ரசிகருக்கு தன் கையாலயே செல்ஃபி எடுத்து குடுத்தது இவ்ளோ பெரிய ஆளா! சாதாரண டாக்ஸில போனதை நம்பவே முடியல!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). மற்ற ஒரு சில கார்களை போல், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு அறிமுகம் எல்லாம் தேவையே இல்லை. இந்தியாவின் அப்பர் மிடில் க்ளாஸ் மக்கள் முதல் திரையுலகில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நட்சத்திர நடிகர்கள் முதல் பலரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் (Amitabh Bachchan) டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் உள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth), முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரை வைத்துள்ளார். மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் வழங்க கூடிய சௌகரியத்தை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வழங்குவதுதான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் எல்லாம், இந்த காரை பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Keerthy Suresh Spotted In Humble Toyota Innova Crysta

ஒரு சில சமயங்களில் டாக்ஸியாக பயன்படுத்தப்பட்டு வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களிலும் கூட, பிரபலங்களை நாம் பார்க்கலாம். பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரேவை (Sonali Bendre) சமீபத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸியில் பார்க்க முடிந்தது. இவர் தமிழில், பம்பாய், காதலர் தினம் மற்றும் கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட திரைப்படங்களில் எல்லாம் நடித்தவர் ஆவார்.

இந்த வரிசையில் மற்றொரு நடிகையான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது உறுதியாக தெரியவில்லை.

Keerthy Suresh

எனினும் பதிவு எண்ணை வைத்து பார்க்கையில், அது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையாக (Mumbai) இருக்கலாம் என கருதப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே திரைப்படம் தொடர்பான பணிகளுக்காக மும்பை சென்றபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த வைரல் வீடியோவில் ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி கீர்த்தி சுரேஷே செல்ஃபி எடுத்து தருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் செல்ஃபி எடுக்க சற்று தடுமாறிய நிலையில் கீர்த்தி சுரேஷ் செல்போனை வாங்கி, அவரே செல்ஃபி எடுத்து தந்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த செயலுக்காக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அவரை பாராட்டி கொண்டுள்ளனர்.

இதன்பின் அவர் அங்கு தயாராக நின்று கொண்டிருந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸியில் ஏறி புறப்பட்டார். இந்தியாவில் ஒரு சில நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதை விரும்புவதில்லை. செல்ஃபி எடுப்பது தொடர்பான விஷயத்தில் ஒரு சில சமயங்களில் ரசிகர்களுடன், திரையுலக நட்சத்திரங்கள் மோதலில் கூட ஈடுபட்டுள்ளனர்.

இது சர்ச்சையாக எல்லாம் மாறியுள்ளது. ஆனால் கீர்த்தி சுரேஷோ, புறப்பட தயாராக இருந்த காரை நிறுத்தி காத்திருக்க வைத்து விட்டு, ரசிகருக்கு தன்னுடைய கையாலேயே செல்ஃபி எடுத்து கொடுத்து விட்டு சென்றுள்ளார். இதன் காரணமாகவே அவரை சமூக வலை தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் பயணம் செய்த காரின் பதிவு எண்ணை வைத்து தேடியதில், அது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் 2.4 GX 7 Str வேரியண்ட் என்பது தெரிய வந்தது. இதுதான் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். தற்போதைய நிலையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 19.99 லட்ச ரூபாயாக உள்ளது.

வேரியண்ட் பெயரிலேயே இருப்பதை போல், இது 7 சீட்டர் மாடல் ஆகும். அத்துடன் வேரியண்ட் பெயரிலேயே இருப்பதை போல், இதில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் சௌகரியமான பயணத்தை வழங்க கூடியது. அத்துடன் பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு பெரிதாக எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடக்கூடிய தன்மை வாய்ந்தது. இந்த காரில் ஏறுவதும், இறங்குவதும் கூட எளிமையான ஒரு விஷயம்தான். மேலும் பிரீமியமான உணர்வை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பயணிகளுக்கு வழங்கும்.

இது போன்ற காரணங்களால்தான் பிரபலங்கள் இந்த காரில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். இதே காரணங்களுக்காகதான் இந்தியாவின் டாக்ஸி சந்தையிலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஹோட்டல் நிர்வாகங்கள், பிரபலமான மனிதர்களை ஏர்போர்ட் போன்ற இடங்களில் டிராப் செய்யவும், பிக்-அப் செய்யவும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை அதிகமாக பயன்படுத்துகின்றன.

இதன்படி விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு கீர்த்தி சுரேஷ் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் பயணம் செய்த சமயத்தில் இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை உறுதி செய்ய முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Take a Poll

டாக்ஸியில் பயணம் செய்திருந்தாலும் கூட கீர்த்தி சுரேஷிடம், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 (Mercedes Benz AMG GLC 43) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன. இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2025, 16:27 [IST]
English summary
Keerthy suresh spotted in humble toyota innova crysta taxi watch viral video here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+