ஜாவா பைக் வாங்கிய சந்தோஷத்தில் இளம்பெண் செய்த காரியம் இதுதான்... வாயை பிளந்து பார்த்த மக்கள்...
ஜாவா பைக் வாங்கிய சந்தோஷத்தில் இளம்பெண் ஒருவர் செய்த காரியம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நம் அனைவருக்கும் கனவு வாகனம் என ஒன்று நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ராயல் என்பீல்டு பைக் கனவு வாகனமாக இருக்கலாம். சிலருக்கோ ஜாவா பைக் கனவு வாகனமாக இருக்கலாம். மிகவும் நேசிக்கும் அந்த வாகனத்தை எப்படியாவது வாங்கி ஓட்ட வேண்டும் என்ற லட்சியம் பலருக்கும் இருக்கிறது. அப்படி மிகவும் விரும்பிய வாகனத்தை டெலிவரி எடுக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது.

அந்த அனுபவத்தை நிச்சயமாக வேறு எதனுடனும் ஒப்பிடவே முடியாது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைத்துள்ளது. புதிய ஜாவா 42 (Jawa 42) பைக்கை அவர் டெலிவரி எடுத்துள்ளார். இந்த சந்தோஷத்தில் அவர் நடனம் ஆட, அங்கிருந்தவர்கள் அதனை ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.

நந்தினி என்ற பெண் ரைடர்தான் ஜாவா 42 பைக்கை டெலிவரி எடுத்துள்ளார். இந்த விஷயத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின்படி, கடந்த ஜனவரி 7ம் தேதி அவர் பைக்கை 'புக்' செய்துள்ளார். ஆனால் அந்த மாதம் 21ம் தேதியே அவருக்கு பைக் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

ஏனெனில் ஜாவா பைக்குகளை டெலிவரி செய்வதில் ஏற்பட்ட குழப்பங்களை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டி கொண்டு முன்பதிவு செய்தனர். ஆனால் அந்த வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை டெலிவரி கொடுப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டன.

இதனால் பலர் முன்பதிவை ரத்து செய்து, அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மாடல்களின் உற்பத்தியை அதிகரிப்பதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்தியாவில் ஜாவா பிராண்டின் உரிமையாளர் கிளாசிக் லெஜண்ட்ஸ்தான். இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், நந்தினி இவ்வளவு விரைவாக பைக்கை டெலிவரி பெற்றிருப்பது ஆச்சரியமாகதான் உள்ளது.

அவர் வாங்கியுள்ள ஜாவா 42 பைக், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுடன் போட்டி போட்டு வருகிறது. இது ஜாவா பிராண்டில் இருந்து வரும் எண்ட்ரி லெவல் பைக் ஆகும். ஜாவா 42 பைக்கின் ஆரம்ப விலை 1.55 லட்ச ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த மோட்டார்சைக்கிளில், 293 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இது ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டத்தையும் பெற்றுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் நேருக்கு நேராக போட்டியிட்டு வரும் ஜாவா நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஜாவா நிறுவனம் தற்போதைய நிலையில் ஜாவா, ஜாவா 42 ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

இதுதவிர சக்தி வாய்ந்த ஜாவா பைக்கான பெராக், 1.94 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் டெலிவரி இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த மோட்டார்சைக்கிளில், 334 சிசி, நான்கு ஸ்ட்ரோக், ப்யூயல் இன்ஜெக்ஸன், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த பைக்கின் டெலிவரி வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகளை ஜாவா ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








