சாகச மன்னன் கென் பிளாக்கின் ஜிம்கானா -6 வீடியோ ரிலீஸ்.. காணத் தவறாதீர்கள்!!
பிரபல கார் ஸ்டன்ட் வீரர் கென் பிளாக்கின் புதிய கார் ட்ரிஃப்ட் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவே சேர்ந்த கென் பிளாக் ரேஸ் உலகிலும், கார் ஸ்டன்ட்டிலும் மிக பிரபல்யமானவர். அவரது ஜிம்கானா வரிசையில் வரும் கார் டிரிஃப்ட் சாகசங்கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றவை.
ஜிம்கானா வரிசை கார் டிரிஃப்ட் சாகசங்களை பார்க்காத ரேஸ் ரசிகர்கள் இல்லை எனும் கூறலாம் இந்த நிலையில், கென் பிளாக்கின் சாகசங்கள் அடங்கிய புதிய ஜிம்கானா கார் டிரிஃப்ட் சாகசத்தின் 6ம் பாக வீடியோ வெளியாகியுள்ளது. இந்த முறை தடைகள் ஏற்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவர் காரில் செய்யும் சாகசங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

நகரும் லம்போர்கினி கார்கள், செக்வே ஸ்கூட்டரில் செல்பவர்களை வட்டமடித்து கடப்பது என இந்த முறையும் ரசிகர்களின் உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்துள்ளார் கென் பிளாக். 650 எச்பி பவர் கொண்ட 2013 ஃபோர்டு ஃபியஸ்ட்டா எஸ்டி கார் அவரது கையசைவுகளுக்கு இணங்க கொஞ்சி விளையாடும் காட்சிகளையும், சாகசங்களையும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ இணைப்பில் சென்று பார்த்து ரசிக்கலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/WUO-lPubXeI?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








