மணப்பெண் அலங்காரத்தில் 8 கோடி ரூபாய் காரில் வந்திறங்கிய கோ பட நடிகை! இவங்க இப்படி மாறிட்டாங்களா?

நடிகை கார்த்திகா தனது திருமணத்திற்காக ரூபாய் 8 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமா திரை உலகில் பலர் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வைத்திருக்கும் நிலையில் தற்போது நடிகை ராதாவின் குடும்பத்தினரும் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருந்தவர் ராதா ஒரு காலத்தில் தமிழ் சினிமா படங்களில் பெரும்பாலான படங்களில் இவர் நடித்த வந்துள்ளார் இவரது மகள்தான் கார்த்திகா இவர் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நடிகர் ஜீவா நடித்த கோ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கும் ரோஹித் மேனன் என்பவருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது.

karthika nair marriage

திருமணத்தில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உள்ள டாப் நடிகர்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் நடந்த கிராண்டான திருமணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இந்த திருமண விழாவிற்கு மணப்பெண் நடிகை கார்த்திகா வரும்போது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வந்து இறங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலும் மிகப்பெரிய நடிகர்கள் பலர் சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருப்பார்கள். இது நமக்கு தெரியும் இப்படியாக நடிகை ராதா குடும்பத்திலும் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது.

karthika nair marriage

எந்த ரோல்ஸ்ராய்ஸ் காரில் தான் இவர் தனது திருமணத்திற்கு வந்து இறங்கினார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பொருத்தவரை வெளிநாட்டில் தயார் செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கோஸ்ட் காரை பொறுத்தவரை 6.75லி டிவின் டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இது 571பிஎஸ் பவரையும் 850என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 8ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.8 நொடியிலும் அதிகபட்ச வேகமாக 250 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் முக்கியமாக டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 1300 வாட்ஸ் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, இலுமினேட்டர் டேஷ்போர்டு மற்றும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

karthika nair marriage

இந்த காரின் டாப் வேரியன்ட் தற்போது இந்தியாவில் ரூபாய் 7.95 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாகவே இந்த காரை பெரும் பிரபலங்கள் பணக்காரர்கள் பெரும் வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்த காரை எல்லாம் சாலையில் பார்ப்பதே மிகப்பெரிய வரம் தான். சாதாரண மக்களுக்கு இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணிப்பது என்பது மிகப் பெரிய கனவு தான்.

இந்த காரில் தான் நடிகை கார்த்திகா தனது திருமணத்திற்காக வந்து இறங்கினார். இவர் இந்த காரில் வந்திறங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமல்ல இவர் திருமணத்திற்கு வந்த பல முக்கியமான திரை பிரபலங்களும் பல சொகுசுத்தார்களில் வந்தனர். தெலுங்கு சினிமா உலகில் இருந்து நடிகர் சிரஞ்சீவி, ஹிந்தி சினிமாவில் இருந்து நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தமிழ் சினிமாவிலும் பலர் வைத்திருக்கிறார்கள் குறிப்பாக நடிகர் விஜய் இந்த காரை சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் இந்த காரில் பீஸ்ட் பட படபிடிப்பின் போது இந்த காரில் சென்று தனது சக நடிகர்களுடன் ஒரு ரவுண்டு சென்ற வீடியோ எல்லாம் அப்பொழுது வெளியாகி வைரலாக பரவியது. தற்போது அதற்கு அடுத்ததாக இந்த வீடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்ராய்ஸ் கார் விலை அதிகம் என்பதாலேயே சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கும் காராக இருக்கிறது. இந்த காரை வைத்திருக்கும் ஒருவன் நிச்சயம் பிரபலமான நபராக இருப்பார் .அவர் சினிமா ரீதியில் ஆகவோ அல்லது தொழில் ரீதியில் ஆகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் பிரபலமான நபராக இருப்பார் என்று இதன் மூலம் தெரிகிறது.

Article Published On: Wednesday, November 22, 2023, 17:12 [IST]
English summary
Karthika nair marriage rolls royce ghost watch video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X