18 லட்ச ரூபாய் பைக்கை ரோட்ல சர்வ சாதாரணமா ஓட்டீட்டு வந்தது அவரா! வீடியோவ பாத்ததும் உறைந்து போன மக்கள்!

பாலிவுட் (Bollywood) திரையுலகின் முன்னணி நடிகர்களில் (Actor) ஒருவராக இருப்பவர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan). இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், கார்த்திக் ஆர்யன் பைக் ஓட்டி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவர் ஓட்டி வந்தது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 (Ducati Scrambler 1100) பைக் ஆகும். மும்பை (Mumbai) நகரில் நடைபெற்ற ஒரு சினிமா ஷூட்டிங்கிற்குதான், கார்த்திக் ஆர்யன் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் வந்துள்ளார். இது அவரது சொந்த பைக் ஆகும்.

Kartik Aaryan Spotted Riding Ducati Scrambler 1100

நடப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கை, கார்த்திக் ஆர்யன் வாங்கினார். டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. அவை ப்ரோ, டார்க் ப்ரோ, ட்ரைபுட் ப்ரோ மற்றும் ஸ்போர்ட் ப்ரோ ஆகியவை ஆகும்.

இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டான ப்ரோ வேரியண்ட்டின் விலை (Price) 11.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டார்க் ப்ரோ வேரியண்ட்டின் விலை 12.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் ட்ரைபுட் ப்ரோ 14.10 லட்ச ரூபாயாக உள்ளது. இதில், ஸ்போர்ட் ப்ரோ வேரியண்ட்தான் டாப் வேரியண்ட் ஆகும்.

Kartik Aaryan Riding Ducati Scrambler 1100

இதன் விலை 15.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இங்கே நாங்கள் கடைசியாக கூறியுள்ள ஸ்போர்ட் ப்ரோ வேரியண்ட்டைதான் கார்த்திக் ஆர்யன் வைத்துள்ளார். இதன் ஆன் ரோடு விலை (On Road Price) சுமார் 18 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

கார்த்திக் ஆர்யன் வைத்துள்ள டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில் 1079 சிசி, லிக்யூட் கூல்டு, எல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 85 பிஹெச்பி பவர் மற்றும் 88 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன் பகுதியில் 2 டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில் ஒரு டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக், இந்திய பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இதே பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஷாகித் கபூர் (Shahid Kapoor) கூட, டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கை வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார்த்திக் ஆர்யன் பைக் ஓட்டும்போது பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டியதை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இது சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தி. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை தவிர்க்க வேண்டுமென்றால், கார்த்திக் ஆர்யனை போல் நீங்களும் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 18, 2023, 14:07 [IST]
English summary
Kartik aaryan spotted riding ducati scrambler 1100 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+