சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

சூப்பர்பைக்கில் போலீஸாரின் தடுப்புகளையும் மீறி சென்றவர், பிறகு தன் பக்க நியாயத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.6

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

சமீப காலமாக சூப்பர் பைக்குகள் மற்றும் சூப்பர் கார்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நகர்புறங்களில் வார இறுதி நாட்களில் நிறைய சூப்பர்பைக் குழுக்களை பார்க்க முடிகிறது.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

அதேநேரம் இத்தகைய சூப்பர்பைக் குழுக்களால் அரங்கேற்றப்படும் சட்ட விரோதமான போட்டிகளை தடுக்கவும், பைக்குகளை ஆய்வு செய்யவும் போக்குவரத்து பணியில் ஈடுப்படுத்தப்படும் போலீஸாரின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறுதான் உள்ளது.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

இதனால் இந்த இரு தரப்புகிடையே நிகழும் காரசாரமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த வகையில் தற்போது சூப்பர்பைக் குழு ஒன்று போலீஸாரின் சாலை தடுப்புகள் அனைத்தையும் மீறி அவர்களுக்கு தண்ணிக்காட்டி உள்ளது.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

ஹரியானா, பானிபட் பைபாஸ் மேம்பாலத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ, போலீஸார் சோதனை செய்யும் இடத்திற்கு சில மீட்டர்கள் தூரத்திற்கு முன்பு மூன்று சூப்பர்பைக் ரேஸர்கள், போலீஸாரிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது, போலீஸார் நிறுத்த நேர்ந்தால் என்ன சொல்வது என்பது குறித்து ஆலோசிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

பிறகு போலீஸாரை நோக்கி செல்லும் அவர்கள் மூன்று பேரில் வழிநடத்தியவர் முதல் ஆளாக முன்னோக்கி செல்கிறார். எதிர்பார்த்ததை போல் போலீஸார் அவரது பைக்கை நிறுத்த, அவர் பைக்கின் வேகத்தை கூட்டி போலீஸார் அனைவரையும் வளைந்து வளைந்து கடந்து செல்கிறார்.

இந்த வீடியோ இரண்டாவதாக வரும் ரேஸரின் ஹெல்மெட்டில் உள்ள கோ-ப்ரோ கேமிராமின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதால், முதல் ஆளாக சென்ற ரேஸர் போலீஸாரிடம் இருந்து தப்பித்து செல்வது மிக தெளிவாக படமாகியுள்ளது. அப்போது போலீஸார்களுள் ஒருவர் மிக அபாயகரமான சாலையில் தடுப்புக்காக வைக்கும் கோன்-ஐ வைத்து தப்பித்து செல்பவரை தாக்குகிறார்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

இத்தகைய நிகழ்வுகளுக்கு பிறகு இந்த சம்பவங்களை அந்த ரைடர் விவரிக்க ஆரம்பிக்கிறார். இதன்படி அவர் கூறுகையில், பானிபட் பைபாஸ் மேம்பாலம் 3.6 கிமீ நீளம் உடையது, இதனால் தான் நாங்கள் அவர்களை (போலீஸார்) அடைவதற்கு முன்பாக சாலையின் ஓரத்தில் ஒரு குழுவாக நின்று ஆலோசித்தத்தை அவர்கள் பார்த்துள்ளனர்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

அதுமட்டுமில்லாமல் அந்த மேம்பாலம் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் வாகனங்கள் இல்லாமலே இருந்தது. இதனால் பைக்குகளை ஓட்டி சென்ற அனைவரும் அதிவேகத்தில் செல்லவே முற்பட்டனர். இன்னும் சொல்லப்போனால், போலீஸாரின் வாகனத்தை பார்க்கும்வரை அனைவரும் அதிவேகத்தில்தான் பாலத்தை கடந்தனர்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

என்னுடன் வந்த ரைடர் போலீஸாரை பார்த்த பிறகு, மிக பெரிய பிரச்சனை ஆகும், நீதிமன்றத்துக்கு சென்று அதிக பணத்தை செலவழிக்க வேண்டும் என அதிகமாகவே பயந்துவிட்டார். 20-25 kmph வேகத்தில் சென்றாலே போலீஸாரால் நம்மை தடுத்து நிறுத்த முடியாது என கூறிய நான் 250kmph வேகத்தில் அவர்களை கடக்க முடிவு செய்தேன் என வீலீபாய் பின்னி என்ற யுடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அந்த ரைடர் தெரிவித்துள்ளார்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

மூன்று ரேஸர்களில் முதல் இரு ரேஸர்கள் தப்பித்து சென்ற கோபத்தில் மாட்டிய மூன்றாவது ரேஸரின் தலையில் துப்பாக்கி வைத்து தப்பித்து சென்ற இருவரையும் திரும்ப வரவழைக்கும்படி போலீஸார் மிரட்டியுள்ளனர். பிறகு கிட்டத்தட்ட 1 மணிநேர பேச்சுவார்த்தையில் ரூ.2 ஆயிரத்தை செலுத்திவிட்டு போகும்படி கூறியுள்ளனர்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

இதனால் ரூ.2 ஆயிரத்தை செலுத்திவிட்டு வந்த மூன்றாவது ரேஸர் கூறுகையில், சமீபத்தில் நடந்த விபத்திற்கு பிறகு யமஹா விரைவு சாலையில் சூப்பர்பைக்குகளை போலீஸார் அனுமதிப்பது இல்லை. சமீபத்தில் கூட ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக சூப்பர்பைக் குழு ஒன்றின்மீது குர்க்ராம் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

இதனால் சூப்பர்பைக் ரேஸர்களுக்கு பயணம் செய்ய நீளமான சாலைகள் இல்லை. சாலைகளில் அவ்வளவு வேகமாக செல்ல கூடாது என்றால் இந்தியாவில் சூப்பர்பைக்குகளை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும். அதேபோல் ட்ராக்குகளுக்கான தொகை மிக அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

போலீஸார் தடுப்புகளை தவிர்பதும் மற்றும் தப்பித்து செல்வதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் இந்த ரேஸர்கள் மீது வழக்குபதிவு செய்யலாம். ஏனெனில் இத்தகைய நிகழ்வுகள் பெரிய அளவிலான விபத்தில் போய் முடியலாம். இந்த வீடியோவில், தான் அதிவேகமாக வந்ததை ஒப்பு கொள்ளும் ரேஸர், போலீஸார் முன்பாகவே எனது பைக்கின் எக்ஸாஸ்ட் பலத்த சத்தத்தை வெளிப்படுத்தியாகவும் கூறியுள்ளார்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

மேலும் இதனால்தான் அவர் போலீஸாரிடம் இருந்து தப்பித்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் போன்ற சூப்பர் பைக்குகளில் வருவோரின் மீதுதான் போலீஸாரின் நடவடிக்கை தீவிரமாக பாயும். ஏனெனில் சூப்பர்பைக் ரேஸர்களினால் தான் அதிகளவில் விபத்துகள் நடத்துள்ளதை முந்தைய சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

இருப்பினும் பைக்கில் செல்வோரை தடுக்க கோன் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குவது என்பது நிச்சயம் கண்டனத்திற்குரியதாகும். ஏனெனில் பைக்கை ஓட்டி வந்தவர் வந்த வேகத்திற்கு பேலன்ஸை இழந்திருந்தால் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம்.

சுற்றி வளைத்து நின்ற போலீஸார்... 1000சிசி கவாஸாகி நிஞ்சா பைக்கில் தப்பித்து சென்ற ரேஸர்கள்...

இதற்கு பதிலாக எளிமையாக பைக்கின் பதிவு எண்ணை குறித்து கொண்டு அவருக்கு அபராதத்தை இ-காசோலையாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம் அல்லது பிளாஸ்டிக் தடுப்புகளை நெருக்கமாக அடுக்கி வைக்கலாம். ஆனால் இவ்வாறான சம்பவத்தில் வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கு ரேஸர்கள் தான் கெட்டவர்களாக தெரிவார்கள் என்பது உண்மை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kawasaki Ninja ZX10R Superbike rider escapes from cops, admit riding at 250 kmh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X