ஓலா,உபேர் நிறுவனங்களை கடுப்பேற்றிய அரசு... இன்னும் 4 வாரத்துல தலையெழுத்தே மாறப்போகுது
கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோக்களில் அதிக கட்டண வசூலித்த பிரச்சனைக்கு 4 வாரத்தில் தீர்வு கிடைக்கும் என கோர்டில் அரசு பதிலளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஓலா, உபேர், ராபிடோ போன்ற ஆப் மூலம் மொபிலிட்டி சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஆட்டோ சேவையில் மாநில அரசு விதித்துள்ள கட்டண விதிமுறைகளை மீறி அதிகமான கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து கடந்த மாதம் இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சேவைகளை வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த செய்தி இந்தியா முழவதும் வைரலாக பரவியது. நாடு முழுவதும் ஓலா, உபேர் நிறுவனங்கள் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துவந்த நிலையில் கர்நாடக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில் தான் இந்நிறுவனங்கள் எல்லாம் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்ஜிஎஸ் கமல் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு எடுத்தது. இந்த அமர்வு ஆரம்ப கட்ட விசாரணையில் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்டோக்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசிடம் கேள்வியை எழுப்பியது.
இது குறித்து அரசு தரப்பில் அளித்த பதிலில் இதற்கான வழிமுறைகளை வழங்க 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு நீதிமன்ற அமர்வும் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் ஓலா, உபேர் போன்ற ஆப் மூலம் இயங்கும் நிறுவனங்கள் ஆட்டோகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கர்நாடக மாநில அரசு இந்த ஆப் மூலம் சேவை நடத்தும் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக அதற்கு தடை விதித்த போது அந்நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அப்பொழுது இடை காலமாக அரசு நிர்ணயம் செய்த தொகையிலிருந்து அதிகபட்சமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து 10 சதவீதம் வரை கூடுதலாக வசூலித்துக்கொள்ள கோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் எல்லாம் தங்ககள் கட்டணங்களை அதிரடியாக குறைத்தனர்.
தற்போது பழைய கட்டணத்திலிருந்து 30-50 சதவீதம் வரை கட்டணங்கள் குறைவாகவே வசூலிக்கப்படுகின்றன. ஆனால் இந்த பணம் தங்களுக்கு கட்டுப்படி ஆகாது எனவும் மீண்டும் பழையபடியே கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதில் 4 வாரங்கள் அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.
இந்நிலையில் இந்த காலத்திற்கு பிறகு அரசு இப்படியா ஆப் மூலம் இயங்கும் நிறுவனங்களுகு்கு தனியாக கட்டண விபரங்களை வெளியிடலாம். அல்லது ஏற்கனவே உள்ள கட்டணங்களில் குறிப்பிட்ட சதவீதம் வரை ஆஃப் மூலம் இயங்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக வசூலித்துக்கொள்ள அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது உள்ள கட்டணம் மேலும் உயர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆஃப் மூலம் இயங்கும் நிறுவனங்கள் இந்த ஆஃப் சேவையை வழங்குவதற்காக செலவுகள், அதற்கு பின்னால் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம், மேலும் தொழிற்நுட்ப செலவு உள்ளிட் விஷயங்களை காரணம் காட்டி அதற்கான செலவுகள் மற்றும் இந்நிறுவனங்களுக்கான லாபம் எல்லாம் இருப்பதால் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் கட்டுப்படி ஆகாது என இந்த வழக்கின் மனுவில் தெரிவித்துள்ளது.
இதை ஏற்றுக்கொண்டே நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக அரசு இந்த 4 வாரத்திற்குபிறகு எடுக்கப்போகும் முடிவை பொருத்து அதே முறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் இன்னும் 4 வாரத்தில் இந்தியா முழுவதும் ஆப் மூலம் ஆட்டோ சேவைகளின் கட்டணம் அதிரடியாக குறையும் வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications