முன்னாள் முதல்வரின் மகனா இது? அப்பா விட்ட இடத்தை அப்படியே தொடர்கிறார்!!
அரசியல் என்றால் கத்தி மேல் நடப்பது போன்றது... எப்போது பதவி பறிப்போகும் என்றே சொல்ல முடியாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் உண்மையில், மக்களுக்கு நல்லது செய்தாலே தானாக எல்லாமே கிடைக்கும். பிரச்சாரங்கள் கூட பெரியதாக செய்ய வேண்டியதில்லை; தானாக ஓட்டுவந்து விழும். இதனை சில அரசியல்வாதிகள் மட்டுமே புரிந்து வைத்துள்ளனர். அத்தகையவர்கள் ஒரு அரசியல்வாதியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். யார் அவர்? அப்படி அவர் என்ன செய்தார்? வாருங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 3-சக்கர வாகனங்களை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் பழக்கம் கடந்த பல வருடங்களாகவே நம் அரசியல்வாதிகளிடத்தில் உள்ளது. இதன் அடிப்படை நோக்கம், மக்களை கவர்வதுதான் என்றாலும், இப்படியாவது சில மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது நல்ல விஷயமே.

அந்த வகையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3-சக்கர வாகனங்களை வழங்கியிருக்கும் அரசியல்வாதியின் பெயர் பி.ஒய் ராகவேந்திரா ஆகும்; கர்நாடக அரசியல்வாதி. இவர் வேறு யாருமில்லை, முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பாவின் மகன் ஆவார். பாஜக கட்சியை சேர்ந்தவரான பி.ஒய் ராகவேந்திரா கர்நாடகாவின் சிவமோகா நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
கர்நாடக அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவந்த பி.எஸ் எடியூரப்பா கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு அரசியலில் இருந்து சற்று விலகியிருக்கும் நிலையில், அவரது இடத்தில் பி.ஒய்.ராகவேந்திரா உள்ளார். இதனால், எப்போதும் பிசியாக இருக்கக்கூடிய அரசியல்வாதி இவர் எனலாம். இருப்பினும், அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என இவருக்கு தோன்றியுள்ளது.

இதன்படி, சிவமோகா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 மாற்றுத்திறனாளிகளுக்கு 3-சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 7 வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருக்க, எம்பி பி.ஒய் ராகவேந்திரா ரிப்பன் கட் செய்து அவர்களது வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட படங்கள் பி.ஒய் ராகவேந்திராவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே மாதிரியாக அனைவருக்கும் கருப்பு நிறத்தில் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 3-சக்கர வாகனங்கள் அடிப்படையில் 2-சக்கரங்களை கொண்ட ஹீரோ பிளஷர்+ (Hero Pleasure Plus) ஸ்கூட்டர்களாகும். பின் சக்கரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் சிறிய அளவில் 2 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால், ஸ்கூட்டரை ஓட்டும்போது ஆட்டோமேட்டிக்காக பேலன்ஸ் கிடைக்கும். ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிளஷர்+ மற்றும் பிளஷர்+ எக்ஸ்டெக் என 2 விதமான ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் எந்த மாடல் தற்போது எம்பி பி.ஒய் ராகவேந்திராவால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.
பிளஷர்+ மற்றும் பிளஷர்+ எக்ஸ்டெக் என இரண்டிலும் ஒரே மாதிரியாக 110.9சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8 பிஎச்பி மற்றும் 8.7 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஹீரோ ஸ்கூட்டரின் எடை வெறும் 101 கிலோ மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து இவ்வாறான உதவிகள் கிடைப்பது அவர்களது வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்யும். அதேநேரம், எம்பி பி.ஒய் ராகவேந்திராவுக்கும் விளம்பரமாக அமைந்து அவரது அரசியல் பயணத்திற்கு உதவும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஹீரோ பிளஷர்+ ஆனது தரமான 110சிசி ஸ்கூட்டர் என்பது மட்டுமின்றி, சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட மாடர்ன் ஸ்கூட்டர் ஆகும்.


Click it and Unblock the Notifications









