சட்டை கூட போடல! பிரபல நடிகருடன் ஆட்டோவில் என்ஜாய் செய்த நடிகை! வீடியோவை பாத்ததும் தமிழ்நாடே ஆடி போயிருச்சு!
பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), ஆடி (Audi) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் கார்கள் எல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணம்.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு நடிகரும், நடிகையும் ஆட்டோவில் (Auto) பயணம் செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான். சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த உடன், ஆட்டோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இவர் தமிழ் (Tamil) மட்டுமல்லாது, தெலுங்கு (Telugu) உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருடன் இருப்பது வருண் தவான் (Varun Dhawan) ஆவார்.
இவர் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர். இவரும், கீர்த்தி சுரேசும் புதிய பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தற்போதைய நிலையில், VD 18 என்ற பெயரில் இந்த திரைப்படம் அழைக்கப்படுகிறது. இதில், VD என்பது Varun Dhawan என்பதை குறிக்கிறது.

வரும் 2024ம் ஆண்டு வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை அட்லீ (Atlee) இயக்குகிறார். ஷாருக்கான் (Shah Rukh Khan) நடிப்பில், அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜவான் (Jawan) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை (Box Office Collection) வாரி குவித்து வருகிறது.
எனவே கோலிவுட் (Kollywood) திரையுலகை சேர்ந்த அட்லீக்கு, பாலிவுட் திரையுலகிலும் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. அவர் இயக்கத்தில் வெளிவரவுள்ள VD 18 படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பை நகரில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டிதான் வருண் தவானும், கீர்த்தி சுரேசும் மும்பை நகரில் ஆட்டோவில் ஒன்றாக பயணம் செய்துள்ளனர்.
இந்த வீடியோவில், வருண் தவான் சட்டை எதுவும் அணியாமல், வெறும் பனியன் உடன் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. வருண் தவானையும், கீர்த்தி சுரேஷையும் சாதாரண ஆட்டோவில் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர். இப்படிப்பட்ட பிரபலங்களை சாதாரணமான ஆட்டோவில் பார்த்தால் யாருக்குதான் ஆச்சரியம் பிறக்காது?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருண் தவானிடம் விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக இருக்கின்றன. இதில் ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி 4மேட்டிக் (Mercedes-Benz GLS 350d 4Matic) மற்றும் லேண்ட் ரோவர் எல்ஆர்3 (Land Rover LR3) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மறுபக்கம் கீர்த்தி சுரேஷிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) போன்ற கார்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது வருண் தவானும், கீர்த்தி சுரேசும் சாதாரண பொதுமக்களை போல் ஆட்டோவில் பயணம் செய்திருப்பது, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கும் ஆச்சரியத்தைதான் ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்கள் இருவரும் இந்த ஆட்டோ பயணத்தை ரசித்து 'என்ஜாய்' செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








