அரசியல்வாதி வீட்டில் ஆயுத பூஜை கொண்டாட்டம்.. என்னங்க இவருகிட்ட ரோல்ஸ் ராய்ஸ், ஃபெர்ராரிகூட இருக்கா!
இந்தியாவின் பணக்கார அரசியல்வாதியின் ஆயுத பூஜை கொண்டாட்டம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த அரசியல்வாதி தன்னுடைய விலை உயர்ந்த கார்கள் அனைத்துடன் சேர்த்து மாருதி ஆம்னி காருக்கும் பூஜை செய்து அதை பெருமிதம் செய்திருக்கின்றார். இதுகுறித்து வைரலாகும் வீடியோ பற்றிய பதிவை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பொறாமைக்கு ஆளாகும் அளவிற்கு மிக மிக அதிக லக்சூரி வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர். பெங்களூருவின் ஹொஸ்கேட்டைச் சேர்ந்தவர் எம்டிபி நாகராஜ். இந்தியாவின் புகழ்மிக்க அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

மாநிலத்தின் சிறுதொழில் மற்றும் நகராட்சி நிர்வாகம் பிரிவுகளின் அமைச்சராக இவர் பதவி வகித்து வருகின்றார். இவர் மிகப் பெரிய அரசியல்வாதி மற்றும் செல்வந்தர் மட்டுமல்ல மிகப் பெரிய கார் காதலரும் கூட. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடைய கார் கராஜ் இருக்கின்றது.
மேலும், இந்த கார்களுக்கே அவர் குடும்பத்துடன் ஆயுத பூஜையைக் கொண்டாடி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், அந்த வீடியோ ஹாட் டாப்பிக்காகவும் மாறி இருக்கின்றது. அரசியல்வாதி இடத்தில் மிக மிக விலை உயர்ந்த கார்கள் பல இருப்பதை இந்த ஆயுத பூஜை கொண்டாட்டம் வெளிக்காட்டி இருக்கின்றது.

அவரிடத்தில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII, இரண்டு லேண்ட் ரோவர் சொகுசு (ஒன்று ரேஞ்ஜ் ரோவரும் மற்றொன்று டிஃபெண்டரும் ஆகும்), ஒரு போர்ஷே கேயென்னே மற்றும் ஒரு ஃபெர்ராரி சூப்பர் கார் என ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் அரிய வகை கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன.
இதுதவிர, இரண்டு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, ஒரு ஃபார்ச்சூனர் மற்றும் ஒரு மாருதி சுஸுகி ஆம்னி உள்ளிட்ட வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த அனைத்து வாகனங்களுக்கும்தான் கர்நாடகா அமைச்சர் ஆயுத பூஜையைக் கொண்டாடி இருக்கின்றார். குறிப்பாக, அனைத்து விலை உயர்ந்த கார்களுடன் சேர்த்து ஆம்னி காருக்கும் அவர் பெருமிதம் சேர்த்திருப்பது, அமைச்சர் பழசை மறக்கவில்லை என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த சொகுசு மற்றும் அரிய வகை கார்களுடன் சேர்த்து அமைச்சரின் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் பயன்பாட்டில் இருப்பது இந்த ஆயுத பூஜைக் கொண்டாட்டடத்தின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. இவை அமைச்சர் வீட்டின் பணியாளர்களுக்காக வாங்கப்பட்டது என கூறப்படுகின்றது.
இந்த வாகனங்களையும் வரிசையாக நிற்க வைத்து அமைச்சர் ஆயுத பூஜைக் கொண்டாடி இருக்கின்றார். இதில் மிக மிக அதிக விலையைக் கொண்டதாக ரோல்ஸ் ராய்ஸ் பேந்த் VIII கார் மாடல் இருக்கின்றது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 10 கோடியை தொடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொகுசு வசதிகளும் அதிகம், எஞ்ஜின் அதிக பவர்ஃபுல்லான என்பதால் இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக அதிக விலையைக் கொண்ட கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை தேர்வின் விலையே ரூ. 2.39 கோடிகள் ஆகும்.
அதிகபட்ச விலையாக ரூ. 4.17 கோடி வரை இந்த கார் விற்கப்படுகின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதேபோல், எம்டிபி நாகராஜ் வைத்திருக்கும் ஃபெர்ராரி எஃப் 8 காரும் அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் மதிப்பே 4.02 கோடி ஆகும்.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் இந்த காரின் மதிப்பு ரூ. 2.30 கோடி. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். இதற்கு அடுத்தபடியாக அதிக விலையைக் கொண்ட கார் மாடலாக போர்ஷே கேயென்னே இருக்கின்றது. இதன் தொடக்க விலை ரூ. 1.36 கோடி ஆகும்.
மற்ற கார்கள் அரை கோடி ரூபாய் மதிப்புக் கொண்டவை ஆகும். ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா ஆகைய 30 லட்சம் ரூபாய் தொடங்கி ரூ. 40 லட்சம் வரையில் விலைக் கொண்டவை ஆகும். பொதுவாக ஆயுத பூஜைக் கொண்டாட்டமானது ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கே வழக்கமாகக் கொண்டாடப்படும். இவர் தன்னுடைய லக்சூரி மற்றும் சொகுசு கார்களுக்கு கொண்டாடி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அரசியல்வாதிகள் பலர் பெரும் தொழிலதிபர்களுக்கு இணையான சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு உதாரணமாகவே கர்நாடகா அமைச்சர் எம்டிபி நாகராஜ் இருக்கின்றார். இவருடம் இருக்கும் கார்கள் மட்டுமல்ல அவர் வசிக்கும் வீடும் கூட அரண்மனையைப் போன்று இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
