உலகமே வாங்க போட்டி போடும் காருடன் நிற்பது அந்த பிரபல பாடகியா? அவரை பார்ப்பதா... அவரது காரை பார்ப்பதா!!

கேட்டி பெர்ரி (Katy Perry), பிரபல அமெரிக்க பாப் பாடகி. இவர் புதியதாக டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) எலக்ட்ரிக் பிக்-அப் டிரக் வாகனத்தை வாங்கி உள்ளார். இதனை வெளிக்காட்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கேட்டி பெர்ரி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

உலகில் எப்போதும் ஒருவர் தனது திறமையினால் புகழின் உச்சியில் இருப்பார். அவர் நடிகர், நடிகையாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, பாடகர், பாடகியாக கூட இருக்கலாம். 1980ஆம் காலக்கட்டத்தில் மைக்கெல் ஜாக்சன் எந்த அளவுக்கு பிரபலமானவராக இருந்தார் என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.

katy perry buys tesla cybertruck

மைக்கெல் ஜாக்சன் அளவிற்கு இல்லையென்றாலும், பல்வேறு நாடுகளில் ரசிகர்களை கொண்டிருப்பவர் பாடகி கேட்டி பெர்ரி. இதற்கு சாட்சியாக, எக்ஸ் தளத்தில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டிருப்பவர் கேட்டி பெர்ரி ஆவார். இந்த நிலையில், புதியதாக டெஸ்லா சைபர்டிரக்கை பாடகி கேட்டி பெர்ரி வாங்கி உள்ளார்.

இதுகுறித்த கேட்டி பெர்ரியின் எக்ஸ் பதிவில், டெஸ்லா சைபர்டிரக் உடன் அவர் நிற்கும் படத்தை காணலாம். சைபர்டிரக் வாகனத்தை டெலிவிரி எடுத்த பின் இந்த புகைப்படத்தை கேட்டி பெர்ரி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், இந்த எக்ஸ் பதிவின் மூலமாக டெஸ்லா மோட்டார்ஸின் சிஇஓ எலான் மஸ்க்கிற்கு நன்றியையும் கேட்டி பெர்ரி தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் சைபர்டிரக் எலக்ட்ரிக் வாகனத்தை மிக வலிமையானதாக, பல மாதங்களாக உருவாக்கி வந்தது. சைபர்டிரக்கின் சிறப்பம்சமே, அதன் எளிமையான தோற்றம் ஆகும். முக்கோண வடிவில் உருவாக்கப்படும் சைபர்டிரக், இராணுவ வாகனங்களுக்கு இணையாக வலிமையான பாடியை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அறிமுகத்திற்கு முன்னதாகவே டெஸ்லா சைபர் டிரக் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியது.

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், சில மாதங்களுக்கு முன் சைபர்டிரக்கை டெஸ்லா அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 2019இல் சைபர்டிரக் கான்செப்ட்டை பொது உலகிற்கு காட்டிய டெஸ்லா நிறுவனம் கிட்டத்தட்ட 4 வருட ஆய்வுகளுக்கு பின் கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் சைபர்டிரக் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பலரும் மிகவும் ஆர்வத்துடன் போட்டி போட்டு புக் செய்து வருகின்றனர்.

katy perry buys tesla cybertruck

தற்போதைய நிலவரப்படி, 3,878 சைபர்டிரக் வாகனங்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா டெலிவிரி செய்துள்ளது. சைபர்டிரக் எலக்ட்ரிக் வாகனத்தை டெலிவிரி பெற்றுள்ள முதல் ஹாலிவுட் நட்சத்திரம் கேட்டி பெர்ரி கிடையாது. ஏனெனில், ஜஸ்டீன் பைபர், லேடி காகா உள்ளிட்ட ஹாலிவுட் ஸ்டார்கள் ஏற்கனவே சைபர்டிரக்கை டெலிவிரி பெற்றுவிட்டனர்.

சிங்கிள் மோட்டார், டபுள் மோட்டார் மற்றும் டிரிபிள் மோட்டார் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் டெஸ்லா சைபர்டிரக் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிங்கிள் மோட்டார் வேரியண்ட்டில் மட்டும் மோட்டாரின் பவர் வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு செல்கிறது. மற்ற இரு வேரியண்ட்களில் வாகனத்தின் அனைத்து 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. சைபர்டிரக்கின் விலைகள் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.51 லட்சத்தில் இருந்து ரூ.83.33 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்சமே அவற்றின் குறைவான விலைகளாகும். உதாரணத்திற்கு, மிகவும் வலிமையானதாக உருவாக்கப்படும் சைபர்டிரக்கின் விலையை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும். ரூ.51 லட்சம் - ரூ.83.33 லட்சம் என்பது இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரையில் அதிகமாக இருக்கலாம், ஆனால் கோடிக்களில் மிதக்கும் கேட்டி பெர்ரி போன்றோருக்கு இது பெரிய விஷயமே கிடையாது.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 22:52 [IST]
English summary
Katy perry thanked elon musk for delivery of tesla cybertruck
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+