சரவணா ஸ்டோரே தோத்திடும்போல.. அபராத செல்லாண்களுக்கு 50சதவீதம் சலுகை அறிவித்த அரசு! எல்லாரும் தேடிபோயி கட்றாங்க!
வாடிக்கையாளர்களைக் கவர பெரும் நிறுவனங்கள் கையாளும் யுக்தியே சிறப்பு சலுகை திட்டம். டீமார்ட், ரிலையன்ஸ், லூ-லூ மால் மற்றும் உள்ளூர் சரவணா ஸ்டோர் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பொருட்களின் விலைகளில் பெரும் தள்ளுபடிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதன் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் இவர்கள் ஃபேமஸானவர்களாக மாறி இருக்கின்றனர். வழக்கமாக ரோட்டோரத்தில் கடை அமைத்திருக்கும் அண்ணாச்சி 50 ரூபாய்க்கு வழங்கும் பொருளைகூட மேலே பார்த்த நிறுவனங்கள் ரூ. 20 முதல் ரூ. 30 விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வளவு மலிவு விலையில் பொருட்களை விற்பனைக்கு வழங்குகின்றன காரணத்தினால்தான் தற்போது மக்கள் பலர் அண்ணாச்சி கடையைக் காட்டிலும் கார்பரேட் நிறுவனங்களின் பலசரக்கு மால்களை நாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக அபராத செல்லாண்களுக்கு ஓர் மாநில அரசு தற்போது சலுகை வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
வாகன ஓட்டிகளால் அரங்கேற்றப்படும் வாகன போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாகவே போக்குவரத்துத் துறையால் அபராத செல்லாண்கள் வழங்கப்படுகின்றன. தற்போது அதிகபட்ச தொகையையே போக்குவரத்து காவலர்கள் அபராதமாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவை துளியளவும் விதிமீறலே இல்லாத நாடாக மாற்றும் பொருட்டு உச்சபட்ச அபராதத்தை போலீஸார்கள் விதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே முன்னதாக போடப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத செல்லாண்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி என்கிற அதிரடி அறிவிப்பை ஓர் மாநில அரசு அறிவித்து இருக்கின்றது. நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கு வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக இந்த அறிவிப்பு முன்பு போக்குவரத்து விதிமீறலுக்காக அபராத செல்லாண்களைப் பெற்றவர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கின்றது. பிப்ரவரி 11ஆம் தேதிக்கு முன்னர் போடப்பட்ட அபராத செல்லாண்களுக்கே இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும் என மாநில போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்து இருக்கின்றது.

இந்த சலுகை வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நிலுவையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா அரசாங்கம் இதுபோன்று அபராத செல்லாண்களுக்கு சலுகையை அறிவிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக இரண்டு முறை வரை இதேமாதிரியான சலுகையை அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இவை சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த தகவல் அம்மாநில மக்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கையால் நிலுவையில் உள்ள செல்லாண்களுக்கான அபராதம் விரைவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் அம்மாநில சட்டப் பணிகள் ஆணையத் தலைவர் தலைமையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே இ-செல்லாண்களுக்கான சலுகை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் சலுகை நம்மை தமிழகத்திலும் வழங்கப்படுமா என்கிற ஏக்கம் நம்ம ஊர் வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது எழும்பி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து அபராத செல்லாண்களுக்கு சலுகை வழங்கப்படும் என அறிவித்து இருப்பது பலரிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒரு சிலர் இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கத் தொடங்கி இருக்கின்றனர். "அட இதையாச்சும் கொடுத்திருக்காங்களே போய் பணத்தை கட்டுங்கப்பா" என்றே நம் மனதில் நினைக்கத் தோன்றுகின்றது.


Click it and Unblock the Notifications









