நம்ம ஊர் சாலையில் எதை வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்! காரை நிறுத்திவிட்டு சென்ற டாக்ஸி டிரைவருக்கு தான் செலவு
இந்தியாவில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் தளங்களுள் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத் (Kedarnath) ஆகும். இமயமலை தொடரில் உயரத்தில் அமைந்திருப்பதினாலேயே இந்த கோவிலுக்கு வருடத்தில் பல மாதங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, பனிக்காலங்களில் கோவிலை முழுவதுமாக மறைக்கும் அளவிற்கு பனி கொட்டுவதால் அத்தகைய நேரங்களில் கேதார்நாத் கோவிலுக்கு செல்ல முழுமையான தடை விதிக்கப்படுகிறது. கோடைக்காலம் உள்பட சில மாதங்களுக்கு மட்டுமே இந்த கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால், அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் கடினமான கால சூழலையும் பொருட்படுத்தாமல் கேதார்நாத் கோவிலுக்கு செல்கின்றனர்.
இதற்காக பெரும்பாலானோர் பயன்படுத்துவது சாலை வழித்தடத்தை ஆகும். மிகவும் அபாயக்கரமான வளைவுகளை கொண்ட வழித்தடமாக இது இருப்பதினாலேயே அவ்வப்போது கேதார்நாத்துக்கு செல்பவர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்குவது குறித்த செய்திகளை பார்க்க முடிகிறது. அதேநேரம், சில முக்கியமான அனுபவமிக்க யாத்ரீகர்களும், பெரும் பணக்காரர்களும் சவுகரியமாக ஹெலிகாப்டரில் கேதார்நாத் கோவிலுக்கு செல்கின்றனர்.

இதற்காக, உத்தரகாண்டின் தலைநகர் டேராடூனில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்குவதையே சில தனியார் நிறுவனங்கள் தொழிலாக கவனித்து வருகின்றன. சாலை வழியாக செல்வதை காட்டிலும் ஹெலிகாப்டரில் செல்வது சவுகரியமானதாக இருப்பது மட்டுமின்றி, பாதுகாப்பானதாகவும் இருப்பதாக பலர் கூறிவந்த நிலையில், கடந்த 1 மாதத்தில் மட்டும் 4 ஹெலிகாப்டர் விபத்துகள் கேதார்நாத்தை சுற்றி நடந்துள்ளன.
அந்த வகையில், தற்போது ஒரு ஹெலிகாப்டர் விபத்து டேக்-ஆஃப் ஆகும்போதே நடந்துள்ளது. உலகளவில் ஹெலிகாப்டர் பயன்பாடு அறிமுகமான சமயத்தில் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகமாக நடந்தன. ஆனால், சமீப காலங்களில் ஹெலிகாப்டர் உற்பத்தியில் கொண்டுவரப்பட புதிய யுக்திகளும், புதிய தொழிற்நுட்ப வசதிகளும் ஹெலிகாப்டர் விபத்துகளை பெருமளவில் குறைத்துள்ளன.

இருப்பினும், எப்போதும் அசாதாரணமான கால சூழல் நிலவக்கூடிய இமயமலை தொடரில் ஹெலிகாப்டர் பயணம் ஆனது இப்போதுவரையில் சவாலானதாகவே உள்ளது. அதன் வெளிப்பாடாகவே, கேதார்நாத்தை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் கடந்த 1 மாத காலத்தில் 4 ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது நடந்துள்ள விபத்தில், நீல நிறத்திலான ஹெலிகாப்டர் ஒன்றில் டேக்-ஆஃப் செய்யும் முன்னரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஹெலிகாப்டரை டேக்-ஆஃப் செய்வதற்கு முன் அது நின்றுக்கொண்டு இருந்த இடத்திலேயே திருப்பி நிறுத்தி உள்ளனர். பின்னர், ஹெலிகாப்டரை டேக்-ஆஃப் செய்ய முயற்சித்த போது அதற்கு போதுமான உந்துவிசை கிடைக்காமல் மீண்டும் தரையை நோக்கி விழுந்துள்ளது. இது பொதுவாக ஹெலிகாப்டரை டேக்-ஆஃப் செய்யும்போது எப்போவாவது நடக்கக்கூடிய நிகழ்வே ஆகும். அத்தகைய சமயங்களில் பெரும்பாலான பைலட்கள் துரிதமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை தங்களது கண்ட்ரோலில் கொண்டுவந்துவிடுவர்.

ஆனால், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் பட்சாய் என்கிற பகுதியில் ஒரு மலை அடிவாரப்பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவத்தில், பைலட்டுக்கு அவ்வாறு எந்த உதவியும் ஹெலிகாப்டரை மீண்டும் லேண்ட் செய்வதற்கு கிடைக்கவில்லை. வழக்கமாக இந்த ஹெலிகாப்டர் டேக்-ஆஃப் ஆனது மேடான ஒரு இடத்தில் இருந்து ஸ்டார்ட் செய்யப்படும். இந்த பகுதிக்கு கீழே சாலை ஒன்று செல்கிறது. ஹெலிகாப்டரை கண்ட்ரோலுக்கு கொண்டுவந்து பைலட்டால் அதே இடத்தில் நிறுத்த முடியவில்லை.
ஏனெனில், அதற்குள்ளாக ஹெலிகாப்டர் கீழே இறங்கிவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் சாலையில் நிறுத்த முயற்சிக்க, அந்த நேரத்தில் அந்த சாலையில் இருந்த மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) என்கிற கார் டாக்ஸி மீது மோதி பலத்த சேதமடைந்துள்ளது. 'விடி-ஆர்.என்.கே' (VT-RNK) என பெயர் கொண்ட இந்த ஹெலிகாப்டரை கெஸ்ட்ரல் அவியேஷன் (Kestral Aviation) என்கிற நிறுவனம் தனது சேவைக்கு பயன்படுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவம் நீங்கள் நினைப்பதை காட்டிலும் ஆபத்தானது ஆகும். கொஞ்சம் யோசித்து பாருங்கள், நீங்கள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் ஒன்று பெரிய இறக்கைகள் உடன் சாலைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று. நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை.


Click it and Unblock the Notifications









