சிவகார்த்திகேயன் பாத்தா ப்ரொடியூசர் கூட சண்டை போட்டாச்சும் ஹீரோயின் ஆக்கியிருவாரு! அவங்களா இது! அடையாளமே தெரில
இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதில், திரைப்பட நடிகைகள் முக்கியமானவர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பாலிவுட் திரையுலக நடிகைகள் பலரும், தொடர்ச்சியாக விலை உயர்ந்த கார்களை வாங்கி வருகின்றனர். இதற்கு பாலிவுட் ஹீரோயின் காத்ரீனா கைஃப் (Katrina Kaif) ஒரு உதாரணம். உண்மையில் காத்ரீனா கைஃப்பின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது. இதில், ரேஞ்ச் ரோவர் வோக் எல்டபிள்யூபி (Range Rover Vogue LWB) சொகுசு கார் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
அத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 350 (Mercedes Benz ML 350), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் ஆடி க்யூ3 (Audi Q3) ஆகிய கார்களையும் கூட, காத்ரீனா கைஃப் வைத்துள்ளார். காத்ரீனா கைஃப் மட்டுமல்லாது, அவரது கணவரும், நடிகருமான விக்கி கௌஷலும் (Vicky Kaushal) கூட கார் காதலர்தான்.

எனவே ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) கார் ஒன்றை, தனது கணவர் விக்கி கௌஷலுக்கு, காத்ரீனா கைஃப் சமீபத்தில் பரிசாக வழங்கியிருந்தார். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அந்த செய்தியை வாசகர்களுக்கு வழங்கியிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்த சூழலில் அந்த காரை தற்போது காத்ரீனா கைஃப் பயன்படுத்தி கொண்டுள்ளார். மும்பை விமான நிலையத்திற்கு ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், காத்ரீனா கைப் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், காரின் வெள்ளை நிறத்திற்கு 'மேட்ச்' ஆகும் வகையில், காத்ரீனா கைஃப்பும் வெள்ளை நிற உடையில் வந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 398 பிஎஸ் பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும், இன்ஜின் உருவாக்கும் சக்தி செலுத்தப்படுகிறது.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இது சொகுசு கார் என்றாலும் கூட, ஆஃப் ரோடு சாகச பயணங்களையும் மேற்கொள்ள முடியும். சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உருவாக்கப்பட்டுள்ளது.
காத்ரீனா கைஃப் மட்டுமல்லாது, இந்தியாவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலரிடமும், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் சொந்தமாக இருந்து வருகிறது. இதில், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) மற்றும் மலாய்கா அரோரா (Malaika Arora) போன்றவர்கள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 3 கோடி ரூபாய் வரும். இருப்பினும் சொகுசு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டும் கலந்து கட்டிய கலவையாக இருப்பதால், திரையுலக பிரபலங்கள் பலரும், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை விரும்பி வாங்குகின்றனர்.
லெக்ஸஸ் எல்எக்ஸ் (Lexus LX) மற்றும் மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் (Mercedes Maybach GLS) ஆகிய கார்களுக்கு எல்லாம், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. இது யூரோ என்சிஏபி (Euro NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய கார் ஆகும்.
எனவே பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை எனலாம். நகர பயணம், தொலை தூர பயணம் என எதுவாயினும், சொகுசாக பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு முரட்டுத்தனமான காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி நல்ல சாய்ஸ். இதன் ஆஃப் ரோடு திறன்கள், சாலையே இல்லாத இடங்களிலும் முன்னேறி செல்ல உதவும்.
தற்போது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் விமான நிலையத்திற்கு வந்த காத்ரீனா கைஃப்பிற்கு, நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பேனர் எல்லாம் அடித்து கலக்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க. சமீப காலமாக சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் காத்ரீனா கைஃப் அவருக்கு ஜோடியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications








