மெட்ரோவில் கூட்டத்தோடு கூட்டமா வந்தது அவரா! அடையாளம் தெரியாத அளவுக்கு வந்தும் கூட மக்கள் கண்டுபிடிச்சுட்டாங்க!
இந்திய சாலைகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே மெட்ரோ ரயில்களில் (Metro Trains) பயணம் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் (Bollywood Celebrities) இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), அக்ஸய் குமார் (Akshay Kumar), ஹேமமாலினி (Hema Malini), அனில் கபூர் (Anil Kapoor), கியாரா அத்வானி (Kiara Advani), வருண் தவான் (Varun Dhawan) போன்ற பாலிவுட் பிரபலங்கள்,கடந்த காலங்களில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது மற்றொரு பிரபலம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) ஆவார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள கார்த்திக் ஆர்யன், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

கார்த்திக் ஆர்யன் மாஸ்க் அணிந்து கொண்டு, மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அவர் மாஸ்க் அணிந்திருக்கலாம். ஆனால் மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகள் எப்படியோ கார்த்திக் ஆர்யனை அடையாளம் கண்டு கொண்டனர். எனவே செல்போனை எடுத்து கொண்டு நேராக கார்த்திக் ஆர்யனிடம் சென்றனர்.
கார்த்திக் ஆர்யனும் அவர்களது விருப்பத்திற்கு 'நோ' சொல்லவில்லை. பயணிகளுடன் செல்பி எடுத்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கார்த்திக் ஆர்யனின் மதிப்பை உயர்த்தியுள்ளது. கார்த்திக் ஆர்யனிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. அவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது.

இதில், மெக்லாரன் ஜிடி (McLaren GT), லம்போர்கினி உருஸ் கேப்சூல் (Lamborghini Urus Capsule), மினி கூப்பர் எஸ் கன்வெர்டபிள் (Mini Cooper S Convertible) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கும்போது, கார்த்திக் ஆர்யன் ஏன் மெட்ரோவில் பயணம் செய்தார்? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். போக்குவரத்து நெரிசல் பிரச்னைதான் இதற்கு காரணம். கார்த்திக் ஆர்யன் பயணம் செய்தது, மும்பை (Mumbai) மெட்ரோ ஆகும். சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற நகரங்களை போல், மும்பையும் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது.
எனவே காரில் சென்றால், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடும். இதன் காரணமாகவே கார்த்திக் ஆர்யன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். நாங்கள் மேலே குறிப்பிட்ட பிரபலங்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ததற்கு காரணமும் கூட போக்குவரத்து நெரிசல்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலை மார்க்கமாக வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தால், நேரத்தை மிச்சப்படுத்தலாம். மெட்ரோ ரயில்களில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் வேகமாக பயணம் செய்ய முடியும். ஏசி போன்ற அதிநவீன வசதிகள் இருப்பது, மெட்ரோ ரயில்களில் கூடுதல் பலம்.
இதன் காரணமாக மெட்ரோ ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களிலும் தற்போது மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் பல்வேறு புதிய நகரங்களிலும் மெட்ரோ ரயில்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications








