கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், எம்எல்ஏ ஒருவர் செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 7,22,664 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,983 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகள்தான் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தற்போது 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பஸ், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி போன்ற வாகனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

ஆனால் அத்தியாவசிய பணிகள் இருக்கும் பட்சத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரலாம். ஊரடங்கு உத்தரவை பலர் முறையாக கடைபிடித்து வருகின்றனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. எனவே இதை பயன்படுத்தி கொண்டு, ஒரு சிலர் தேவை இல்லாமல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வெளியே உலா வருகின்றனர்.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

இத்தகைய நபர்களால் ஊரடங்கின் நோக்கம் சீர்குலைந்து போகிறது. இதனால் தேவை இல்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறை தற்போது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன்படி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவும் செய்யப்படுகிறது.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

சாதாரண பொதுமக்கள்தான் இப்படி விதிமுறைகளை மீறுகின்றனர் என்றால், அரசியல்வாதிகளும் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வது கவலையை அளிக்கிறது. ஆம், அரசியல்வாதி ஒருவர் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார். தனது பேரனுடன் விளையாடுவதற்காக வெறிச்சோடிய சாலைகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

இந்தியாவில் ஒரு சில அரசியல்வாதிகள் பல்வேறு விஷயங்களில் விதிமுறைகளை மீறுவார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமல் செய்யப்பட்ட ஊரடங்கு உத்தரவையும் கூட மீறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை அவர்களே புரிந்து கொள்ளாவிட்டால், சாமானிய மக்களுக்கு எப்படி புரியும்?

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தற்போது ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார். வாகனங்கள் வலம் வராமல் வெறிச்சோடி கிடந்த சாலை ஒன்றில் அவர் தனது பேரனுடன் விளையாடியுள்ளார். போதாக்குறைக்கு இந்த சம்பவம் வீடியோவாகவும் வேறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு ஆளாகி இருக்கும் அரசியல்வாதி எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் (SR Srinivas).

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

இவர் கர்நாடக மாநிலம் குப்பி தொகுதியின் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் முழுவதும் மக்களால் நன்கு அறியப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் உள்ளார். அப்படி இருக்கும் போது, ஊரடங்கு உத்தரவை அவர் மீறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விதிமுறையை மீறிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ரிமோட் கண்ட்ரோல் டாய் காரில் செல்லும் தனது பேரனை எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் பின்தொடர்ந்து செல்வதை இந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது. கடந்த ஒரு சில நாட்களாக வாகனங்களில் வலம் வரும் நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வந்த சிலர் மீதும் கூட போலீசார் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி பேரனுடன் விளையாடிய அரசியல்வாதி மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2020, 12:25 [IST]
English summary
Karnataka MLA Violates Covid-19 Lockdown: Uses Empty Roads To Play With Grandson - Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+