130கிமீ வேகத்தில் வந்த ரயிலை சட்டென நிறுத்திய தொழில்நுட்பம்.. இனி ரயில் விபத்துன்ற ஒன்னே இந்தியாவுல நடக்காது!
இந்தியாவில் சமீப காலமாக ரயில் விபத்து அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு ரயில் விபத்துகள் அடுத்தடுத்து என இந்தியாவில் அரங்கேறியது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மும்பை-ஹவுரா மற்றும் உபி விரைவு ரயில் விபத்தை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய ரயில் விபத்துகளை குறைக்கும் முயற்சியிலேயே இந்தியன் ரயில்வேஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ரயில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஓர் தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மகிழ்ச்சியான தகவலை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-ம் உறுதிப்படுத்தி இருக்கின்றார். 'தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு' (Automatic Train Protection System), இதனையே இந்தியன் ரயில்வேஸ் அண்மையில் சோதனையோட்டம் செய்து பார்த்துள்ளது. இந்த சோதனையோட்டமே வெற்றியடைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு என்ற உடன் ஏதோ ஓர் புதிய தொழில்நுட்பம் என நினைத்துக் கொள்ள வேண்டாம், 'கவச்' (Kavach)-தான் அது ஆகும். மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்கு உட்படுத்தப்பட்ட சவய் மதோபர் மற்றும் இன்டர்கர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையிலேயே கவச் சிஸ்டம் பொருத்தப்பட்ட ரயலில் இயக்கி சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது.
சுமார் 130 கிமீ வேகத்தில் இந்த ரயில் தடத்தில் இயக்கப்பட்டது. இந்த அளவு அதிகபட்ச வேகத்தில் வரும்போதே சிவப்பு சிக்னல் போடப்பட்டு இருக்கின்றது. இந்த சிவப்பு சிக்னலை நெறுங்குவதற்கு 50 மீட்டர் இடைவெளி இருக்கும் முன்னரே அந்த ரயில் முழு வேகத்தயைும் கட்டுப்படுத்தி நின்றிருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. பைலட்-இன் தலையீடு இன்றியே அந்த ரயில் நின்றிருக்கின்றது. மேலும், இந்த சோதனையோட்டத்தின்போது அந்த ரயிலில் அமைச்சர் வைஷ்ணவ்-ம் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் சோதனையோட்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக பதிவுகளை வெளியிட்டிருக்கின்றார். கவச் பாதுகாப்பு அம்சம் பொருத்தப்பட்ட அந்த ரயில் சிவப்பு சிக்னல் மட்டுமல்ல மொத்தமாக ஏழு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருப்பதாக இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்திருக்கின்றது.
இந்த கவச் தொழில்நுட்பமானது அவசர கால பிரேக்கிங்கை மட்டுமல்ல வேகத்தைக் குறைக்கும் கருவியாகவும் செயல்படும் என தெரிகின்றது. இந்தியன் ரயில்வேஸும் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், இந்த சோதனையோட்டத்தின்போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அதை மணிக்கு 120 கிமீ வேகமாக கவச் குறைத்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே மீண்டும் 130 கிமீ வேகத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றது. இதேபோல், லூப் லைன்களில் செல்லும்போது மணிக்கு 30 கிமீ வேகத்திற்கு ரயிலின் வேகத்தை அது குறைத்திருக்கின்றது. 130 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த ரயிலையே அது மிகவும் ஸ்மூத்தான நிலையில் மணிக்கு 30 கிமீ வேகத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றது.
கவச், இந்த செயல்களை ஸ்டேஷன் மாஸ்டர் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும், இந்த சோதனையோட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. சவாய் மதோபர் மற்றும் இன்டர்கர் ரயில்வே நிலையங்களுக்கு இடையே இருக்கும் மோசமான வழித் தடம் பற்றிய தகவலை கவச்-க்கு ஸ்டேஷன் மாஸ்டர் கட்டளையாக வழங்கி இருக்கின்றார்.
இதற்கேற்ப கவச் பொருந்திய ரயில் வேகத்தை குறைத்தும், ஏற்றியும் சென்றிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, லெவல் கிராஷிங்கின்போது தானாகவே ஹாரன் மற்றும் விசிலையும் அது ஒலிக்கச் செய்யும். இந்த கவச் சிஸ்டத்தை இதோடு நிறுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்த லெவலுக்கு அப்டேட் செய்யவும் இந்தியன் ரயில்வேஸ் திட்டமிட்டு இருக்கின்றது.
அந்தவகையில், அடுத்த ஆறு ஆண்டுகளில் இதை புதிய வெர்ஷனாகவும் உருவாக்க இருப்பதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த ஆட்டோமேட்டிக் ரயில் பாதுகாப்பு சிஸ்டம், ஆர்டிஎஸ்ஓ-வால் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அட்வான்ஸ்டு பாதுகாப்பு சிஸ்டத்தை முதல் கட்டமாக மும்பை-டெல்லி மற்றும் டெல்லி-கொல்கத்தா ரூட்களில் பொருத்தும் பணியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கியிருக்கின்றது.
3 ஆயிரம் கிமீ இடைவெளியைக் கொண்டதே இந்த வழித்தடங்கள் ஆகும். இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த வழித்தடங்களிலும் இந்த கவச் தொழில்நுட்பத்தை பொருத்த இருப்பதாக இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்திருக்கின்றது. இப்போது சோதனையோட்டத்தின்போது பயன்படுத்தப்பட்டது கவச் 4.0 என தெரிகின்றது. இது அனைத்து விதமான நிலப்பரப்புகளில் உள்ள சவால்களையும் சமாளிக்கும் திறன் கொண்டது என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் விபத்துக்ள் சமீப சில காலமாக அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதை குறைத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே கவச் சிஸ்டம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், இதை விரைவில் நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் ரயில் வழித் தடங்களில் பொருத்தும் பணிகளையும் விரைவில் இந்தியன் ரயில்வேஸ் மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கான அடிக்கல்லே சமீபத்திய சோதனையோட்டம் ஆகும்.


Click it and Unblock the Notifications








