கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கர்நாடக மாநிலத்தில் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாற தொடங்கியது. மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி, ரயில் மற்றும் விமானம் என அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

அத்துடன் தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. எனவே வாகனங்களின் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. ஆனால் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் பேருந்துகள் இயங்குகின்றன.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனால் குறைவான எண்ணிக்கையில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, டாக்ஸிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக அவற்றில் பயணம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். எனவே ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருவதை தற்போது பார்க்க முடிகிறது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

தனியார் கார், டூவீலர்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டிருந்தாலும், நாடு முழுக்க முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்டது என்று சொல்ல முடியாது. பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் இன்னமும் நீடித்து கொண்டுதான் உள்ளன. அத்துடன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்களும் பெரிய அளவில் பயணங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

ஒட்டுமொத்தத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் தேவை குறைந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் எரிபொருள் நுகர்வு மிக கடுமையான சரிவை சந்தித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் தரவுகளில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் எரிபொருள் விற்பனை சரிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளை காட்டிய பின்பு, எரிபொருள் விற்பனை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

இன்றைய சூழலில் பல்வேறு நிறுவனங்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளன. இதனாலும், பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் காரணமாகவும்தான் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 2.2 லட்சம் கிலோ லிட்டர்கள் பெட்ரோல் விற்பனையாகியிருந்தது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

எனினும் ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில் இது வெறும் 1 லட்சம் கிலோ லிட்டர்களாக சுருங்கியது. ஆனால் மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.8 லட்சம் கிலோ லிட்டர்கள் என சற்றே உயர்ந்தது. அதன்பின் வந்த ஜூன் மாதத்தில் பெட்ரோல் விற்பனை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்தது. அந்த மாதத்தில் 2.1 லட்சம் கிலோ லிட்டர் பெட்ரோல் விற்பனையானது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனால் அதற்கு அடுத்த ஜூலை மாதத்தில் இது 1.9 லட்சம் கிலோ லிட்டர்களாக மீண்டும் சரிவை சந்தித்தது. டீசல் விற்பனையும் கிட்டத்தட்ட இதே போன்ற நிலைமையில்தான் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 4.4 லட்சம் கிலோ லிட்டர்களாக இருந்த டீசல் விற்பனை, அதன்பின் வந்த ஏப்ரல் மாதத்தில் 2.2 லட்சம் கிலோ லிட்டர்களாக சரிவடைந்தது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

எனினும் அதற்கு அடுத்த மே மாதத்தில் 4.1 லட்சம் கிலோ லிட்டர்கள் எனவும், ஜூன் மாதத்தில் 4.4 லட்சம் கிலோ லிட்டர்கள் எனவும் டீசல் விற்பனை தொடர்ந்து உயர்ந்தது. ஆனால் கடந்த ஜூலை மாதம் இது 3.8 லட்சம் கிலோ லிட்டர்களாக சரிவடைந்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலமானது 4.8 லட்சம் கிலோ லிட்டர் டீசலை நுகர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா பிரச்னையால் கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

எரிபொருள் நுகர்வு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம் என வல்லுனர்கள் கூறி வருகின்றனர். பேருந்துகள் முழுமையாக இயங்க தொடங்குவது, பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது ஆகியவை நடந்தால் மட்டுமே எரிபொருள் நுகர்வு இயல்பு நிலைக்கு வரும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 26, 2020, 0:20 [IST]
English summary
Karnataka: Fuel Consumption Declines In July 2020. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+