வீட்டுக்காரருக்கு ஒடம்பெல்லாம் மச்சம்! இவ்ளோ அழகா இருக்கறது பத்தாதுனு இது வேறயா! எங்கயோ பாத்த மாதிரி இருக்குல!
இந்தியாவை பொறுத்தவரையில், பாலிவுட் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கூட, மிகவும் விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். இந்த வரிசையில் பாலிவுட் பிரபலம் ஒருவர், தன் கணவருக்கு மிகவும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான காத்ரீனா கைஃப் (Katrina Kaif) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.
இவர் தற்போது தனது கணவர் விக்கி கௌஷலுக்கு (Vicky Kaushal) மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அது ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. விக்கி கௌஷலும் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர்களில் ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பரிசாக கிடைத்துள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசு எஸ்யூவி கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். ரேஞ்ச் ரோவர் காரின் 3.0 எல்டபிள்யூபி ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டைதான் (3.0 LWB Autobiography Variant) காத்ரீனா கைஃப், கணவர் விக்கி கௌஷலுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை 2.60 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.25 கோடி ரூபாய் வரை வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 394 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படும் என்பதும், இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பதும் கவனிக்கத்தக்க விஷயம் ஆகும். இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கு என்டர்டெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் 35 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்த சூழலில் காத்ரீனா கைஃப் தனது கணவர் விக்கி கௌஷலுக்கு பரிசாக வழங்கிய ரேஞ்ச் ரோவர் காரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மும்பை சாலைகளில் இந்த கார் பயணித்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரின் உள்ளே காத்ரீனா கைஃப்பையோ அல்லது விக்கி கௌஷலையோ நம்மால் காண முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜிடி (BMW 5 Series GT) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) என விக்கி கௌஷலிடம் ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது மனைவி காத்ரீனா கைஃப் பரிசாக வழங்கிய ரேஞ்ச் ரோவர் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








