பஸ் முன்னாடி டிரைவர்களின் காதை வலுக்கட்டாயமாக வைக்கசெய்த டிராஃபிக் போலீஸ்! இனியாவது திருந்துவாங்களானு பாப்போம்
வாகனங்களினால் காற்று மாசடைவதை பற்றி மட்டுமே நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றோம். அவை மிகப் பெரிய அளவில் ஒலியையும் மாசுப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மில் பெரும்பாலும் யாரும் யோசிப்பதில்லை. குறிப்பாக, ஒரு சில வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தும் அதிக ஒலியை எழுப்பும் ஹாரன்கள் மிகப் பெரிய அளவில் ஒலியை மாசுப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பலரின் கேட்கும் திறனையும் அவை பாதிக்கின்றன. அத்தகைய அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களையே வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களின் வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
மிக முக்கியமாக பேருந்துகள், லாரிகள் மற்றும் மினி பஸ்கள் உள்ளிட்டவற்றில் காதையே கிழிக்கின்றன மாதிரியான ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய ஹாரன்களைக் கொண்டிருந்த வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டி இருக்கின்றது காவல்தூறை. இணையத்தில் தற்போது ஓர் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வீடியோவில் பேருந்துகளில் இருந்து டிரைவர்களை கீழே இருக்கும் போக்குவரத்து காவலர் ஒருவர், அந்த டிரைவர்களை பேருந்தின் முன் பக்கத்தில் அமர சொல்கின்றனர். பின்னர், பேருந்தின் ஹாரனை தொடர்ச்சியாக ஒலிக்கச் செய்கின்றார். அதிக சத்தத்தைத் தாங்க முடியாத ஓட்டுநர்கள் சாடரென எழுந்து தள்ளி போகுவதை நம்மால் காண முடிகின்றது.
இதை உணர வேண்டியே அந்த போக்குவரத்து காவலர் இவ்வாறு செய்திருக்கின்றார். உண்மையிலேயே மிக மோசமான ஹாரன்களையே நம்ம ஊரில் இருக்கும் பெரும்பாலான பேருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய பேருந்துகள் அருகில் வந்து ஹாரன்களை அடிக்கும்போது கொஞ்சம் நேரத்திற்கு காதே கேட்காமல் போகக் கூடும்.
அதுமட்டுமல்ல, திடீரென அதிக சத்தத்துடன் அருகில் வந்து இந்த ஹாரன்களை ஒலிக்கச் செய்யும்போது மிகப் பெரிய பதற்றத்தையும், அதிர்ச்சியையும் இந்த வகை ஹாரன்கள் ஏற்படுத்தக் கூடும். இதனால்தான் அதிக ஒலி கொண்ட ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகின்றது. இருப்பினும், ஒரு சில வாகன உரிமையாளர்கள் மிக அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாதிரியான ஹாரன்களை கடந்த காலங்களில் அழிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த நிலையிலேயே, உரிய பாடம் புகட்ட வேண்டும் என்கிற நோக்கில் இப்போது ஓட்டுநர்களை முன்னால் நிற்க செய்து ஹாரன்களை போலீஸார் அடித்து காட்டியிருக்கின்றனர். இது அவர்களுக்கு சிறந்த பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரும் நாட்களில் இதுமாதிரியான செயல்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்றும் கருதப்படுகின்றது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 119 இன்கீழ் அனைத்து வாகனங்களிலும் ஹாரன்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவே இது கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், இந்த ஹாரன்கள் மிக அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான அளவீடுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 பிரிவு 119 (2) இன்படி, மோட்டார் வாகனங்களில் 93 டெசிபலுக்கு அதிகமான ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது என்பது விதியாகும்.
இடத்திற்கு இடம் இது மாறுபடும். அந்தவகையில், குடியிருப்புகளில் பகல் நேரங்களில் 55 டெசிபல் முதல் 65 டெசிபல் அளவிலேயே வாகனங்களில் ஹாரன் சத்தம் ஒலிக்க வேண்டும். அதுவே, இரவு நேரமாக இருப்பின் 45 டெசிபல் முதல் 55 டெசிபலாக குறைக்க வேண்டும் என்பதும் விதியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது உள்ள பெரும்பாலான வாகனங்களில் அரசு குறிப்பிட்ட அளவைவிட அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலைக் கருத்தில் கொண்டே சற்றே அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








