யாருயா இது இன்னொரு டிடிஎஃப் வாசனா! நிஞ்ஜா பைக்ல 110கிமீ வேகத்துல போன இளைஞர்.. கௌசிக் போல குறுக்கே வந்த புல்லட்
இளைஞர்கள் பலரின் ஃபேவரிட் பைக் மாடலாக கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்10ஆர் (Kawasaki Ninja ZX10R) இருக்கின்றது. இந்த பைக்கே அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது குறுக்க வந்த புல்லட் (Royal Enfield) பைக்குடன் மோதி முழுமையாக உருக்குலைந்து போயிருக்கின்றது. இந்த சம்பவம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கவாஸாகி (Kawasaki) நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் நிஞ்ஜா இசட்எக்ஸ்10ஆர் (Ninja ZX10R)-ம் ஒன்றாகும். இந்த பைக்கிற்கு சர்வதேச அளவில் செம்ம டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டிடிஎஃப் வாசன் போன்ற அட்ராசிட்டி செய்யும் யுட்யூபர்களின் ஃபேவரிட் பைக் மாடலாக அது இருக்கின்றது.

இத்தகைய விலையுயர்ந்த சூப்பர் பைக் ஒன்றையே சமீபத்தில் ஸ்டண்ட் செய்வதாக கூறி சல்லி சல்லியாக நொறுக்கினார் டிடிஎஃப் வாசன். இந்த மோசமான செயலுக்காக 40 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த டிடிஎஃப் தற்போதே ஜாமீன் பெற்று வெளியே வந்திருக்கின்றார். இதற்கிடையில், அவருடைய ஓட்டுநர் உரிமத்தை சுமார் 10 ஆண்டுகளுக்கு நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகையால், டிடிஎஃப் வாசனால் இனி சூப்பர்பைக் டூ-வீலரை மட்டுமல்ல டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ கூட ஓட்ட முடியாது என்கிற சூழலே உருவாகி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிடிஎஃப் வாசனைப் போல அடாவடி வேகத்தில் சென்ற மற்றுமொரு யுட்யூபர், அவருடைய நிஞ்ஜா பைக்கை விபத்தில் இரையாக்கி இருக்கின்றார்.

இவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல யுட்யூபர் என கூறப்படுகின்றது. மிதமிஞ்சிய வேகத்தில் அவர் சென்றுக் கொண்டிருந்தபோது குறுக்கே ராயல் என்பீல்டு புல்லட் பைக் ஒன்று நுழைந்திருக்கின்றது. அந்தவேளையில், மணிக்கு 110க்கும் அதிகமான கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்திருக்கின்றார். இதனாலேயே கட்டுப்பாட்டை இழந்து புல்லட் பைக் உடன் நிஞ்ஜா மோத நேரிட்டிருக்கின்றது.
இதன் விளைவாக மிக மோசமான பின் விளைவுகளை அந்த விலை உயர்ந்த நிஞ்ஜா பைக் சந்தித்து இருக்கின்றது. நேரடியாக சென்று புல்லட் பைக்குடன் மோதி மீண்டும் தரையில் விழுந்ததால், அந்த பைக்கிற்கு சேதம் சற்று கூடுதலாகவே ஏற்பட்டு இருக்கின்றது. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பைக்கின் முகப்பு பகுதி முழுமையாக சேதமுற்றிருக்கின்றது.

இந்த விபத்திற்கு யுட்யூபர், புல்லட் பைக்கை காரணமாக கூறுகின்றார். அவர் பயணித்தது நெடுஞ்சாலை என்றும், அதில், புல்லட் பைக் உரிமையாளர் அலட்சியமாக திரும்பியதாகவும் கூறுகின்றார். நெடுஞ்சாலையாக இருந்தாலும், விபத்து நடைபெற்ற அந்த பகுதி மக்கள் கூட்டம் நிறைந்ததாக தெரிகின்றது. இந்த மாதிரியான பகுதியில் எந்த மாதிரியான வாகனமாக இருந்தாலும் வேகம் குறைத்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால், இதனைக் கடைபிடிக்காமல் அந்த யுட்யூபர் கவாஸாகி நிஞ்ஜா பைக்கில் அதி வேகத்தில் சீறி பாய்ந்து சென்றிருக்கின்றார். மணிக்கு 110 கிமீட்டருக்கம் அதிகமான வேகத்திலேயே அவர் பயணித்து இருக்கின்றார். இதனாலேயே நிஞ்ஜா பைக்கை கட்டுப்படுத்த முடியாமல், புல்லட் உடன் அவர் மோதி இருக்கின்றார்.
இந்த விபத்தில் இருவர் மீதும் தவறு இருப்பது தெளிவாக தெரிகின்றது. நிஞ்ஜா பைக் உரிமையாளர்கள் அதி வேகத்தில் சென்று தவறு என்றால், புல்லட் பைக் உரிமையாளர் கண் மூடித் தனமாக வாகனத்தை திருப்பியதும் தவறான செயல் ஆகும். இதைவிட மிக மோசமான நிகழ்வாக, சூப்பர் பைக்கில் வந்தவர்களை உள்ளூர் வாசிகளைக் கொண்டு அந்த புல்லட் பைக் ரைடர் மிரட்டத் தொடங்கி இருக்கின்றார்.
இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் அனைவரையும் சமரசம் செய்துவிட்டு சூப்பர் பைக் ரைடர் அங்கிருந்து புறப்பட்டு இருக்கின்றார். இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பொதுவானவையாக மாறி இருக்கின்றது. செல்போன் பேசிக் கொண்டே சாலையைக் கடப்பது, வலது-இடது பார்க்காமல் சாலையைக் கடப்பது என பல்வேறு தவறுகளை வாகன ஓட்டிகள் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனாலேயே நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் பெருகிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கவாஸாகி நிஞ்ஜா பைக் விபத்து சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறி இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக நிஞ்ஜா பைக் ரைடர் மற்றும் புல்லட் பைக் ரைடர் இருவர்களுக்கும் பெரிய காயம் ஏதும் இன்றி தப்பி இருக்கின்றனர்.
அவர்களுக்கு சிறு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வேகத்தைக் குறைத்து, கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில் மட்டுமே பயணத்தால் மட்டுமே முடியும். ஆனால், பலர் அதீத வேகத்தில் செல்லவே ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு சென்றதனாலேயே பிரபல யுட்யூபர் டிடிஎஃப் வாசன் தற்போது தன்னுடைய டிரைவிங் லைசென்ஸை இழந்து இருக்கின்றார்.
விரைவில் இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவரின் சம்பவத்தின் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், அடுத்ததாக மஹாராஷ்டிராவில் மற்றுமொரு நிஞ்ஜா பைக் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இவரின் மீது காவல்துறையின் கடுமையான நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதீத வேகத்தில் செல்வது குற்றமல்ல ஆனால், அதை உரிய டிராக்கில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடனேயே செய்ய வேண்டும். ஆனால், இதைவிட்டு சில யுட்யூபர் பொது சாலையில் மித மிஞ்சிய வேகத்தில் செல்கின்றனர். இதன் விளைவாக ஆபத்தான விபத்தில் சிக்குகின்றனர். அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் அவர்கள் ஆபத்தில் சிக்க வைத்துவிடுகின்றனர். இதன் காரணத்தினாலேயே விதிமீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









