பிரிட்டன் புதிய இளவரசி கேத் மிடில்டன் பழைய கார் ஏலம்

கடந்த 2001ம் ஆண்டு இந்த காரை கேத் மிடில்டன் 10,818 யூரோ விலையில்(இந்திய மதிப்பில் ரூ.6.9 லட்சம்) வாங்கினார். பிரிட்டன் இளவரசர் வில்லியமை காதலித்து வந்தபோது இந்த காருடன் அடிக்கடி அவர் மீடியா கண்களில் சிக்கியதுண்டு.
இந்த நிலையில், இந்த காரை கேத் மிடில்டன் சகோதரர் ஜேம்ஸ், ரீடிங் என்ற இடத்தில் உள்ள யூஸ்டு கார் டீலரிடம் விற்றுவிட்டார். 60,000கிமீ ஓடியிருந்த அந்த காரை ஜேம்ஸ் 1,400 யூரோவுக்கு(ரூ.89,000) விற்றார்.
தற்போது அந்த கார் இ-பே ஏல நிறுவனம் மூலம் ஏலத்திற்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக அந்த காருக்கு 20,000 யூரோ (ரூ.12.5லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








