிருப்பீர்கள். ஏனெனில், ஆர்சிபி அணி ஐபிஎல் (IPL) கோப்பையை முதல்முறையாக வென்றதை பெங்களூருவில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து, அதன்பின் அந்த கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஓரம் ஒதுங்கியவர்தான் கர்நாடக மாநில துணை முதலமைச்சரான இந்த டிகே சிவகுமார் ஆவார்.

ஐபிஎல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. உலக சுற்றுச்சூழல் தினம் கடந்த ஜூன் 5ஆம் தேதியை முடிந்துவிட்டது என்றாலும், ஜூன் 17இல் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்கிற பெயரில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக டிகே சிவகுமார் எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) ஒன்றை ஓட்டியுள்ளார்.

karnataka deputy cm fall off

கர்நாடக மாநில சட்டசபையான பெங்களூருவில் அமைந்துள்ள விதான் சவுதாவின் வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில் மாநில துணை முதலமைச்சர் உடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் சைக்கிள் உடன் கலந்துக் கொண்டனர். சைக்கிளிங் செய்வதற்கு ஏதுவான உடையில், விலையுயர்ந்த துண்டை தோளில் அணிந்தப்படி துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் சைக்கிள் ஓட்டினார்.

பின்னர், சட்டசபை வளாகத்தின் வாசல் பகுதியை அடைந்த உடன் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முயற்சித்தவர், நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். சைக்கிளை விட்டு கீழே இறங்க முயற்சித்த போது, தெரியாத்தனமாக சைக்கிளின் ஆக்ஸலரேஷனை (Acceleration) முறுக்கியதால் சைக்கிள் முன்னோக்கி பாய்ந்ததை அடுத்து டிகே சிவகுமார் சைக்கிள் உடன் அலுவலகத்தின் வாசல் படிக்கட்டில் விழுந்துள்ளார்.

karnataka deputy cm fall off

சைக்கிளில் ஆக்ஸலரேஷனா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த நிகழ்வின்போது கர்நாடக துணை முதல்வர் பயன்படுத்தியது, நெக்ஸூ ரோம்பஸ் பிளஸ் (Nexzu Rompus Plus) என்கிற எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) ஆகும். இன்றைய கால எலக்ட்ரிக் சைக்கிள்கள் பெரும்பாலானவற்றில், ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதை போன்று ஆக்ஸலரேட்டர் வழங்கப்படுகிறது.

அதாவது, பெடலை மிதித்து எலக்ட்ரிக் பவரை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக, ஸ்கூட்டர்/ பைக்குகளில் முறுக்குவதை போன்று ஹேண்டில்பாரை முறுக்கி சைக்கிளுக்கு ஆக்ஸலரேஷனை கொடுக்கலாம். ஸ்கூட்டர்களில் கிடைப்பதை போன்று அதிக ஆக்ஸலரேஷன் கிடைக்காது என்றாலும், ஒருவரை கீழே தள்ளிவிடும் அளவிற்கு எலக்ட்ரிக் சைக்கிள்களில் ஆக்ஸலரேஷன் கிடைக்கிறது.

இத்தனைக்கும், கீழே விழும்போது டிகே சிவகுமார் எச்சரிக்கையாக பிரேக்கை பிடிப்பதை இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். பிரேக்கை கொடுத்ததினால்தான், சைக்கிள் மேலும் முன்னோக்கி பாயாமல் டிகே சிவகுமாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இல்லையென்றால், அவரை தள்ளிவிட்டு சைக்கிள் வேகமாக முன்நோக்கி பாய்ந்திருக்கும்.

நெக்ஸூ நிறுவனம் உருவாக்கும் ரோம்பஸ் பிளஸ் எலக்ட்ரிக் சைக்கிளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் பொருத்தப்படும் 250 வாட்ஸ் 36 வோல்ட் BLDC எலக்ட்ரிக் மோட்டாரில் 5.2 ஆம்பியர் திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 32கிமீ தொலைவிற்கு பெடலை மிதிக்காமல் வெறும் எலக்ட்ரிக் பவர் மூலமாக செல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்லவேளையாக சம்பவத்தின்போது சைக்கிளின் பிரேக்கை டிகே சிவகுமார் பிடித்தார். இல்லையென்றால், அது இவரை இன்னும் அதிக கேலி, கிண்டல்களுக்கு உள்ளாக்கி இருக்கும். ஏற்கனவே இந்த நிகழ்வுக்கே சமூக வலைத்தளங்களில் பலர் மாநிலத்தின் துணை முதலமைச்சர் என்றும் பாராமல் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆர்சிபி கிரிக்கெட் அணியுடன் உங்களுக்கு தொடர்பு உள்ளதா? என சமீபத்தில் டிகே சிவகுமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் இதுவரை ராயல் சேலஞ்சரை (மதுபானம்) கூட குடித்தது இல்லை என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை தற்போது விதான் சவுதாவில் நடைபெற்று இருக்கும் இந்த நிகழ்வுடன் பலர் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2025, 23:59 [IST]
English summary
Karnataka deputy chief minister dk sivakumar why did fall off the bicycle
மேலும்... #bicycle #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+