என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

விலையுயர்ந்த லம்போர்கினி உருஸ் காரின் பொனெட்டில் வைத்து பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் சாலையோர உணவகத்தின் உணவை சாப்பிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

சொகுசு வாழ்க்கையில் திளைக்கும் திரையுலக நட்சத்திர பிரபலங்கள் அவ்வப்போது தான் எளிய வாழ்க்கையையும் விரும்பக்கூடியவன் என்பதை மக்களுக்கு வெளிக்காட்டும் விதமாக சாலையோர உணவகங்களில் உணவருந்துவதையும், ரசிகர்களுடன் ஒன்றாக திரையரங்குகளில் படம் பார்ப்பதையும் இதற்குமுன் பார்த்திருப்பீர்கள்.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

அவ்வாறு தான் சமீபத்தில் வளர்ந்துவரும் பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யன் தனது விலைமிக்க லம்போர்கினி உருஸ் காரில் சாலையோர உணவகத்திற்கு சென்று உணவருந்தியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலானோரிடம் லம்போர்கினி கார்கள் உள்ளன. நம் கோலிவுட்டிலும் சில நடிகர், நடிகைகள் லம்போர்கினி காரை சொந்தமாக வைத்துள்ளனர்.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

கார்த்திக் ஆர்யன் சில மாதங்களுக்கு முன்பு தான் புத்தம் புதிய லம்போர்கினி உருஸ் காரை வாங்கினர். இதனை பற்றி அப்போது நமது ட்ரைவ்ஸ்பார்க் செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம். ரூ.3.15 கோடி என்ற விலையில் விற்பனை செய்யப்படும் இந்த லம்போர்கினி காரின் முன்பக்க பொனெட்டின் மீது வைத்து கார்த்திக் ஆர்யன் உணவருந்தியுள்ளார்.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

மக்களுடன் மக்களாக இணைந்து, தனது பளபளப்பான கருப்பு நிற லம்போர்கினி உருஸ் காரின் மீது இவர் உணவருந்தும் படங்களும் வீடியோகளும் இணையத்தில் பரவி வருகின்றன. அதேநேரம், அவ்வளவு பெரிய காரில் உள்ளே அமர்ந்து உணவருந்த கூட இடமில்லையா எனவும் சிலர் சமூக வலைத்தள பக்கங்களில் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

லம்போர்கினி உருஸ் போன்ற சொகுசு காருக்குள் நிச்சயம் ஒருவர் அமர்ந்து உணவு உண்ண இடவசதி உள்ளது. பலருக்கு தன்னை நேரில் பார்ப்பதற்கு விருப்பம் இருக்கலாம் என்பதால் இவ்வாறு கார்த்திக் ஆர்யன் காருக்கு வெளியே நின்றவாறு உணவருந்தி இருக்கலாம். அல்லது விளம்பரத்திற்காக கூட இவ்வாறு செய்திருக்கலாம். எப்படியோ கார்த்திக் ஆர்யனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு கிடைத்துள்ளன.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த லம்போர்கினி உருஸ் காரை வாங்கினார். ரூ.3.15 கோடி என்பது இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே. கூடுதல் ஆக்ஸஸரீ தேர்வுகள், இறக்குமதி வரிகள், இன்ஸ்சூரன்ஸ் மற்றும் ஆர்டிஓ பதிவு உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை ஏறக்குறைய ரூ.4.5 கோடியில் வந்து நிற்கும்.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

உலகின் மிக வேகமான எஸ்யூவி மாடலாக விளங்கும் லம்போர்கினி உருஸ், அதேநேரம் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் லம்போர்கினி காராகவும் விளங்குகிறது. உருஸ் எஸ்யூவியில் 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற லம்போர்கினி மாடலாக விளங்கும் உருஸில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடலாம். உருஸின் டாப் ஸ்பீடு 305kmph ஆகும். லம்போர்கினி நிறுவனம் சமீபத்தில் தான் அதன் உருஸ் மாடலின் புதிய கிராஃபைட் கேப்சூல் எடிசனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

அடர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உருஸ் ஸ்பெஷல் எடிசனை சுற்றிலும் கீழ்பகுதிகளில் ஆரஞ்ச் நிற ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்த பெயிண்ட் தான் புதிய உருஸ் கிராஃபைட் கேப்சூல் எடிசனின் முக்கிய அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பளபளப்பான கருப்பு நிறத்தில் 23-இன்ச் மல்டி ஸ்போக் அலாய் சக்கரங்களின் மூலம் இந்த உருஸ் மாடல் இயங்குகிறது.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

பின்பக்கத்தில், மைய பகுதியில் லம்போர்கினி என எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலே ஆரஞ்ச் நிறத்தில் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் எலக்ட்ரானிக் டெயில்கேட் வசதியையும் இந்த புதிய லம்போர்கினி உருஸ் கார் பெற்று வந்துள்ளது. அதேபோல் உட்புற கேபினும் கருப்பு-ஆரஞ்ச் நிற அலங்கரிப்புடன் கவனத்தை ஈர்க்கிறது.

என்ன ஒரு எளிமையான மனிதர்!! சாலையோர உணவை லம்போர்கினி காரின் மீது வைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்!

மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. லம்போர்கினி உருஸ் காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கிராஃபைட் கேப்சூல் எடிசன் சில குறிப்பிட்ட டீலர்ஷிப் ஷோரூம்களில் இருந்து மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய லம்போர்கினி காரின் பொனெட்டின் மீது நடிகர் கார்த்திக் ஆர்யன் உணவருந்தியதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kartik aryan eats on lamborghini urus bonnet images gone viral details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X