Audi e-tron காரின் மேற்கூரையில் இருந்து டேக்-ஆஃப் ஆகிய 40 கிலோ மட்டுமே கொண்ட சோலார் விமானம்..

ஆடி நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இ-ட்ரான் ஸ்போர்ட் பேக் (Audi e-tron Sportback)-ம் ஒன்று. இந்த காரின் மேற்கூரையின் மீது இருந்து ஓர் ஏர்-கிராஃப்ட் டேக்-ஆஃப் (Aircraft Take-Off) ஆகும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த விமானம், மின்சாரத்தால் இயங்கக் கூடிய சோலார் பவர்டு விமானம் ஆகும். இது இயங்க சூரிய ஒளி ஒன்று இருந்தால் போதுமானது. தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. இத்தகைய ஓர் ஏர்கிராஃப்டே ஆடி இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் எலெக்ட்ரிக் காரின் மேற்கூரையின் மீதிருந்து டேக்-ஆஃப் ஆகி பின்னர் மீண்டும் வெற்றிகரமாக தரையிறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கின்றது.

Audi e tron solar powered aircraft side view

இதுகுறித்த வீடியோவை சோலார் பவர்டு விமானத்தை தயாரித்த 'கே ஏரோஸ்பேஸ்' நிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்த சோலார் விமானம் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாகும். ஏற்கனவே கான்செப்ட் மாடலாக மட்டுமே இதை நிறுவனம் காட்சிப்படுத்தி வந்த நிலையில் இப்போது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வகையில் தயார் செய்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஓடு தளத்தின் உதவியின்றி டேக்-ஆஃப் செய்யும் முறையை அந்த விமானத்தில் அது செய்து பார்த்தது. ஓடு தளத்திற்கு பதிலாக ஆடி எலெக்ட்ரிக் கார் குறிப்பிட்ட வேகத்தில் சென்று, அவ்விமானத்திற்கான உந்து விசையை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் விளைவாகவே அவ்விமானம் சுலபமாக டேக்-ஆஃப் ஆகியது.

Audi e tron solar powered aircraft upper view

இந்த சோதனை ஓட்டமே வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றது. நியூசிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே 'கே ஏரோஸ்பேஸ்' (Kea Aerospace) ஆகும். இது சோலார் பவர்டு விமானங்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய தனி திறமையை வெளிக்காட்டும் விதமாக இப்புதிய சோலார் பவர்டு விமானத்தை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

இந்த விமானத்திற்கு நிறுவனம் அட்மோஸ் எம்கே1 (Kea Atmos Mk1) எனும் பெயரை சூட்டி இருக்கின்றது. இந்த விமானம் பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக கே ஏரோஸ்பேஸ் தெரிவித்து உள்ளது. குறிப்பாக, காலநிலை, மரங்களின் ஆரோக்கியம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றை பற்றி அறிந்துக் கொள்ள ஏதுவாக இந்த விமானம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

Audi e tron solar powered aircraft aerial view

அதேவேளையில், பெரும்பாலும் விவசாய பணிகளுக்காகவே இந்த விமானம் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இத்தகைய பணிகளில் விமானம் ஈடுபடும்போது மின்சார திறன் இல்லை என்கிற தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த விமானத்தை கே ஏரோஸ்பேஸ் சோலார் பவர்டு வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. சோலார் பேனல்கள் அனைத்தும் விமானத்தின் மேல் பக்கத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

இது சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெற்று தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும். இந்த விமானத்தில் 12.5 மீட்டர் நீள இறக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த இறக்கையே இவ்விமானத்தை வணிக விமானங்கள் பறக்கும் உயரத்தையும் தாண்டி பறக்க உதவியாக இருக்கும்.

சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தில் கே அட்மோஸ் எம்கே1 சோலார் விமானம் பறக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஒட்டுமொத்த எடையே 40 கிலோ மட்டுமே ஆகும். இதனால் தொடர்ச்சியாக 16 மணி நேரம் வரை பறக்க முடியும். இதுமட்டுமில்லைங்க, இந்த விமானத்தால் செயற்கைகோள்களை விட மிக துள்ளியமாக இயங்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இதற்காக மிக சிறந்த திறன் கொண்ட கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது மிக துள்ளியமான படங்களை எடுக்க உதவும். இந்த விமானத்தின் அடுத்த லெவல் வெர்ஷனை உருவாக்கும் பணியிலும் கே ஏரோஸ்பேஸ் களமிறங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதில், சுமார் 30 மீட்டர் நீளம் கொண்ட இறக்கைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

இதனால், 65,000 அடி உயரம் வரை பறக்க முடியும். இந்த விமானத்தால் நிலம் மற்றும் நீர் பரப்பில் உள்ள மாசைக்கூட கண்டறிய முடியும். இதுதவிர, வன பகுதிகளைக் கண்காணித்தல், தீவிர வானிலையை உடனடியாக கண்டறிந்து அது பற்றி எச்சரிக்கையை விரைந்து வழங்குதல் மற்றும் சட்ட விரோத மீன்பிடி படகுகள்-கப்பல்களைக் கண்டறிதல் போன்ற புலனாய்வு பணிகளுக்கும் இந்த விமானம் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கேற்ப அதிநவீன வசதிகள் கே அட்மோஸ் எம்கே2-வில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

கே அட்மோஸ் எம்கே1 முழுக்க முழுக்க விவாசய பணிகளை சுலபமானதாகவும், லாபகரமானதாகவும் மாற்ற உதவுவதற்காகவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. சுற்றுச் சூழலுக்கு ஏற்ப விவசாய பணிகளை மேற்கொள்ள இந்த விமானம் பயன்படும். இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனாகவே எம்கே2 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் பயன்பாடு பரந்து விரிந்துக் காணப்படும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 13, 2023, 12:28 [IST]
English summary
Kea atmos mk1 solar aircraft succesfully take off from audi e tron sportback
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X