மோட்டார்சைக்கிள் ஓட்டி அசத்திய நடிகை கேத்ரீனா கைப்

Katrina kaif
மும்பை: 'ஜிந்தகி நா மிலிங்கே தொபாரா' பாலிவுட் சினிமாவை பிரபலப்படுத்தும் விதமாக நடிகை கேத்ரீனா கைப் புல்லட் மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்வையாளர்களை அசத்தினார்.

ஹிருத்திக் ரோஷன்- கேத்ரீனா கைப் இணைந்து நடித்துள்ள ஜிந்தகி நா மிலிங்கே தொபாரா என்ற பாலிவுட் சினிமா சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் ஹீரோ ஹிருத்திக்கை, ஹீரோயினாக நடித்துள்ள கேத்ரீனா சேஸிங் செய்வது போன்று படமாக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் நடிகை கேத்ரீனா மும்பை வீதிகளில் புல்லட் கிளாஸிக்-350சிசி மோட்டார்சைக்கிளில் வலம் வந்து அசத்தினார். கேத்ரீனா பின்னால் ஹீரோ ஹிருத்திக் அமர்ந்து வந்தார்.

கேத்ரீனா மோட்டார்சைக்கிள் ஓட்டியபோது புகைப்பட பத்திரிக்கையாளர்களும், ரசிகர்களும் பின்தொடர்ந்து வந்தனர். கேத்ரீனா புல்லட் மோட்டார்சைக்கிளை அனாயசமாக ஓட்டியதை கண்டு மும்பைவாசிகள் ஆச்சரியப்பட்டனர்.

பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சினிமா நட்சத்திரங்களை தங்களது பிராண்டு தூதர்களாக நியமித்து பிரபலப்படுத்தி வருகின்றன. ஆனால், பழம்பெருமை வாயந்த ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதில் விதிவிலக்கு.

இதுவரை அந்த நிறுவனம் எந்த சினிமா நட்சத்திரங்களையும் வைத்து விளம்பரம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் புல்லட் கிளாஸிக்-350 மோட்டார்சைக்கிளை நடிகை கேத்ரீனா விரும்பி ஓட்டியது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2011, 17:45 [IST]
English summary
The recently released Bollywood Movie Zindagi Na Milegi Dobara had a scene which had Katrina Kaif chasing Hrithik Roshan in a Royal Enfield Classic 350. The picture of Katrina Kaif riding the Indian cruise bike was one of the first released publicity images of the film. Now after the release of the film, Katrina has driven the bike again on the streets of Mumbai during an event to promote the film. Hrithik Roshan arrived at the scene and happily became the pillion rider behind Katrina. Hrithik on the rear seat, Katrina rode the Royal Enfield Classic 350 around the Mumbai streets with several journalists and fans following them.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+