சொகுசு கார்களில் வலம் வந்த பிரபல மனிதர்கள்... அவங்களா இது?
பாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் வலம் வருகின்றனர். இந்த சூழலில் 2 பிரபலமான பாலிவுட் நடிகர்கள், மும்பை சாலைகளில், தங்கள் சொகுசு கார்களில் வலம் வந்த நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. கார்த்திக் ஆர்யன் மற்றும் வித்யூத் ஜம்வால் ஆகியோரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.
இதில் கார்த்திக் ஆர்யன் தனது மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) காரில் வலம் வந்துள்ளார். மறுபக்கம் வித்யூத் ஜம்வால் தனது அஸ்டன் மார்ட்டின் டிபி9 (Aston Martin DB9) காரில் வலம் வந்துள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video), யூடியூப் (YouTube) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் முதல் பகுதியில் நடிகர் கார்த்திக் ஆர்யன் கட்டிடம் ஒன்றில் இருந்து வெளியே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அனேகமாக அது 'ஜிம்' என கூறப்படுகிறது. அவர் தனியாக வெளியே வந்த சூழலில், புகைப்படக்காரர்கள் உள்பட பலரும் உடனடியாக அவரை சூழ்ந்து கொண்டனர்.
நாங்கள் ஏற்கனவே கூறியபடி நடிகர் கார்த்திக் ஆர்யன் வந்து சென்றது, மினி கூப்பர் எஸ் ஹாட் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த பச்சை நிற காருக்கு பின்னால் ஆச்சரியமான கதை ஒன்று உள்ளது. தனது அம்மாவிற்கு பரிசளிப்பதற்காக கடந்த 2020ம் ஆண்டு கார்த்திக் ஆர்யன் இந்த காரை வாங்கினார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் கார்த்திக் ஆர்யன்தான் இந்த காரை ஓட்டி கொண்டுள்ளார்.

ஆனால் இந்த முறை கார்த்திக் ஆர்யனின் டிரைவர் உடனிருந்தார். இதற்கிடையே கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றபோது அனைவரையும் வழிவிடும்படியும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கார்த்திக் ஆர்யன் கேட்டு கொண்டார். கார்த்திக் ஆர்யனின் மினி கூப்பர் எஸ் காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 189 பிஹெச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மினி கூப்பர் எஸ் தவிர, லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) மற்றும் மெக்லாரன் ஜிடி (McLaren GT) போன்ற கார்களும், கார்த்திக் ஆர்யனிடம் உள்ளன.
இதற்கிடையே இந்த வீடியோவின் 2வது பகுதியில், ஸ்டூடியோ போன்ற ஒரு கட்டிடத்தில் இருந்து நடிகர் வித்யூத் ஜம்வால் வெளியே வருவதை பார்க்க முடிகிறது. அவரது அஸ்டன் மார்ட்டின் டிபி9 காரில், 6.0 லிட்டர், வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 510 பிஹெச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி மற்றும் அஸ்டன் மார்ட்டின் போன்ற பிரபலமான நிறுவனங்களின் கார்கள் எல்லாம் நமக்கு வேண்டுமானால் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனால் பாலிவுட் நடிகர், நடிகைகள் பெரும்பாலானோருக்கு இவை எல்லாம் மிகவும் சாதாரணமான கார்கள்தான். எனவே இதில் ஆச்சரியப்பட பெரிதாக ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications