தமிழகமே பெருமை கொள்.. இந்த திருக்குவளை நாயகன்தான் ஆசியாவின் டெட்ராய்ட் ஆக சென்னையை செதுக்கிய சிற்பி

'ஆசியாவின் டெட்ராய்ட்' என செல்ல பெயரிட்டு அழைக்கப்படும் அளவிற்கு, தமிழக தலைநகர் சென்னையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. திருக்குவளை நாயகன் கருணாநிதியே இதற்கு காரணகர்த்தா.

By Arun

'ஆசியாவின் டெட்ராய்ட்' என செல்ல பெயரிட்டு அழைக்கப்படும் அளவிற்கு, தமிழக தலைநகர் சென்னையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. திருக்குவளை நாயகன் கருணாநிதியே இதற்கு காரணகர்த்தா. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதி, மண்ணுலகை விட்டு பிரிந்து, விண்ணுலகை ஆள சென்று விட்டார். அவரது அன்பு உடன்பிறப்புகள் இங்கு மீளா துயரில் ஆழ்ந்து விட்டனர். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கருணாநிதி ஆற்றிய தொண்டுகள் பல.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

வட அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலே உள்ள ஒரு நகரம் டெட்ராய்ட். ஆட்டோமொபைல் துறையின் உலக மையமாக அறியப்படும் நகரமது. 1903ம் ஆண்டில், ஹென்ரி ஃபோர்டு தொடங்கிய ஃபோர்டு கார் நிறுவனமே, டெட்ராய்ட் நகருக்கு, இப்படி ஒரு சிறப்பை தேடி கொடுத்தது.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

அந்த டெட்ராய்ட் நகரை, நமது சிங்கார சென்னையுடன் ஒப்பிடுவது என்பது மிகையானதாக இருக்காது. ஏனெனில், 'ஆசியாவின் டெட்ராய்ட்' என உலக ஆட்டோமொபைல் வல்லுனர்களால், செல்லமாக அழைக்கப்படும் பெரு நகரம் நமது தமிழக தலைநகர் சென்னை.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

'ஆசியாவின் டெட்ராய்ட்' என்ற பெருமை சென்னைக்கு கிடைக்க காரணகர்த்தாக்களாக விளங்கியவர்களில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. இவரது தலைமையிலான ஆட்சி காலங்களில், சென்னையில் ஆட்டோமொபைல் துறை விஸ்வரூப வளர்ச்சியை கண்டது.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

ஹூண்டாய் இந்தியா, ராயல் என்பீல்டு, ஃபோர்டு இந்தியா, பிஎம்டபிள்யூ இந்தியா, அசோக் லேலண்ட், டெய்ம்லர் இந்தியா உள்ளிட்ட முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலைமையகம் அமைய பெற்றிருப்பது நமது சிங்கார சென்னையில்தான்.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

இதனால்தான் சென்னையை 'ஆசியாவின் டெட்ராய்ட்' என அடைமொழியிட்டு அழைக்கின்றனர். அதிக அளவிலான ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை சென்னையில் உருவாக்கி, பொருளாதாரத்தில் தமிழகம் ஓர் சிறப்பான நிலையை அடைய உதவியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில், கார் உற்பத்தியை தொடங்கி வைத்ததே அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதிதான். கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, அங்கு கார் உற்பத்தி தொடங்கப்பட்டது.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது அந்த தொழிற்சாலை. சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில், பல்லாயிரக்கணக்கான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது நாம் பெருமை கொள்ள வேண்டிய ஓர் விஷயமே.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

தமிழக காவல்துறைக்கு ஏசி வசதிகளுடன் கூடிய 100 சொகுசு கார்களை, ஹூண்டாய் நிறுவனம் வழங்க முன்வந்ததும் கருணாநிதியின் ஆட்சி காலத்தில்தான் (2006ம் ஆண்டு). அதிநவீன வசதிகளுடன் கூடிய அந்த 100 கார்களையும், அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் காவல் துறையிடம் ஒப்படைத்தார்.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

ஆட்டோமொபைல் துறையின் தலைநகராக சென்னை உருவெடுக்க, சிறப்பான பங்களிப்பை கருணாநிதி வழங்கியுள்ளார். தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் விளங்கியதால், பல முன்னணி நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலையை தொடங்க, கருணாநிதி ஆட்சியில் ஒப்பந்தம் செய்து கொண்டன.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

இதுதவிர பேருந்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகங்களை அமைத்த பெருமையும் கருணாநிதியையே சாரும். சேவை மனப்பான்மை இல்லாமல் தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்து துறை, அவரது ஆட்சி காலத்தில் நாட்டுடமை ஆக்கப்பட்டது.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

நாட்டிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்து கழகங்களை உருவாக்கியவர் கருணாநிதிதான். இதன் மூலம் குக்கிராமங்களுக்கு கூட பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. கிராமங்களில் வசிக்கும் பின்தங்கிய மக்களின் வசதிக்காக மினி பஸ்களும் கருணாநிதி ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

சின்னஞ்சிறு கிராமங்களில் கூட, அதிக அளவிலான சாலைகளை அமைத்தவர் கருணாநிதி. 1,500 மக்களை கொண்ட கிராமங்களுக்கும், சாலைகள் அமைக்கப்பட்டன. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

இதனிடையே கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் ஆட்டோமொபைல் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில், 6,400 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க, கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஒப்பந்தம் செய்தது. உண்மையில் இந்த ஆலை தமிழகத்தில்தான் அமைந்திருக்க வேண்டும்.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

ஆனால் 'ஆசியாவின் டெட்ராய்டு' என்று பெயரெடுத்த சென்னையை உதறி தள்ளிவிட்டு, ஆந்திராவுக்கு தலைதெறிக்க ஓடியது கியா மோட்டார்ஸ். தமிழகத்தில் தொழில் தொடங்க, ஆட்சியாளர்கள் லஞ்சமாக கேட்ட தொகையை கொடுக்க முடியாமல்தான் கியா மோட்டார் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

உடன்பிறப்பே பெருமை கொள்.. ஆசியாவின் டெட்ராய்டு ஆக சென்னையை செதுக்கிய சிற்பி கருணாநிதி..

தமிழகத்திற்கு வர வேண்டிய கியா மோட்டார்ஸ், ஆந்திராவிற்கு சென்றது, தமிழக ஆட்சியாளர்களுக்கு கிடைத்த ஒரு கரும்புள்ளிதான். இந்த சர்ச்சை இன்றளவும் நீடித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், 'ஆசியாவின் டெட்ராய்டு' என்ற பெருமையை சென்னை வெகு விரைவில் இழந்துவிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karunanidhi's Achievements In Automobile Industry. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X