ஸ்டெல்லா மேரிஸ்ல படிச்ச பொண்ணு.. ஐபிஎல் அணிக்கு மட்டுமல்ல பல கார்களுக்கு ஓனரா இருக்காங்க.. அவரோட மகளேதான்!
இந்தியாவின் முன்னணி பிசினஸ் மேன்களில் கலாநிதிமாறன்-ம் ஒருவர் ஆவார். இவரை அறியாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பெரும் கோடீஸ்வரராக அவர் இருக்கின்றார். மேலும், பல முன்னணி படங்களை அவர் இயற்றியிருக்கின்றார். இவர்களுக்கு சொந்தமானதே சன் குழுமம் ஆகும். இந்த குழுமத்திற்கு சொந்தமானதே சன் பிக்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி ஆகும். மேலும், இவரின் ஒரே மகள் காவ்யா மாறன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் கோ-ஓனராக இவர் இருக்கின்றார். இதற்கு மட்டுமல்ல அவர் பல ஆடம்பர கார்களுக்கு ஓனராகவும் இருக்கின்றார்.
குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII EWB (Rolls Royce Phantom VIII EWB) போன்ற கார் மாடலையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த ஒரே ஒரு கார் மாடலின் விலை மட்டுமே ரூ. 12 கோடி ஆகும். இந்த காரின் விலை மட்டுமல்ல எஞ்சினும் பெருசு. 6.75 லிட்டர் வி12 ட்வின் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 571 எச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 12 அங்குல அலாய் வீல், கருப்பு மற்றும் தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றனர். ஆற்றலை பலமாக வழங்கும் இந்த மோட்டார் மைலேஜ் விஷயத்தில் மிகவும் பின் தங்கி இருக்கின்றது.
இது லிட்டர் ஒன்றிற்கு 10 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜையே வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. பொழுதுபோக்கு திரை, குட்டி கிளிர்சாதன பெட்டி, இலுமினேட் ஆகும் திறன் கொண்ட கிரில், ஸ்டார்லைட் ஹெட்லைட் உள்ளிட்டவை பிரீமியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ஆடம்பர காரை மட்டுமல்ல பென்ட்லீ பென்டேகா இடபிள்யூபி (Bentley Bentayga EWB) கார் மாடலையும் காவ்யா மாறன் தன் வசம் வைத்திருக்கின்றார். இந்த சொகுசு கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 6 கோடி ஆகும்.
இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 542 எச்பி மற்றும் 770 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. உலக பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.

இதற்கேற்ப அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் இருக்கைகளே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல இந்த காரின் முன் மற்றும் பின்பக்கம் என இரண்டிலும் ரெக்லைன் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைகளையே வழங்கி இருக்கின்றனர். இத்தகைய காரையே காவ்யா மாறன் தன் வசம் ஒரு யூனிட்டை வைத்திருக்கின்றார்.
இந்த காரை மட்டுமல்ல காவ்யா மாறன் ஃபெர்ராரி ரோமா (Ferrari Roma)-வையும் பயன்படுத்தி வருகின்றார். இது ஓர் சூப்பர் கார் மாடல் ஆகும். பென்ட்லீ பென்டேகா இடபிள்யூ கார் மாடலைக் காட்டிலும் சற்றே விலை குறைவான காராக இது இருக்கின்றது. ரூ. 4.5 கோடியே அதன் விலை ஆகும்.
இந்த காரிலும் அதிக ஆற்றலை உருவாக்கும் 3.9 ட்வின் டர்போசார்ஜட் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதிகபட்சமாக 680 எச்பி மற்றும் 760 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.4 செகண்டுகளே போதுமானது ஆகும்.
அதேவேளையில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும். ஆடம்பர அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், 16 அங்குல முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 3 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், கன்சோலின் மையப்பகுதியில் பெரிய தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கு என தனி திரை உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல ஆடம்பர அம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஃபெர்ராரி ரோமா காரை மட்டுமல்ல பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) எனும் கார் மாடலையும் காவ்யா மாறன் தன் வசம் ஒரு யூனிட்டை வைத்திருக்கின்றார். இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டு மட்டுமே ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த விலைக்கு ஏற்ப காரிலும் மிக அதிக ஆடம்பர அம்சங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 31.3 அங்குல திரை 8K தொழில்நுட்ப வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த திரையில் அமேசான் ஃபையர் டிவி வசதியும் வழங்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் கார் 625 கிமீ தூரம் ரேஞ்சை வழங்கும். இந்த திறனுக்காக 101.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
பேட்டரி பேக்கைப் போலவே அதிக பவர்ஃபுல்லான, அதாவது, 544 எச்பி பவர் மற்றும் 745 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வெறும் 4.7 செகண்டுகளிலேயே 0-100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுமட்டுமல்ல பார்க்கிங் செய்யும்போது அசிஸ்டன்ஸ் செய்யும் வசதி, கிராஷ் சென்சார், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதி உடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்களையும் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. இத்தகைய அம்சங்களைத் தாங்கியிருக்கும் எலெக்ட்ரிக் காரையே காவ்யா மாறன் தன் வசம் ஓர் யூனிட்டை வைத்திருக்கின்றார். இந்த காரை காவ்யா மாறன் மட்டுமல்ல நடிகர் விஜய்யும் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆடம்பர கார்களையே காவ்யா மாறன் பயன்படுத்தி வருகின்றார். இவர் ஸ்டெல்லா மேரிஸிலேயே தன்னுடைய பட்ட படிப்பை முடித்தார் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போது சன் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் பலவற்றை கையாண்டு வருகின்றார். அதில் மிக முக்கியமானதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி இருக்கின்றது. இந்த பதிவில் நாம் பார்த்தது வெளியுலகிற்கு தெரிந்த கார் மாடல்களின் லிஸ்ட் மட்டுமே ஆகும். இதைத் தாண்டி இன்னும் பல கார்களை இவரும், இவருடைய குடும்பத்தினரும் பயன்படுத்தி வருவாதகக் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









