வீடு நிறைய பைக் இருந்தும் அவற்றை ஓட்டாமல் தவிர்க்கும் பிரபலம்.. அம்மானா இவருக்கும் பயம் போலையே!
பாலிவுட் திரை உலகின் நட்சத்திர நடிகர்களில் கார்த்திக் ஆர்யன்-ம் ஒருவர் ஆவார். இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார் (Luxury Car) மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆடம்பர கார்கள் மட்டுமல்ல ஆடம்பர (Premium) வகை பைக்குகளும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் சொகுசு கார்களை போலவே பைக்குகளிலும் வலம் வந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் அரங்கேறி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அவர் முற்றிலும் டூ-வீலர்களை பயன்படுத்துவதையே கை விட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பைக் ஓட்ட தெரியாமலோ அல்லது பயத்தினாலோ பைக் ஓட்டுவதைக் கைவிட்டிருக்கலாம் என நினைததுக் கொள்ள வேண்டாம். மேலும், அவருக்கு பைக் ஓட்டவும் பிடிக்காமல் இல்லை. இருந்தும் அவற்றை பயன்படுத்துவதை அவர் விட்டிருக்கின்றார். தன்னுடைய அம்மா கேட்டுக் கொண்ட காரணத்தினாலேயே அவர் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதை விட்டிருக்கின்றார்.

அதிக வேகமாக வாகனம் ஓட்டும் பழக்கம் கொண்டவர் ஆர்யன் என்பதால், அவர் அசம்பாவிதத்தில் சிக்கிவிடக் கூடாது என்கிற எண்ணத்திலேயே பைக்கை ஓட்ட வேண்டாம் என அவர் தடுத்திருக்கின்றார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்ததன் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது.
இதுதவிர அவருக்கு மது குடிப்பதும் பிடிக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், அவருடைய வாழ்நாளில் இதுவரை மதுவை அருந்தியதே இல்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்த தகவலுடன் சேர்த்தே தான் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவதையே விட்டுவிட்டேன் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளையில், தன்னிடத்தில் ராயல் என்பீல்டு மற்றும் டுகாட்டி போன்ற முன்னணி நிறுவனங்களின் விலை உயர்ந்த பைக்குகள் இருப்பதையும் அவர் உறுதிச் செய்திருக்கின்றார். ஆனால், அவை அனைத்தும் அப்படியே இருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். தற்போது கோடிகளில் புரளும் இந்த நடிகர் ஒரு காலத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
தன்னுடைய கடந்த கால கஷப்பான வாழ்க்கை பற்றியும் அவர் பகிர்ந்திருக்கின்றார். குறிப்பாக, தன்னுடைய முதல் கார் மாடல் டொயோட்டா கொரல்லா என்றும், அவரே அந்த காரின் மூன்றாவது உரிமையாளர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு பிரச்னைகளைக் கொண்ட அந்த காரையே நீண்ட காலமாக தன்னுடைய தேவைகளை பூர்த்திச் செய்வதற்காக நடிகர் பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
சொல்லப்போனால் டிரைவர் பக்க டோர் சரியாக வேலை செய்யாதாம். ஆகையால், டிரைவர் பக்கமாக இல்லாமல் பயணிகள் பக்கமே இறங்குவாராம். மேலும், அந்த காரை அவர் வெறும் 40 ஆயிரம் கொடுத்தே வாங்கி இருக்கின்றார். ஆனால், இப்போது கார்த்திக் ஆர்யன் இடத்தில் இல்லாதே கார் மாடலே இருக்க முடியாது என கூறலாம்.
அந்த அளவிற்கு பலதரப்பட்ட சொகுசு கார் மாடல்களை அவர் பயன்டுத்தி வருகின்றார். உதராணமாக லம்போர்கினி உருஸ் கார் மாடலையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், அதிக வேகத்தில் செல்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவன் தான் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதற்காக பலமுறை அவர் அபராத செல்லாண்களைப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதற்காக வீட்டில் அவர் திட்டும் வாங்கி இருக்கின்றாராம். இந்த தகவல்களையே சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கான பேட்டியின் வாயிலாக கார்த்திக் ஆர்யன் கூறியிருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை உயர்ந்த மற்றும் அரிய வகை வாகனங்களை பயன்படுத்தும் நபர்களில் நடிகர் கார்த்திக் ஆர்யன்-ம் ஒருவர் ஆவார். இவரிடத்தில் மெக்லாரன், லம்போர்கினி உருஸ் எஸ்யூவி என பல்வேறு சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்து.


Click it and Unblock the Notifications








