இலவசமாக பஸ் டிக்கெட் கொடுத்தால் இப்படித்தான்!! பேருந்துக்குள் மோதி கொண்ட பெண்கள் - வைரல் வீடியோ!!
இலவச பேருந்தில் இருக்கையை பிடிப்பதற்காக மகளிர் சிலரிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு, இறுதியில் கைகலப்பில் சென்று முடிந்துள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூரில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.
இலவசங்கள் தான் மக்களை கெடுப்பதாக நமது பாரத பிரதமர் உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இலவசங்கள் மக்களை சோம்பேறியாக மாற்றுவது மட்டுமின்றி, மக்களிடையே சண்டைகளையும் உருவாக்குகின்றன. இதற்கு உதாரணங்களாக பல்வேறு சம்பவங்களை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில், கர்நாடகா மாநிலத்தின் கலாச்சார தலைநகராக விளங்கும் மைசூரில் பேருந்தில் இருக்கையை பிடிப்பதில் பெண்கள் சிலரிடையே மோதல் உருவாகியுள்ளது. KSRTC பேருந்துக்குள் அவ்வளவு நெரிசல்களுக்கு மத்தியில் நடந்துள்ள இந்த பெண்கள் சண்டையை பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சண்டைக்கு முக்கிய காரணம் அமர்ந்து பயணிக்க இருக்கையை பிடிப்பதுதான் என்றாலும், இந்த சண்டையை உருவாக்கி இருப்பது என்னவோ பெண்களுக்கான இலவச பேருந்து என்ற திட்டமாகும்.
நமது தமிழகத்தை போல், கர்நாடகாவிலும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்கிற திட்டம் 'சக்தி திட்டம்' என்கிற பெயரில் செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த வாக்குறுதியை முன்னிலைப்படுத்தி போட்டியிட்டு வெற்றி பெற்றே காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளது. இதன் காரணமாக, கர்நாடகாவில் சமீப வாரங்களாக, பேருந்தில் இருக்கையை பெறுவதில் மகளிருக்கு இடையே மோதல் சம்பவங்களை அதிகளவில் பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் இந்த சம்பவம் மைசூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சாமுண்டி மலைப்பகுதிக்கு செல்லும் பேருந்துக்குள் நடந்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சாமுண்டி மலைப்பகுதிக்கு செல்லும் பேருந்து மைசூர் நகர பேருந்து டிப்போவில் வந்து நின்றவுடன் அதில் இருக்கையை பிடிப்பதற்காக பெண் ஒருவர் தனது கைக்குட்டியை ஜன்னல் ஓரமாக இருந்த இருக்கையில் போட்டுள்ளார்.
அதன்பின் அந்த பெண் எப்படியோ முட்டி மோதி தான் கைக்குட்டையை போட்ட இருக்கையை நோக்கி வந்துள்ளார். ஆனால் அந்த இருக்கைக்கு அருகே வந்து பார்த்தப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் கைக்குட்டை மூலம் அவர் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த இருக்கையில் வேறொரு பெண் அமர்ந்திருந்துள்ளார். அப்புறம் என்ன... சண்டை ஆரம்பமாகிவிட்டது.
நேரம் ஆக ஆக சண்டை பெரியதாகி கொண்டே போனது. இடையில் வழக்கம்போல் அப்பாவியான ஓர் ஆண் நபர் வந்து சண்டையை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரையும் இழுத்து, பிடித்து ஆட்களோடு ஆட்களாக அடித்துள்ளனர் அந்த பெண்கள். இவ்வளவு அமளி துமளிக்கு இடையே நடத்துனர் எங்கே என்று தேடிப்பார்த்தால், அவர் தனது வழக்கமான டிக்கெட் கொடுக்கும் பணியை அமைதியாக மற்ற பயணிகளிடம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இதில் கருத்து கூற ஒன்றுமே இல்லை. நீங்கள் தினந்தோறும் பேருந்தில் பணிக்கு சென்று வருகிறீர்கள் என்றால், வாரத்திற்கு இவ்வாறு ஒரு சண்டையை பார்த்துவிடலாம். இலவச பேருந்து டிக்கெட் என்ற திட்டம் அறிமுகமான பின்பு இவ்வாறான மகளிர் சண்டை பேருந்துகளில் அதிகமாகிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவையே, இருப்பினும் நம் மாநிலத்தில் இவ்வாறான சண்டையை இன்னும் பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications








