Just In
- 55 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆட்டோ டிரைவராக மாறிய அரசு டாக்டர்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் நடந்திருக்கா? மூச்சு முட்டுது...
அரசு மருத்துவர் ஆட்டோ ஓட்டுனராக மாறிய விவகாரத்தின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில், ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஊரடங்கு அமலுக்கு வந்தவுடன், இந்தியா முழுவதும் ஆட்டோக்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் வருமானம் இழந்து, வீடுகளுக்குள் முடங்கினர்.

அதன்பின்னர் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோக்களை இயக்குவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ஆட்டோக்களில் பயணம் செய்ய மக்கள் முன்வருவதில்லை. அதற்கு பதிலாக சொந்த கார் மற்றும் டூவீலர் ஆகிய வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

எனவே ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தற்போதும் வருமானம் இல்லை. இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் வேறு தொழிலுக்கு மாறி கொண்டுள்ளனர். நிலைமை இப்படி இருக்க கர்நாடகாவில் அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டுனராக உருவெடுத்துள்ளார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த பிரச்னையை சமாளிப்பதற்கு போதிய அளவில் சுகாதார பணியாளர்கள் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், 53 வயதாகும் மாவட்ட இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதார அதிகாரி ஒருவர், தனது பிழைப்புக்காக ஆட்டோ இயக்கி கொண்டுள்ளார்.

அவரது சம்பளம் 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு, இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். மருத்துவர் ரவீந்திரநாத் என்பவருக்குதான் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் இவர் 24 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். தற்போது அம்மாநிலத்தில் உள்ள தாவனகெரே நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

தனது இந்த அவல நிலைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு தவறான ஒரு காரியத்திற்காக உதவ மறுத்ததில் இருந்து தனக்கு சோதனைக்காலம் தொடங்கியதாக மருத்துவர் ரவீந்திரநாத் கூறியுள்ளார். அத்துடன் பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், ''அதன்பின் பதவிக்கு வந்த ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரியும் தொடர்ந்து என்னை துன்புறுத்தினார். வெளியில் கொடுத்து செய்யப்படும் ஒரு பணியில், தொழில்நுட்ப ரீதியிலான ஒரு தவறை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் இதில் என் மீது எந்தவிதமான தவறும் இல்லை என நான் நிரூபித்து விட்டேன்.

இருந்தாலும் கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த 4 நாட்களில், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் இதுகுறித்து நான் முறையிட்டேன். இதில், அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அரசின் உத்தரவு தலைகீழாக மாற்றப்பட்டது. மீண்டும் அதே பணியில் என்னை அமர்த்துவதற்கு உத்தரவிடப்பட்டது.

இதன்பின்னர் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள சீடம் பொது மருத்துவமனையில், மூத்த மருத்துவ அதிகாரியாக டிசம்பர் மாதம் அவர் பணியமர்த்தப்பட்டார். இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், ''கிராமப்புற பகுதிகளில் நான் 17 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளேன். பெல்லாரி மாவட்டத்தில் பொது சுகாதார அமைப்பை மேம்படுத்தியதற்காக நான் பாராட்டப்பட்டுள்ளேன்.

ஆனால் எனக்கு தாலுகா அளவில் பணி வழங்கியது பதவி குறைப்பு. இருந்தாலும் நான் பணிக்கு சென்றேன். ஆனால் இந்த வழக்கில் போராடுவதற்காக அடுத்த நாளே நான் விடுப்பு கோரி விண்ணப்பித்தேன். அதன் பின்பு, என்னை மாவட்ட அளவிலான மருத்துவமனையில் பணியமர்த்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும்படி கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகினேன்.

இது தொடர்பாக விசாரித்த கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம், ஒரு மாதத்திற்குள் என்னை மாவட்ட அளவிலான மருத்துவமனையில் பணியமர்த்த வேண்டும் என ஜனவரியில் உத்தரவிட்டது'' என்றார். ஆனால் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை என மருத்துவர் ரவீந்திரநாத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''நான் இன்னும் பணியை பெறவில்லை. பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி நான் கடிதம் எழுதியபோது, கோவிட்-19 பிரச்னை காரணமாக சீடமில் எனது இருப்பு அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் தனது உத்தரவை வழங்கிய சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்று இல்லை.

சீடம் பொது மருத்துவமனையில் இருந்த டாக்டர் உள்பட இந்த காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை கவனிக்க வேண்டும். இதனால் நான் அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளேன். அதன் மீதான விசாரணை வரும் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறவுள்ளது'' என்றார்.

இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் தனது சொந்த ஊரான தாவனகெரேவிற்கு இடம்பெயர்ந்து விடலாம் என மருத்துவர் ரவீந்திரநாத் முடிவு செய்தார். தற்போது அங்கே ஆட்டோ ஓட்டி வருகிறார். தனியாக மருத்துவ தொழில் செய்வதற்கு பதிலாக ஆட்டோ ஓட்டுனராக மாறியது ஏன்? என்ற கேள்விக்கு ரவீந்திரநாத் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

''நான் தனியாக கிளீனிக் தொடங்குவதாக இருந்தால், உரிமம் பெறுவதற்காக அதே அதிகாரிகளிடம்தான் செல்ல வேண்டும். தொழில் தொடங்குவதற்கும் என்னிடம் போதுமான அளவில் பணம் இல்லை. கடன் பெறுவதற்காக பல்வேறு வங்கிகளை நான் அணுகினேன். ஆனால் சுகாதார துறையில் பணியாற்றிய ஒருவருக்கு, ஆட்டோ லோன் வழங்க அவர்கள் மறுத்து விட்டனர்.

இறுதியில் ஒரு நிறுவனம் எனக்கு பண உதவி செய்தது. எனவே எனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளேன்'' என்றார். கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக தற்போது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பிரச்னையால் ஆட்டோ ஓட்டுனர்கள் தடுமாறி வரும் நிலையில், மருத்துவர் ரவீந்திரநாத் அந்த தொழிலை தேர்ந்து எடுத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக மிக கடுமையாக சரிந்த கார் விற்பனை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் பொது போக்குவரத்தில் பயணிக்க மக்கள் தயங்குவதால், கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வரும் மாதங்களில் இதே காரணத்திற்காக கார் விற்பனை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஆட்டோ ஓட்டுனர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இக்கட்டான சூழலில், மருத்துவர் ரவீந்திரநாத் இந்த தொழிலுக்கு வந்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவதால், இந்த விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.