சிஎம் வந்தா கூட இவ்ளோ கூட்டம் கூடாது! கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கார்ல ஏறுனது அவரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. அதாவது அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என்று பலதரப்பட்ட வாடிக்கையாளர்களும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரை வைத்துள்ளனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.78 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 51.94 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும்.

Kartik Aaryan Spotted In Humble Toyota Fortuner

இதில், 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 163.60 பிஹெச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 201.15 பிஹெச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் 4X2 பெட்ரோல்/மேனுவல், 4X2 பெட்ரோல்/ஆட்டோமேட்டிக், 4X2 டீசல்/மேனுவல் மற்றும் 4X4 டீசல்/ஐஎம்டி வேரியண்ட்களின் பவர் அவுட்புட் ஆகும். மறுபக்கம் 4X2 டீசல்/ஆட்டோமேட்டிக், 4X4 டீசல்/ஆட்டோமேட்டிக் மற்றும் GR S 4X4 டீசல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் 201.15 பிஹெச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளன.

Kartik Aaryan In Crowd

இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார், இந்தியாவின் சாமானிய மக்களை பொறுத்தவரையில் கொஞ்சம் விலை உயர்ந்த ஒன்றுதான். ஆனால் கோடிகளில் சம்பளம் பெறும் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில் உண்மையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் மிகவும் எளிமையான ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஆமிர் கான் (Aamir Khan), மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மற்றும் ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) போன்ற திரையுலக நடிகர், நடிகைகள் பலரிடமும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உள்ளது. இவர்கள் மூவரையும் கடந்த காலங்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் அடிக்கடி பார்க்க முடிந்துள்ளது.

இந்த வரிசையில் மற்றொரு நடிகர் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் அவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஏறுவதை இந்த வைரல் வீடியோவில் நாம் காணலாம்.

இந்த வைரல் வீடியோவில் நாம் காணும் நபர், பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) ஆவார். ரசிகர்கள் மத்தியில் இவர் எவ்வளவு புகழ் பெற்றவர் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இந்த வைரல் வீடியோவில் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தாலே அது உங்களுக்கு புரிந்து விடும்.

ஆனால் இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர், நடிகர் கார்த்திக் ஆர்யனின் சொந்த காரா? என்பது உறுதியாக தெரியவில்லை. உண்மையில் கார்த்திக் ஆர்யனிடம் ஏராளமான கார்கள் உள்ளன. அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) உள்ள முக்கியமான கார்களை மட்டும் நாங்கள் இங்கே குறிப்பிடுகிறோம்.

ரேஞ்ச் ரோவர் எஸ்வி (Range Rover SV), மெக்லாரன் ஜிடி (McLaren GT), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), போர்ஷே 718 பாக்ஸ்டர் (Porsche 718 Boxster), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் மினி கூப்பர் எஸ் கன்வெர்டபிள் (Mini Cooper S Convertible) போன்றவை எல்லாம் கார்த்திக் ஆர்யனிடம் உள்ள குறிப்பிடத்தகுந்த கார்கள் ஆகும்.

ஆனால் அவரிடம் டொயோட்டா ஃபார்ச்சூனர் இருப்பதாக தகவல்கள் இல்லை. எனவேதான் இது கார்த்திக் ஆர்யனின் சொந்த காரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அனேகமாக ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம். அப்போது நிகழ்ச்சி ஏற்பட்டாளார்களால் வழங்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் அவர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார்த்திக் ஆர்யன் தீவிரமான கார் ஆர்வலர் ஆவார். அவரது விலை உயர்ந்த கார் கலெக்ஸனை பார்த்தாலே இது புரிந்து விடும். செயல்திறன் மிக்க கார்களை அதிகளவில் வைத்துள்ள நடிகர் கார்த்திக் ஆர்யன், டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற எளிமையான கார்களில் பயணம் செய்வது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 17:33 [IST]
English summary
Kartik aaryan spotted in humble toyota fortuner suv viral video full details
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+