பணம் கொட்டுது போல... புதுசா இன்னும் எத்தனை காரை தான் வாங்குவாரோ!! நாயுடன் படுத்திருக்கும் பிரபல நடிகர் அவரா?
இவரிடம் இல்லாத கார் & பைக் என்ன தான் இருக்கு? என கேட்க தோன்றும் அளவிற்கு பிரபல நடிகர் ஒருவர் மீண்டும் ஒரு லக்சரி காரை வாங்கி உள்ளார். யார் இந்த பிரபல நடிகர்? எந்த காரை அவர் வாங்கியுள்ளார்? அது ஏன் கொஞ்சம் ஸ்பெஷலானது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். 'பூல் பூலையா' இவரது நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் ஆகும். பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்துவரும் கார்த்திக் ஆர்யன் சொகுசு வாழ்க்கையில் திளைத்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக்குகள் இவரிடம் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் வைத்து தனியாக ஒரு ஷோரூமே வைத்து விடலாம், அந்த அளவிற்கு சமீப காலத்தில் நிறைய வாகனங்களை கார்த்திக் ஆர்யன் வாங்கியுள்ளார். அந்த வாகனங்களில் பொது இடங்களுக்கு வரும்போது கார்த்திக் ஆர்யனுடன் சேர்த்து, அவரது மாடர்ன் லக்சரி வாகனங்களும் வைரலாகி விடுகின்றன. இந்த நிலையில், கார்த்திக் ஆர்யனின் லக்சரி கார்கள் கேரேஜில் புதியதாக ஒரு ரேஞ்ச் ரோவர் வாகனம் இணைந்துள்ளது.
பொதுவாகவே, சினிமா ஸ்டார்கள் மத்தியில் ரேஞ்ச் ரோவர் வாகனங்கள் பிரபலமானவைகளாக உள்ளன. குறிப்பாக, பாலிவுட்டில் யார் யாரிடம் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன என்று தனியாக ஒரு லிஸ்ட் கூட போட்டுள்ளோம். ரேஞ்ச் ரோவர் கார்கள் பல்வேறு விதமான ரேஞ்ச்களில் விலைகளை கொண்டுள்ளன. அதாவது, ஒரு சில ரேஞ்ச் ரோவர் கார்கள் பல இலட்சங்களில் கிடைக்கின்றன, அதேநேரம் சில கார்கள் சில கோடிகளை கொடுத்தால்தான் கிடைக்கக் கூடியவைகளாக உள்ளன.

33 வயதான பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் வாங்கியிருப்பது சில கோடிகளில் விலையை கொண்ட விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரை ஆகும். ரேஞ்ச் ரோவர் கார்களிலேயே அல்ட்ரா-லக்சரி மாடலாக எஸ்வி உள்ளது. ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.85 கோடியில் இருந்து ரூ.4.17 கோடி வரையில் உள்ளன. ஆன்-ரோடு விலைகள் இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும்.
இவ்வளவு விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி இருப்பதை கார்த்திக் ஆர்யன் புகைப்படம் ஒன்றின் மூலம் அவரது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த படத்தில், புதியதாக வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரின் பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியில் ஆர்யன் அவரது வளர்ப்பு நாயுடன் சிரித்தப்படி படுத்துள்ளார். நடிகர் கார்த்திக் ஆர்யன் வாங்கியிருக்கும் கார் விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் மட்டுமல்ல, ஆற்றல்மிக்க ரேஞ்ச் ரோவரும் கூட.
லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரை கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த காரின் பெயரில் உள்ள 'எஸ்வி' (SV) என்பது ஸ்பெஷல் வைகல் என்பதை குறிக்கிறது. இத்தகைய ரேஞ்ச் ரோவர் காரை லாங்-வீல்பேஸ் வெர்சனில் கார்த்தி ஆர்யன் வாங்கியுள்ளார். அதாவது, இந்த காரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, காரின் நீளமும் அதிகம்.
ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரில் 21 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இதனை விருப்பப்பட்டால், 22-இன்ச் அல்லது 23-இன்ச் ஆக கூட அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரை நடிகர் கார்த்திக் ஆர்யன் வாங்கியுள்ளார். இவரது காரில் 4.4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் போன்ற மிக பெரிய சினிமா துறையில் நடிகராகி விட்டாலே சொகுசு கார்கள் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. இன்னும் சொல்லப் போனால், இவ்வாறு விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்கி அவ்வப்போது செய்திகளில் தலையை காட்டினால்தான் ரசிகர்கள் எப்போது முகத்தை நினைவில் வைத்திருப்பவர். கார்த்திக் ஆர்யன் போன்ற முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் இன்னும் அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications









