தண்டவாளத்துல ஒரு கி.மீக்கு ஒரு கார்டு மாட்டிட்டாங்க! கவச் 4.0 செயல்பாட்டிற்கு வந்தது!

இந்திய ரயில்வே நிர்வாகம் கவச் 4.0 என்ற பாதுகாப்பு கருவியை டில்லி-மும்பை ரூட்டில் உள்ள மதுரா-கோட்டா ரயில் நிலையங்களுக்கு இடையே முதன் முறையாக பொருத்தியுள்ளது. இந்த சிஸ்டத்தில் என்னென்ன அம்சங்கள் புதிதாக இருக்கிறது என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ரயில் விபத்துக்களை தடுப்பதற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்பம் தான் கவச். ரயில் இன்ஜின், தண்டவாளம், ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மற்றும் பிற தொழிற்நுட்ப பொருட்களை வைத்து ரயில் விபத்து நடக்கும் வாய்ப்புகளை தடுக்கின்றனர். இதனால் மனித தவறால் நடக்கும் விபத்துக்கள் குறையும்.

Kavach 4 0

கவச் என்றால் ஹிந்தியில் கவசம் என்ற பொருள் இருக்கிறது இது தானியாங்கியாக ரயில்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கவச் 4.0வில் ஒவ்வொரு கி.மீ இடைவெளியிலும் தண்டவாளத்தில் ஆர்எஃப்ஐடி பொருத்தப்படுகிறது. மேலும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் வழியாக டெலிகாம் டவர்களும் அமைக்கப்படுகின்றன. இந்த டெலி கம்யூனிகேஷனால் ரயில்கள் மற்றும் ஸ்டேஷன்கள் இடையே வேகமாக கம்யூனிகேஷன் செய்ய முடியும்.

இது மட்டுமல்லாமல் ஆர்எஃப் ஐடி இருப்பதால் ரயிலை ரயில் டைமில் கண்காணிக்க முடியும். மேலும் பனி நேரத்தில் ரயிலை இயக்குபவர்களால் சிக்னலை சரியாக கவனிக்க முடிவதில்லை அந்த பிரச்சனைக்கு தீர்வாக ரயில் பயணிக்கும் போது சிக்கனலை ரயில் இன்ஜின் டேஷ்போர்டிலேயே ரியல் டைமில் தெரியும்படி தொழிற்நுட்பம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Kavach 4 0

இந்த அப்டேட்டில் கவச் தொழிற்நுட்பத்துடன் ரயிலின் பிரேக்கிங் சிஸ்டம் நேரடியாக இணைக்கப்படுகிறது. இதனால் ரயில் விபத்தில் சிக்கப்போவதை கவச் உணர்ந்துவிட்டால் உடனடியாக தானாக பிரேக்கை பிடித்து ரயில் விபத்தை தடுத்துவிடும். இந்த கவச் 4.0 தொழிற்நுட்பம் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதாக சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த கவச் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட ரயில்கள் 160 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் மினி டெலிகாம் நெட்வோர்க் உருவாக்கப்பட்டு வேகமாக கம்யூனிகேஷன் செய்ய உதவியாக இருக்கும். இந்தியாவில் சுமார் 4000 கி.மீ தண்டவாளங்கள், 708 ஸ்டேஷன்களில் ஏற்கனவே முந்தைய தலைமுறை கவச் தொழிற்நுட்பம் வந்துவிட்டது.

Kavach 4 0

File Photo

இது போக ரயில்வே நிர்வாகம் சார்பில் 5856 கி.மீ நீளத்திற்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பொருத்தப்பட்டு 619 டெலிகாம் டவர்கள் பொருத்தப்பட்டு கம்யூனிகேஷன் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் இந்த கவச் தொழிற்நுட்பத்திற்காக பயிற்சியை பெற்றுள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் கவச் 4.0 மிக வேகமாக கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் விபத்து மிக குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் விபத்தே இல்லாத ரயில்வே துறையை உருவாக்க இந்த கவச் தொழிற்நுட்பம் நிச்சயம் உதவி செய்யும் இது நிச்சயம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரயில் போக்குவரத்தில் பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2025, 16:20 [IST]
English summary
Kavach 4 0 indian railways safety system delhi mumbai route
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X