ஒரு கோடி ரூபாயுடன் ஹூண்டாயின் புதிய காரையும் தட்டி தூக்கிய நபர்.. அமிதாப் பச்சனே அவரோட கையால கொடுத்திருக்காரு!
இந்தியாவில் நடைபெறும் பிரபலமான டிவி ஷோக்களில் 'கோன் பனேகா க்ரோர்பதி' (கோடீஸ்வரர் ஆகப்போவது யார்) -யும் ஒன்றாகும். தற்போது 16ஆவது சீசனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த சீசனின் முதல் கோடி ரூபாய் பரிசை வென்றவருக்கே பரிசு தொகை ஒரு கோடி ரூபாயும், புத்தம் புதிய ஹூண்டாய் (Hyundai) காரும் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) காரே பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. 22 வயதே ஆன சந்தர் பிரகாஷ் இவரே அந்த வெற்றியாளர் ஆவார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த இந்த இளைஞர் யுபிஎஸ்சி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையிலேயே தனியார் தொலைக்காட்சியின் போட்டியில் அவர் பங்கு பெற்றிருக்கின்றார். தற்போது ஒரு கோடி ரூபாய் பரிசையும், புத்தம் புதிய ஹூண்டாய் வென்யூ காரையும் அவர் பரிசாக வென்றிருக்கின்றார்.

ஹூண்டாய் வென்யூ ஓர் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் கூடுதல் சிறப்புகள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹூண்டாய் நிறுவனமே இந்த டிவி ஷோவின் டைட்டில் ஸ்பான்சர் ஆகும். இதன் அடிப்படையிலேயே அது கார் பரிசை வழங்கி இருக்கின்றது. இந்த ஷோவின் அதிகபட்ச பரிசு தொகையான ரூ. 7 கோடியை வெள்ளும் நபருக்கு அது அல்கஸார் (Alcazar) காரை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே ஒரு கோடி ரூபாயை வென்றவருக்கு வென்யூவை வழங்கி இருக்கின்றது. பரிசு தொகையும், காரும் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் வாயிலாகவே வழங்கப்பட்டு இருக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, வென்யூவின் எஸ்எக்ஸ் (ஓ) ( SX(O) ) வேரியண்டே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இதன் விலை ரூ.12.44லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்களையும் மிக தாராளமாக இந்த வேரியண்டு கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், எல்இடி புரஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், பின் பக்கத்தில் கன்னெக்டட் எல்இடி லைட், 15 அங்குல டூயல் டோன் அலாய் வீல் மற்றும் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் ஆகியவை அதனை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல், இதன் கேபினும் அதிக சிறப்பம்சங்களால் நிரம்பிக் காணப்படுகின்றது. பிளாக் மற்றும் கிரே நிறத்தால் இதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். டூயல் டோன் லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், சிங்கிள் பேன் சன்ரூஃப், 8 அங்குல தொடுதிரை சிஸ்டம் உள்ளிட்டவை வென்யூ எஸ்எக்ஸ் (ஓ) வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட டிரைவருக்கான திரை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் மற்றும் ஸ்டார்ட் - ஸ்டாப் ஆகியவற்றை செய்யும் வசதி உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், பாதுகாப்பு அம்சங்கள் விஷயத்திலும் இந்த தேர்வு தலை சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், லெவல் 1 வகை அடாஸ் அம்சம் உள்ளிட்டவையே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய அம்சங்களைத் தாங்கிய வென்யூ காரையே போட்டியில் வென்றவருக்கு ஹூண்டாய் பரிசாக வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் இதுபோன்று காரை பரிசாக வழங்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதை போலவே கார்கள் பரிசளிப்பு என்பது நிகழ்ந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய நிகழ்வாக புத்தம் புதிய வென்யூ கார் பரிசளிப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








