எல்லாம் முடிந்தது... பழைய அம்பாசிடர் காரில் செல்லும் முன்னாள் முதல்வர் - கார் கண்டிஷன் இன்னும் நல்லா இருக்கு!!

முதன்முதலாக வாங்கிய அம்பாசிடர் காரில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபல அரசியல்வாதி ஒருவர் பயணம் செய்துள்ளார். யார் அந்த அரசியல்வாதி? நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த அம்பாசிடர் கார் பயணம் ஏன்? என்பதற்கான பதில்களை இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

1970 -90ஆம் காலக்கட்டங்களில் அரசியல்வாதிகள் பெரும்பாலானோரின் அன்றாட பயன்பாட்டு வாகனம் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் தான். 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கூட சில அரசியல் பிரமுகர்கள் அம்பாசிடர் காரை பயன்படுத்தினர். அரசியல் வாகனங்களுக்கே உண்டான சைரன் உடன் அம்பாசிடர் காரை தூய்மையான வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கே அருமையாக இருக்கும். அம்பாசிடர் காரின் வெள்ளை நிறம் தங்களது வெள்ளை மனதை வெளிக்காட்டுவதாக அரசியல்வாதிகள் பலர் கருதினர்.

yediyurappa rides his first ever ambassador car

ஆனால் அதன்பின் நன்கு மைலேஜ் தரக்கூடிய மாடர்ன் கார்கள் வெளிவந்ததால், அம்பாசிடரின் காலம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது. இருப்பினும், இப்போதும் சிலர் தங்களது அம்பாசிடர் காரை பத்திரமாக வைத்துள்ளனர். இன்னும் சிலர் இப்போதும் அம்பாசிடர் காரிலேயே சென்று வருகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னணி பாஜக தலைவருமான எடியூரப்பா ஆவார்.

எடியூரப்பா சமீபத்தில்தான் மொத்தமாக தேர்தல் அரசியலில் இருந்து விலகி கொள்ள உள்ளதாக அறிவித்து இருந்தார். கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக கட்சி வழக்கம்போல் இந்த தேர்தலில் தனது இளைய தலைமுறை ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது. அதாவது, கட்சியில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை ஓரங்கட்டி, இந்த தேர்தலில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க முடிவெடுத்துள்ளது.

More from DriveSpark

பாஜகவின் இந்த முடிவால் கர்நாடகாவில் சில முக்கிய பாஜக தலைவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் மாற்று கட்சிக்கு தாவியுள்ளனர். கட்சி ஓரங்கட்டுவதற்கு முன்னர் நாமாக மரியாதையுடன் வெளியே வந்துவிடுவோம் என்றே சமீபத்தில் எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து கொள்வதாக அறிவித்தார். எடியூரப்பாவின் இடத்தை நிரப்பும் பொருட்டும், அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொள்ளும் பொருட்டும் இந்த சட்டமன்ற தேர்தலில் எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்கியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் ஷிகரிபுரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது மகனுக்காக பிரச்சாரம் செய்யவே எடியூரப்பா தனது பழமையான அம்பாசிடர் காரில் சென்றுள்ளார். எடியூரப்பா தனது ஆரம்ப அரசியல் காலத்தில் தனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய கார் இந்த அம்பாசிடர் ஆகும். தனது மகன் பிஎஸ் விஜயேந்திரா தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்ய சென்ற போதும், இந்த அம்பாசிடர் காரில் தான் எடியூரப்பா அந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி சென்றார்.

yediyurappa rides his first ever ambassador car

தனது மகனை இந்த சட்டமன்ற தேர்தலில் 50,000க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எடியூரப்பாவின் நோக்கமாக உள்ளது. இதற்காகவே, தான் பலமுறை நின்று வெற்றி பெற்ற ஷிகரிபுரா தொகுதியில் தனது மகனை நிறுத்தி உள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வருகிற மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் மே 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தந்தைக்கு பின் மகன் தேர்தலில் அதே தொகுதியில் நிற்பது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் பாஜக கட்சி எடியூரப்பாவை ஓய்வெடுக்க அமர வைத்துவிட்டு, அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது. தன்னை போலவே தனது மகனும் அரசியலில் கோலோச்ச வேண்டும் என்கிற விருப்பத்தில், இராசிக்காகவே தான் ஆரம்ப கால அரசியலில் பயன்படுத்திய அம்பாசிடர் காரை மீண்டும் எடியூரப்பா பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என எண்ணுகிறோம்.

Article Published On: Thursday, April 20, 2023, 11:22 [IST]
English summary
Karnataka election yediyurappa rides his first ambassador car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+