டிரைவர் எதற்கு? நானே காரை ஓட்டுகிறேன்! புதுசா திருமணமான நடிகைக்கு தெரியாத விஷயமே கிடையாது

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), பாலிவுட் (Bollywood) வரையில் காலடி தடத்தை பதித்த பிரபலமான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர். இந்தியா முழுவதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர், கீர்த்தி சுரேஷ் எனலாம். தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, இந்தியில் வருண் தவன் என அந்தந்த மொழிகளில் பிரபலமாக விளங்கும் முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்தவர், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே தனது நீண்ட கால காதலரை திருமணம் செய்துக் கொண்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின் சில நடிகைகள் மீண்டும் சினிமாவில் நடிக்க வரமாட்டார்கள். சிலருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது உண்டு. ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு முன்பை விட இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். புது, புது திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் அதுதொடர்பான பணிகளில் பம்பரம் போல் சுழன்றுக் கொண்டிருக்கிறார்.

keerthy suresh spotted at airport

இதனால், சமீப காலமாக விமான நிலையங்களிலும் அவ்வப்போது நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க முடிகிறது. அந்த வகையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் காட்சித் தந்துள்ளார். இதில் பலரை கவர்ந்த விஷயம் என்னவென்றால், விமான நிலையத்தில் இருந்து காரை நடிகை கீர்த்தி சுரேஷ் ஓட்டி சென்றது ஆகும். அதாவது, காரை ஓட்டுவதற்கு என டிரைவர் யாரும் இல்லை.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சென்னை விமான நிலையத்தில் இருந்து விஐபி-களுக்கான சிறப்பு வழியில் வெளியே வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கிருந்த போட்டோகிராபர்களுக்கு சில போஸ்களை கொடுத்ததுடன், ரசிகர் உடன் செல்ஃபி போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர், தனது காரில் அங்கிருந்து புறப்பட தயாராகினார்.

keerthy suresh spotted at airport

தனது காரினுள் ஏறி அமர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அவரே டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து ஓட்ட துவங்கியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. பொதுவாகவே, சினிமா திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கார் ஓட்ட தெரிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில், படத்திற்காக சில நேரங்களில் கார் ஓட்டுவதுபோல் நடிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இந்தியாவில் பெண்கள் கார் ஓட்டுவது மிகவும் குறைவாகவே இருப்பதாக சமீபத்தில்தான் சர்வதேச மகளிர் தினத்தின்போது நமது செய்தித்தளத்தில் விரிவாக பார்த்திருந்தோம். குறைந்தது, கீர்த்தி சுரேஷ் போன்ற திரைப்பட நடிகைகள் தைரியமாக முன்வந்து தங்களது கார்களை தாங்களே ஓட்ட முயற்சிக்க வேண்டும். இது அவர்களது சினிமா பயணத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, மற்ற பெண்களுக்கும் பெரிதும் உந்துதலாகவும் இருக்கும்.

keerthy suresh spotted at airport

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே தனது நீல நிறத்திலான பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) காரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார். தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் ஓட்டி சென்றதும் கூட அவரது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரையே ஆகும். இந்த பிஎம்டபிள்யூ காரை 2022ஆம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ் வாங்கி இருந்தார்.

எக்ஸ்7 ஆனது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லக்சரியான எஸ்யூவி கார் ஆகும். 6 இருக்கைகளை கொண்ட இந்த கார் இந்தியாவில் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.31 கோடியில் இருந்து ரூ.1.35 கோடி வரையில் உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் நீலம் நிறமானது டான்சானைட் ப்ளூ மெட்டாலிக் என அழைக்கப்படுகிறது. இது இல்லாமல், டிராவிட் கிரே மெட்டாலிக் கலர் ஆப்ஷனிலும் எக்ஸ்7 கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2022 சமயத்தில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் அப்போது இணையத்தில் வைரலாகின. அதேபோன்று, இந்த பிஎம்டபிள்யூ காருடன் எப்போது எல்லாம் வெளியில் காட்சித் தருகிறாரோ அப்போது எல்லாம் கீர்த்தி சுரேஷின் பெயர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக கவனத்தை பெறுகிறது. ஆதலால், இந்த எக்ஸ்7 ஆனது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ராசியான கார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Take a Poll
FAQs
இந்த காரை எப்போது கீர்த்தி சுரேஷ் வாங்கினார்?

2022ஆம் ஆண்டில்

கீர்த்தி சுரேஷிடம் இருக்கும் கார் என்ன?

பிஎம்டபிள்யூ எக்ஸ்7

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது எங்கு காட்சி தந்துள்ளார்?

சென்னை விமான நிலையத்தில்

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Thursday, March 13, 2025, 21:23 [IST]
English summary
Keerthy suresh spotted at chennai airport drives bmw x7 car by her own
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X