விவசாயினு சொல்ல ஒவ்வொருத்தரும் பெருமைப்படனும்! சாதாரணமாக டிராக்டரில் வந்து இறங்கியவர் இவ்வளவு பெரிய ஆளா?

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார்களை விரும்பாதவர்கள் யார்தான் இருப்பார்கள்? கம்பீரமான தோற்றத்தில், பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட டிஃபெண்டர் கார்களை வைத்திருப்பதே தனி கெத்துதான். சமீபத்தில் இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே சில புதிய ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளதால், டிஃபெண்டர் போன்ற பிரிட்டனை சேர்ந்த கார் நிறுவனங்களின் கார்களின் விலைகள் குறையும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்க உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவில் ஏற்கனவே டிஃபெண்டர் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, சினிமா (Cinema) நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் டிஃபெண்டர் கார்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

land defender

இந்த வகையில், தொழிலதிபர்கள் மத்தியிலும் டிஃபெண்டர் கார்கள் கவனத்தை பெற்றுவரும் நிலையில், தற்போது கர்நாடகாவை சேர்ந்த விவசாயி ஒருவர் பளபளப்பான வெள்ளை நிறத்திலான டிஃபெண்டர் காரை வாங்கி உள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு பணக்காரர் டிஃபெண்டர் காரை வாங்குகிறார் என்றாலும், இந்த கர்நாடக விவசாயியை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு ஒரு காரணம் உள்ளது.

அது என்னவென்றால், இவர் தனது 'நியூ ஹோலண்ட்' (New Holland) டிராக்டரில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூமுக்கு (Dealership Showroom) வந்து பிராண்ட்-நியூ டிஃபெண்டர் காரை டெலிவிரி பெற்றுள்ளார். மற்ற தொழில்களுடன் சேர்த்து விவசாயத்தையும் பார்த்து வருவாயை ஈட்டிவரும் இந்த பணக்காரரின் பெயர் மஞ்சு ஆகும்.

Man Came In Tractor To Take Delivery

கர்நாடகாவில் பெரிய சொகுசு மாடி வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் இவரிடம் வெவ்வேறான மாநில நம்பர் பிளேட்களில் மஹிந்திரா தார் (Mahindra Thar), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta) கார்கள் உள்ளன. இதில் மஹிந்திரா தார் வாகனத்தை மிக சமீபத்தில் கடந்த ஜூலை 13ஆம் தேதியில்தான் மஞ்சு டெலிவிரி பெற்று இருந்தார்.

இத்தனை வாகனங்களை வரிசைக்கட்டி வீட்டில் நிறுத்தி வைத்திருந்தாலும், தான் ஒரு விவசாயி என்பதை வெளிக்காட்டும் விதமாக ஷோரூமுக்கு டிராக்டரில் மஞ்சு வந்திறங்கியது கவனத்தை பெற்றுள்ளது. தந்தை, மனைவி மற்றும் சிறு வயது மகன் உடன் பெங்களூருவில் உள்ள லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூமிற்கு வந்து 'டிஃபெண்டர் 110' காரை மஞ்சு வாங்கி உள்ளார்.

Man Came In Tractor To Take Delivery

டிஃபெண்டர் 110 என்பது டிஃபெண்டர் காரின் வீல்பேஸ் (Wheelbase) நீளத்தை குறிக்கிறது. டிஃபெண்டர் 90 மற்றும் டிஃபெண்டர் 130 கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. டிஃபெண்டர் கார்களில் 2 லிட்டர், 3 லிட்டர் மற்றும் 5 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் 3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விவசாயம் மூலமாக கர்நாடகாவில் சொகுசு வாழ்க்கை உடன் பணக்காரராக விளங்கும் மஞ்சு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை எந்த என்ஜின் உடன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. மஞ்சுவின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தை கொஞ்சம் அலசி பார்த்ததில், அதிகமாக கார்கள் உடன் மஞ்சு காட்சித்தரும் பதிவுகளுக்கு இடையே ஏழை, எளியோருக்கு மஞ்சு உணவளிக்கும் பதிவுகளையும் பார்க்க முடிகிறது. மஞ்சுவின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் என்ன என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது...!!

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2025, 5:00 [IST]
English summary
Karnataka man came in tractor to take delivery of land rover defender 110
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X