Kashmir To Kanyakumari Road 2024ம் ஆண்டு நிறைவடையும்! ஆனா எந்த ரூட்ன்னு தான் தெரியல!

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கனவு விரைவில் நிறைவேறப்போவதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியுள்ளார். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு தயார் செய்யப்பட்டது. அப்பொழுது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே ரோடு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இன்று இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுவிட்டன.

Kashmir To Kanyakumari Road 2024

ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை நெடுஞ்சாலையை இணைக்கும் கனவு இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில் காஷ்மீரில் உள்ள ஸூஸில்லா என்ற குகை பகுதியை ஆய்வு செய்ய நதின் கட்கரி நேரில் சென்றிருந்தார். அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு முக்கியமான தகவல் ஒன்றைச் சொன்னார்.

இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகளின் கனவான காஷ்மீர் கன்னியாகுமரி இணைப்பு வரும் 2024ம் ஆண்டு துவக்கத்திலேயே நிறைவேறிவிடும் எனக் கூறினார். அதற்கு இந்த ஸூஸில்லா குகை மிகவும் முக்கியமான ஒன்று எனவும், இது ஆசியாவிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் நீளமான குகை எனக் கூறியுள்ளார்.

Kashmir To Kanyakumari Road 2024- 2

தற்போது இதற்காக டில்லி முதல் சென்னை வர உள்ள நெடுஞ்சாலைகளை இணைத்து இந்த இரு நகரங்களுக்குமிடையேயான தூரத்தை 1350 கி.மீ தூரமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு எந்த ரூட்டில் நடக்கப்போகிறது என்பதை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை.

சூரத் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை இதில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். காஷ்மீர் கன்னியாகுமரி இணைப்பிற்கு அமைச்சர் பார்வையிட்ட ஸூஸில்லா குகை மிக முக்கியமான பாதையாகும். இது தான் தேசிய நெடுஞ்சாலை வழியாகக் காஷ்மீரை இணைக்கிறது.

Kashmir To Kanyakumari Road 2024 - 3

இந்த குகை கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடிக்கு மேலே இருக்கிறது. இது மட்டுமல்ல இந்த குகை மொத்தம் 13 கி.மீ நீளம் கொண்டது. இந்த குகை தான் லடாக் போன்ற பகுதிக்குச் செல்ல உதவும், ஆனால் இருக்கும் பிரச்சனை என்றால் குளிர் காலத்தில் இதைப் பயன்படுத்த முடியாது.

குளிர் காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த குகை மூடப்பட்டு விடும். இதனால் வெயில் காலத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறது. இதனால் இதை எல்லா காலத்திற்கும் ஏற்றவாறு மாற்ற நடவடிக்கை எடுக்கவே அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தற்போது வெயில் காலம் என்பதால் இந்த குகை வழியாக தற்போது போக்குவரத்து செய்ய முடிகிறது. மத்திய அமைச்சர் சொன்னபடி 2024ம் ஆண்டு முதல் பாதியிலேயே கன்னியாகுமரி - காஷ்மீர் கனவு நினைவு ஆகிவிட்டால் இந்தியாவில் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை ரூட்டாக இது தான் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன?: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. பல வெளிநாட்டுச் சாலைகளுக்கு நிகராக இங்குச் சாலைகள் அமைக்கப்படுகிறது. இவை எல்லாம் இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

இதில் காஷ்மீர்-கன்னியாகுமரி இணைப்பு சாலை என்பது 20 ஆண்டு கனவு தற்போது நினைவாகப்போகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம் தான். இதைச் சாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. இதை இந்தியா சுலபமாக சாதித்துள்ளது என்பது மட்டுமே உண்மை.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 11, 2023, 18:30 [IST]
English summary
Kashmir to kanyakumari road completed by 2024 nitin gadkari says
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X