கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு... ஓலா, உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா?

கர்நாடக மாநிலத்தில் விதிகளை மீறிச் செயல்படுவதாக வந்த புகாரையடுத்து, ஓலா, உபேர் ராபிடோ போன்ற நிறுவனங்கள் அட்டோ சேவையை வழங்க 3 நாட்கள் தடை விதித்துள்ளது. இது குறித் முழு விபரங்களைக் காணலாம்.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகக் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ புக்கிங் எல்லாம் ஆப்கள் மூலம் நடக்கத் துவங்கிவிட்டன. இந்த துறையில் ஓலா, உபேர், உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்படுத்த வாகனத்தை புக் செய்ய வேண்டும் என்றால் இப்படியான ஆப்களை பயன்படுத்தி புக்கிங் செய்யலாம். இந்நிறுவனங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. நிலையில் இந்த சேவையில் பல சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

அதில் முக்கியமானது போக்குவரத்துக்கு அதிக கட்டணம் வசூலிப்பது, பொதுவாக மாநில அரசுகள் அந்த அந்த மாநிலத்தில் இவ்வாறாக கார் மற்றும் ஆட்டோ சேவைகளுக்கான கட்டணத்தை வரைமுறை செய்து வைத்துள்ளனர். ஆனால் இந்த ஆப்களில் இந்த கட்டண திட்டம் பின்பற்றப்படுவதில்லை, மாறாக டிமாண்டிற்கு ஏற்ப கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இது பிரதான குற்றச்சாட்டாக இருந்தாலும் இது போக மேலும் பல சிக்கல்கள் இந்த ஆப் மூலம் ஏற்படுகிறது.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

இந்நிலையில் கர்நாடக போக்குவரத்துத் துறை அம்மாநிலத்தில் செயல்படும் ஓலா, உபேர் மற்றும் ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அந்நிறுவனம் அடுத்த 3 நாளுக்கு ஆட்டோ சர்வீஸ்களுக்கு சேவை வழங்குவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதோடு, அம்மாநில அரசு வகுத்த விலைப் பட்டியலை ஏன் பற்றப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

அம்மாநிலத்திற்குக் குறைந்த தூரத்திற்கே அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக அளவில் புகார் வந்துள்ள நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்துத் துறை கமிஷனர் டி.எச்.எம் குமார் தெரிவித்துள்ளார். இந்த நோட்டீஸில் அதிக கட்டணம் வசூலித்ததற்கான காரணத்தை விளக்கம் சொல்லிக் கேட்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அந்நிறுவனம் அளிக்கும் பதிலுக்கு ஏற்றவாறு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

அம்மாநில அரசு ஆட்டோக்களுக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ30 மற்றும் காத்திருப்பு நேரக் கட்டணமாக 5 நிமிடத்திற்கு ரூ5 என வகுத்துள்ளது. ஆனால் இந்நிறுவனங்கள் ஆட்டோகளுக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ100 வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இப்படியாக 3 பார்டி அக்ரிகேட்டர் ஆப்களால் ஆட்டோ டிரைவர்களும் நஷ்டமடைகிறார்கள், பயன்படுத்தும் மக்களும் நஷ்டமடைகிறார்கள் எனப் பலர் பேசி வருகின்றனர்.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

இந்த முறையான போக்குவரத்தில் அதிக லாபம் அந்த சேவையை ஆப் மூலம் வழங்கும் நிறுவனங்களே அடைகின்றன என ஆட்டோ ஓட்டுநர்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில் பெங்களூருவில் உள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவர் யூனியன் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களாகச் சேர்ந்து தங்களுக்காக தாங்களே ஆப் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

அதன்படி வரும் நவம்பர் 1, கர்நாடக தினமான அன்று "நம்ம யாத்ரீ ஆப்" என்ற பெயரில் ஓலா, உபேர், ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆப்பை நந்தன் நீலகேனியின் பெக்கின் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

இந்த ஆப்பில் இணைந்தால் 40 சதவீதம் கமிஷனாக கட்ட வேண்டும். மற்ற 60 சதவீதம் ஆட்டோ டிரைவருக்கு வழங்கப்படும் என ஆட்டோ ரிக்ஷா டிரைவர் யூனியன் தலைவர் ருத்ரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசைப் போல பெரும்பாலான மாநில அரசுகள் இப்படியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் பல மாநிலங்களிலும் இந்த விதிமுறைகள் இப்படியான ஆப்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறை மீறப்படுவதாகவே தெரிகிறது.

கர்நாடகாவிடமிருந்து பாடம் கற்குமா தமிழக அரசு . . . ஓலா , உபேர் சட்ட விதிமுறைகளை மீறுகிறதா . . .

விரைவில் மற்ற மாநிலங்களிலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். தமிழகத்திலும் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இதே போல ஆப்களுக்கு தடை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, October 8, 2022, 11:04 [IST]
English summary
Karnataka govt ban ola uber Rapido for charging double
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+