தமிழ்நாடு அரசு இன்னும் கொஞ்சம் உஷாரா இருக்கனும்!! டெஸ்லா கர்நாடகா கைக்கு போயிடும் போலயே... அமைச்சரின் அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கின் சந்திப்பினால், கர்நாடகா மாநில அரசு சற்று குஷியாகியுள்ளது. கர்நாடகாவின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? என்பதையும், டெஸ்லாவின் இந்திய வருகை குறித்தும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம் பாரத பிரதமர் அமெரிக்காவுக்கு அரசியல் பயணமாக சென்றிருந்தார் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயமே. நியூயார்க்கில் முக்கியமாக, கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்த அமெரிக்க பயணத்தை மோடி மேற்கொண்டார். ஜூன் 24ஆம் தேதி வரையில் அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

karnataka minister invited tesla

அத்தகைய நிகழ்ச்சிகளுள் ஒன்றாக, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட விரைவாக, ஜூன் 21ஆம் தேதி அன்றே நம் இந்திய பிரதமரை எலான் மஸ்க் சந்தித்துள்ளார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை கூட பலர் மறந்துவிட்டனர்.

2015ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும் சந்தித்தனர். இந்த சந்திப்பு கலிஃபோர்னியாவில் உள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையில் நடந்தது. அதன்பின், இவர்களது 2வது சந்திப்பு கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து இப்போதுதான் நடந்துள்ளது. சந்திப்பிற்கு பிறகு, இந்தியாவில் டெஸ்லா முதலீடு செய்யும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

karnataka minister invited tesla

இந்தியாவிற்கு டெஸ்லா வருவதால் கர்நாடகா மாநிலம்தான் முதலில் குஷியாகும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததை போல, கர்நாடாக மாநில அரசு டெஸ்லாவை இந்தியாவிற்கு வரவேற்க தயாராகிவிட்டது. கர்நாடகா மாநில அமைச்சர் எம் பி பட்டீல் அவர்களின் சமீபத்திய டுவிட்டர் பதிவு இதற்கு ஓர் சாட்சியாகும். கர்நாடக மாநில தொழிற்துறை அமைச்சரான எம் பி பட்டீல் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை போல் டுவிட்டரில் மிகவும் ஆக்டீவ்வாக இருக்கக்கூடியவர்.

இவர், பிரதமர் மோடி மற்றும் எலான் மஸ்க்கின் சந்திப்பிற்கு பிறகு ஓர் பதிவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "இந்தியாவில் டெஸ்லாவின் விரிவாக்கத்திற்கு கர்நாடகா சிறந்த முனையமாக விளங்கும். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் உள்பட எலான் மஸ்க்கின் பிற நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை ஆதரிக்கவும், வழங்கவும் முற்போக்கு மாநிலமாகவும், புதுமை & தொழிற்நுட்பத்தின் செழிப்பான மையமாகவும் கர்நாடகா தயாராக உள்ளது.

karnataka minister invited tesla

அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாநிலத்தை முன்னெடுத்து செல்ல தொழிற்நுட்பம் மற்றும் உற்பத்தி 5.0-க்கான மையமாக திகழ கர்நாடகா கவனம் செலுத்துகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவ கருதினால், பெரும் ஆற்றல் மற்றும் திறன்களை கொண்ட கர்நாடகா அதற்கு சரியான முனைய பகுதி என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடக முதல்வர் மற்றும் எனது அழைப்பை டெஸ்லாவிற்கு வார்த்தைகளிலும், ஆழ்மனதில் இருந்தும் தெரிவிக்கின்றோம்".

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டெஸ்லாவை வரவேற்பதில் கர்நாடகா இவ்வளவு மகிழ்ச்சியாகுவதற்கு காரணம், சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவ தமிழ்நாடு அல்லது கர்நாடகா இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. பின்னர் இதில் இரண்டில் கர்நாடகாவை டெஸ்லா தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவும் விருப்பத்தில் இல்லாத காரணத்தினாலேயே இத்தனை வருடங்களாக டெஸ்லா இந்தியாவில் நுழைய தயக்கம் காட்டி வந்ததை மறந்துவிட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 24, 2023, 15:12 [IST]
English summary
Karnataka invited tesla after pm modi elon musk meet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X