7 பேர் உயிரை காவு வாங்கிய ஹெலிகாப்டர் விபத்திற்கு இதான் காரணமா?
சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் செய்பய்ட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 200 பேர் இறந்த பரப்பரப்பு கூட ஒயவில்லை அதற்குள் கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியத. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது? இந்த விபத்தறி்கு பின்னால் நடந்தது என்ன? விரிவான காணலாம் வாருங்கள்.
கேதர்நாத் பகுதியில் பக்தி யாத்திரைக்கு வரும் பக்தர்களை கூட்டி செல்லும் வகையில் ஆர்யன் ஏவியேஷன் என்ற நிறுவனம் ஹெலிகாப்டர் சேவைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (15ம் தேதி) அதிகாலை சுமார் 7 பேருடன் இந்த ஹெலிகாப்டர் விமான சேவையை துவங்கியது. இந்த ஹெலிகாப்டர் பயணிகளு் பறக்க துவங்கிய நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது.

இந்த விபத்து குறித்து சில முக்கிய வல்லுநர்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் விபத்திற்கான மூல காரணம் தெரியவந்துள்ளது. அதன்படி விபத்து நடந்த போது விசிபிளிட்டி பிரச்சனை ஏற்பட்டது தான். விபத்திற்கான மூல காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதி குறுகலான வேலி பகுதியாக இருப்பதாலும், கணிக்க முடியாத காற்று இருப்பதாலும், விபத்து நடந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
கேதர்நாத் பகுதி என்பதால் அங்கு அடகி்கடி வானிலை மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பகுதியில் ஹெலிகாப்டர்களை இயக்குவது சற்று சிரமமாக இருக்கும். இந்த விபத்தை தவிர்த்திருக்க வேண்டும் என்றால் விமானத்தை இயக்க துவங்கும் முன்னரே திட்டமிட்டு விமான பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாம் பறக்கும் போது வானிலை குறித்த செக்கப்களை சற்று ஆழமாக செய்திருக்க வேண்டும். விமானி சூழ்நிலையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என வல்லுநர்கள் கணித்துள்ளது.

விஷூவல் ஃபிளைட் ரூல்ஸ் எனப்படும் தொழிற்நுட்பத்தில் விமானம் இயங்கும் போது கிளியரான விசிபிலிட்டி அவசியம். குறிப்பாக மலை பகுதிகளில் இது மிக அவசியமாக இருகு்கிறது. சில நொடிகளில் கூட மேக கூட்டங்கள் வந்து விசிபிலிட்டி பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் இந்த விஷயத்தில்தான் தவறு நடந்திருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளது.
பணத்தை துவங்கும் முன்னர் சரியாக திட்டமிடுவது விமானியின் வேலை மட்டுமல்ல அவரது உயிருக்கான பாதுகாப்பு விஷயம் ஆகும். அதே நேரம் சம்பவம் நடந்தது இமயமலை பகுதி என்பதால் பல்வேறு சோதனைகளை செய்யும் போது விமானி கவனமாக இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும்.

இப்படியாக ஹெலிகாப்டர்கள் பல மலை பகுதிகளில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விமானிகளுக்கு போதுமான பயிற்சி இல்லாதது.வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம். ஹெலிகாப்டரில்உள்ள தொழிற்நுட்பங்கள் ஆகியன இந்த விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ராணுவ தளபதி பிபின்ராவன் இப்படி தான் ஊட்டியில் ஹெலிகாப்டரில் செல்லும் செல்லும் போது விபத்தில் சிக்கினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விமான விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. இந்தியாவில் உள்ள விமானிகளுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். பல்வேறு சூழ்நிலைகளிலும் அவர்கள் விமானம் இயக்கும் அளவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் விமானயோ ஹெலிகாப்டரையோ சரியாக இயக்க முடியும்.


Click it and Unblock the Notifications









