லிட்டருக்கு 360 கிமீ செல்லும் ஹைபிரிட் ஸ்கூட்டரை கண்டுபிடித்த மாணவர்!

Written By:

லிட்டருக்கு 360 கிமீ மைலேஜ் தரும் ஹைபிரிட் ஸ்கூட்டர் ஒன்றை வடிவமைத்து அசத்தியிருக்கிறார் கர்நாடகாவை சேர்ந்த எஞ்சினியரிங் படித்து வரும் மாணவர் சூரஜ்.

மின்சார மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் மூலமாக இந்த செம்மையான மைலேஜை பெறுவதற்கு வழி வகுத்திருப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பது வெகுவாக குறையும் அம்சம் கொண்டது என்று இந்த ஸ்கூட்டர் பற்றி கூறுகிறார் அந்த மாணவர்.

பொறியியல் துறை மாணவர்

பொறியியல் துறை மாணவர்

கர்நாடாக மாநிலம், பாகல்கோட்டையை சேர்ந்த மாணவர் சூரஜ் ராய்கர் தற்போது பசவேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார். பேராசிரியர் குப்பதசதாவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த ஹைபிரிட் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹைபிரிட் ஸ்கூட்டர்

ஹைபிரிட் ஸ்கூட்டர்

பழைய ஸ்கூட்டரை ஒன்றை ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்டதாக மாற்றியுள்ளார் சூரஜ். இந்த ஸ்கூட்டரில் 8 பேட்டரிகள் மற்றும் 2 சார்ஜர்கள் மூலமாக ஸ்கூட்டர் இயங்கும்போதே சார்ஜ் செய்யும் விதத்தில், உருவாக்கியிருக்கிறார். பேட்டரியில் சேமிக்கப்படும் மின் ஆற்றல் மூலம் மின் மோட்டார் ஸ்கூட்டர் இயக்கப்படுகிறது. அத்துடன், அந்த ஸ்கூட்டரில் இருந்த பெட்ரோல் எஞ்சினையும் தேவைப்படும் போது பயன்படுத்தும் விதத்தில் மாறுதல்களை செய்துள்ளார்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் வாகனங்களுக்கான மைலேஜ் கணக்கீடுகளின் அடிப்படையில், இந்த பைக் லிட்டருக்கு 360 கிமீ வரை மைலேஜ் தருவதாக சூரஜ் தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலும் பேட்டரியில் உள்ள மின்சாரத்தை கொண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு வெகுவாக குறையும் என்கிறார்.

செலவீனம்

செலவீனம்

மொத்தமாக ரூ.50,000 வரை செலவானதாகவும், புதிய ஸ்கூட்டரில் இதுபோன்று மாறுதல்களை செய்து உருவாக்கியிருந்தால் ரூ.90,000 வரை செலவாகியிருக்கும் என்று சூரஜ் கூறியிருக்கிறார்.

 பிரதமர் பாராட்டு

பிரதமர் பாராட்டு

சூரஜ் ராய்கரின் ஹைபிரிட் ஸ்கூட்டர் கண்டுபிடிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பாராட்டு கடிதம் வந்திருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கப்படும் என்று அவர் தனது கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

Photo Source 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sooraj Raikar, A student of 2nd year Mechanical Engineering in Basaveshwara Engineering college. Since he was a passionate about bikes, he himself built one. Under the guidance of his mentor Dr.Kuppasada he built a hybrid machine which could run for a long distance using minimal fuel.
Story first published: Thursday, December 10, 2015, 17:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark