எல்லாமே கருப்பு! 5 கோடி ரூபாய் காரில் வந்துட்டு போனது அவரா! உத்து பாத்ததும் ஆச்சரியத்தில் உறைந்து போன மக்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலர் சொந்தமாக வைத்துள்ளனர்.

இதில், கார்த்திக் ஆர்யனும் (Kartik Aaryan) ஒருவர். இவர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஆவார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதமே, லம்போர்கினி உருஸ் காரை கார்த்திக் ஆர்யன் டெலிவரி எடுத்து விட்டார். அப்போதில் இருந்து முக்கியமான இடங்களுக்கு எல்லாம் லம்போர்கினி உருஸ் காரில்தான் கார்த்திக் ஆர்யன் சென்று வருகிறார்.

Kartik Aaryan Spotted In Lamborghini Urus SUV

இந்த வரிசையில் மும்பை (Mumbai) நகரில் உள்ள அலுவலகம் ஒன்றுக்கு தற்போது லம்போர்கினி உருஸ் காரில் கார்த்திக் ஆர்யன் வந்து சென்றுள்ளார். யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோவை (Viral Video), இந்த செய்தியின் இறுதியில் நீங்கள் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லம்போர்கினி உருஸ் காரின் ஆரம்ப விலையே (Price) 4.18 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4.22 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Kartik Aaryan Spotted In Lamborghini Urus

ஆன் ரோடு விலை தோராயமாக 5 கோடி ரூபாய் வரும். இது விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, திரையுலகினர் பலர் லம்போர்கினி உருஸ் காரை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். திரையுலகினர் மட்டுமல்லாது, தொழில் அதிபர்கள் (Businessman) மற்றும் கிரிக்கெட் வீரர்கள் (Cricket Players) போன்றோரும் கூட லம்போர்கினி உருஸ் கார் மீது காதல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதில், ஜூனியர் என்டிஆர் (Junior NTR), ரன்வீர் சிங் (Ranveer Singh), ஆகாஷ் அம்பானி (Akash Ambani) மற்றும் ரோகித் ஷர்மா (Rohit Sharma) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். கார்த்திக் ஆர்யனை பொறுத்தவரையில், லம்போர்கினி உருஸ் தவிர இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

இதில் மெக்லாரன் ஜிடி (McLaren GT) மிகவும் முக்கியமானது ஆகும். இது சூப்பர் கார் (Supercar) வகையை சேர்ந்தது. திரைப்பட தயாரிப்பாளரான பூஷன் குமார்தான் (Bhushan Kumar) இந்த காரை, நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு பரிசாக வழங்கினார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெக்லாரன் ஜிடி காரின் விலை 4.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லம்போர்கினி உருஸ் கார், இந்திய சந்தையில் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதும் இந்த காரின் பிரபலத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் லம்போர்கினி உருஸ் காரை வைத்திருப்பது, ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!

இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கார்த்திக் ஆர்யனின் லம்போர்கினி உருஸ் கார் கருப்பு (Black) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேட்ச் ஆக அவர் அணிந்திருந்த பேண்ட், டீ-ஷர்ட், வாட்ச், க்ளாஸ், ஷூ என அனைத்துமே கருப்பு கலரில்தான் இருந்தது. கார்த்திக் ஆர்யனுக்கு விருப்பமான கலர்களில் ஒன்றாக கருப்பு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 23, 2023, 14:21 [IST]
English summary
Kartik aaryan spotted in lamborghini urus viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+