ரோட்ல சாதாரணமா பைக் ஓட்டீட்டு வந்தது அவரா! 4 கோடி ரூபாய் கார்ல வந்து ஹெல்மெட்டை குடுத்தது எல்லாம் வேற லெவல்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aryan). நடிகர் அஜீத் குமாரை (Ajith Kumar) போல், இவரும் பைக் பிரியர் ஆவார். ஏற்கனவே நிறைய பைக்குகள் இருக்கும் நிலையில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 (Ducati Scrambler 1100) பைக்கை, கார்த்திக் ஆர்யன் சமீபத்தில் வாங்கியுள்ளார்.

இந்த சூழலில், இந்த பைக்கில் கார்த்திக் ஆர்யன் வலம் வரும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. கார்த்திக் ஆர்யன் ஜிம்மில் இருந்து வெளியே வருவதை இந்த வீடியோவில் காண முடிகிறது. அப்போது அவ்வழியாக லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் ஒன்று வருகிறது. இது கார்த்திக் ஆர்யனுடையதான். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 4 கோடி ரூபாய் ஆகும்.

Kartik Aryan Enjoys A Ride On His Ducati Scrambler 1100

இந்த லம்போர்கினி உருஸ் காரில் வந்தவர்கள், கார்த்திக் ஆர்யனுக்கு ஹெல்மெட்டை வழங்குகின்றனர். இது ராயல் என்பீல்டு (Royal Enfield) பிராண்டு ஹெல்மெட் ஆகும். கார்த்திக் ஆர்யனிடம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் நிறைய இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பேஸ் வெர்ஷன், ஸ்பெஷல் மற்றும் ஸ்போர்ட் என டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் ஆரம்ப விலை (Price) 10.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.74 லட்ச ரூபாய் ஆகும்.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில், 1,079 சிசி, லிக்யூட் கூல்டு, எல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,600 ஆர்பிஎம்மில் 85 பிஹெச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்மில் 88 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கில், ஆக்டிவ், ஜர்னி மற்றும் சிட்டி என மொத்தம் 3 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆக்டிவ் மற்றும் ஜர்னி ரைடிங் மோடுகளில்தான் இந்த இன்ஜின் 85 பிஹெச்பி பவரை உருவாக்கும். சிட்டி மோடில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஹெச்பி பவரை மட்டுமே உருவாக்கும்.

அதே நேரத்தில் இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்-1000 (Suzuki GSX-S1000) போன்ற பைக்குகளுடன் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் போட்டியிட்டு வருகிறது. கார்த்திக் ஆர்யனிடம் இதுபோன்ற விலை உயர்ந்த பைக்குகள் மட்டுமல்லாது, பல்வேறு கார்களும் இருக்கின்றன.

செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) காருடன்தான், கார்த்திக் ஆர்யன் தனது கார் கலெக்ஸனை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மினி கூப்பர் எஸ் கன்வெர்டபிள் (Mini Cooper S Convertible) உள்ளிட்ட கார்களை கார்த்திக் ஆர்யன் வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்த்திக் ஆர்யன் போன்ற பிரபலமான நடிகர்கள், விலை உயர்ந்த பைக்குகளை சாலையில் சர்வ சாதாரணமாக ஓட்டி கொண்டு செல்வதை பார்க்கும்போது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரையுலகை காட்டிலும், பாலிவுட் நடிகர்கள் பலர் பைக் பிரியர்களாக இருக்கின்றனர். கார்த்திக் ஆர்யனுடன், ஜான் ஆபிரஹாமும் (John Abraham) இதற்கு ஒரு உதாரணம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 20:35 [IST]
English summary
Kartik aryan enjoys a ride on his ducati scrambler 1100 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+