இனி ஒரு உசுரு கூட ரயில் விபத்துல போகாது போல! கவச் 4.0வை இந்தியா முழுசா கொண்டு வரப்போறாங்க!
இந்தியாவில் ரயில் விபத்துக்களை தவிர்க்க கவச் என்ற தொழிற்நுட்பத்தை தற்போது ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கவச் 4.0 க்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் இந்த தொழிற்நுட்பத்தை பெரிய அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பெரிய அளவில் முதலீடுகளையும் செய்யுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள். சற்று நீளமான பதிவாக இருக்கும் பொறுமையாக முழுமையாக படித்து பாருங்கள் பல பலனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
இந்தியாவில் இயங்கும் ரயில்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க கவச் என்ற முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள ரயில்வே நெட்வோர்க் உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ரயில்கள் விபத்து இல்லாமல் இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒரு ரயில் விபத்தில் சிக்கினால் அதில் ஏற்படும் இழப்பு மிகப்பெரிய தாக இருக்கும். ரயில் விபத்தில் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் பொருட்கள் சேதமும் அதிகமாக இருக்கும். ரயில்வே நெட்வோர்க்கில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் மனித தவறுகளால் நடக்கிறது. இந்தியாவில் அதிக மனிதர்கள் பயணியாற்றும் நிறுவனம் ரயில்வே தான் என்பதால் இந்த தவறுகளை தொழிற்நுட்ப உதவி மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.
தற்போது இந்த தொழிற்நுட்பத்தை தான் கவ் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. கடந்த 2016ம் ஆண்டு இந்த கவச் தொழிற்நுட்பம் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டு செயல்பாட்டிற்குகொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் அதில் பல்வேறு விதமான அப்டேட்கள் வழங்கப்பட்டன. அந்த அப்டேட்கள் எல்லாம் கவச் 2.0 ,3.0 என்ற பெயரில் அமல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கவச் 3.2 தான் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்த கவச் தொழிற்நுட்பத்தை தற்போது ரயில்வே நிர்வாகம் அப்டேட் செய்து கவச் 4.0 என வெளியிட்டுள்ளது. இந்த 4.0 அப்டேட்டிற்கு கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தொழிற்நுட்பத்தை பெரிய அளவில் அமலுக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்நுட்பம் அமலுக்கு வந்தால் நிச்சயம் ரயில் விபத்து கணிசமான அளவில் குறையும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது இந்திய ரயில்வ நெட்வொர்க் சுமுார் 1465 கி.மீ தூரத்திற்கு பாதைகளை அமைத்துள்ளது. தற்போது மத்திய அரசு இதற்காக ரூ1950 கோடியை கவச் தொழிற்நுட்பத்திற்கு செலவு செய்ய நிதியை ஒதுக்கியுள்ளது. கவச் 4.0 தொழிற்நுட்பத்தை அமைக்க ஒரு கி.மீக்கு ரூ50 லட்சம் செலவாகும். இது போக ரயில்வே இன்ஜினில் கவச் தொழிற்நுட்பத்தை புகுத்த ஒரு இன்ஜினிற்கு ரூ80 லட்சம் வரை செலவாகும்.
இந்த கவச் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக ரயில்வேயில் பணியாற்றி வரும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்கப்பட்டு அதறன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள கவச் தொழிற்நுட்பம் பல்வேறு புதிய அப்டேட்களை கொண்டுள்ளது. இதனால் ரயில் பயணம் மேலும் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவச் 4.0 தொழிற்நுட்பத்தில் ரயில் எந்த இடத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை மேலும் துள்ளியமாக அறிய புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் கருவிகளும் அப்படேட் செய்ப்படுகிறது. அடுத்த அப்டேட்டாக பெரிய ரயில்வே யார்டில் உள்ள சிக்னல்கள் தானியங்கியாகவும் எளிமையாகவும் இயங்க அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது போக எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது போ ஒவ்வொரு ஸ்டேஷனையும் இணைப்பதற்காக ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்படவுள்ளன. இதன் மூலம் ஒரு ஸ்டேஷன் அப்டேட் செய்யப்படும் தகவல் அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு உடனடியாக தெரியும் வகையில் இந்த தொழிற்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதில் சிக்னல்கள் எதுவும் இல்லாமல் தண்டவாள பாதை வழியாக ஆப்டிக்கல் வயர்கள் விரிக்கப்பட்டு அதன் மூலம் தகவல்கள் பகிரப்படுகிறது.
தற்போது கவச் தொழிற்நுட்பத்திற்கான கருவிகளை தயாரிக்க 3 நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் இருக்கிறது. இந்நிறுவனங்கள் கவச் தொழிற்நுட்பத்தை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. இந்த கருவிகள் கிடைக்கும் திறனை அதிகரிக்க மேலும் பல நிறுவனங்களுடன் ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் ரயில்வே உபகரணங்கள் எளிதாக கிடைக்கும் வேகமாக கவச் தொழிற்நுட்ப கட்டுமான பணிகளை செய்ய முடியும்.
சமீபத்தில் கவச் தொழிற்நுட்பத்திற்காக இந்தியா முழவதும் 5743 கி.மீ நீளத்திற்கு ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. இது போக 540 டெலிகாம் டவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். 795 ரயில் இன்ஜின்களில் கவச் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. 664 ரயில் நிலையங்களும் கவச் தொழிற்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 3727 கி.மீ நீளத்தில் ரயில் தண்டவாள பகுதிகளில் உள்ள கவச் தொழிற்நுட்பத்திற்கு தேவையான பாகங்கள் எல்லாம் பதிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே நிர்வாகம் கவச் தொழிற்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது என்றே சொல்லலாம் இந்தியாவில் கொண்டு வரப்படும் இந்த தொழிற்நுட்பம் வெளிநாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணிக்கும் போது இனி பாதுகாப்பான பயணம் கிடைக்கும்.மனித தவறுகள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் ரயில் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும்.
ரயில் விபத்துக்கள் ஒரு பக்கம் இதன் மூலம் குறைக்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் ரயில்கள் குறித்த மேலும் பல தகவல்களை பெறவும் இந்த தொழிற்நுட்பம் உதவுகிறது. ரயில்வே பாகங்களின் தேய்மானம், ரயில் பயன்பாட்டு அளவ, ரயில் பெட்டிகளின் உறுதி தன்மை உள்ளிட்ட தகவல்களையும் இதன் மூலம் இன்னும் சிறப்பாக பராமரிக்க முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த கவச் தொழிற்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது என்றே சொல்லலாம். இதை தொழிற்நுட்பத்தை காலத்திற்கு ஏற்பவும், தரவுகளை மதிப்பிட்டும் அப்டேட் செய்யப்படும் பட்சத்தில் இது நிச்சயம் பெரிய அளவில் நமக்கு பலனளிக்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் இந்த தொழிற்நுட்பத்தை வெளிநாட்டு ரயில்வே துறையும் ஏற்றுக்கொண்டால் அதன் மூலம் இந்தியா பொருளாதார வளர்ச்சியையும் பெறும்.


Click it and Unblock the Notifications









