சாவை பக்கத்தில் பாத்துட்டு வந்திருக்காரு! கார் கவிழ்ந்தும் அதிசயமாக உயிர் தப்பிய டிரைவர்
கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலையில் கட்டி முடியாத மேம்பாத்தில் ஏறிய கார் ஒன்று மேம்பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் சமீபத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? இதை எப்படி தவிர்த்திருக்க முடியும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில்தற்போது தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது.இதனால் அந்த பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் பலர் இது தெரியாமல் விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விழுந்து இரண்டு பில்லர்களுக்கு நடுவே சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியில் சாலா பைபாஸ் என்ற இடத்தில் நடந்துள்ளுது. இந்த பகுதியில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் புதிதாக அந்த சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மலப்புரத்தை அடுத்த கூன்டோட்டி என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மாருதி டிசையர் காரில் தலச்சேரி சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்பொழுது அவர் பாலம் வேலை நடக்கிறது என்று தெரியாமல் அந்த பாலம் வழியாக மேலே காரில் ஆனால் அந்தபாலம் வேலை நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட பாலமாக இருக்கிறது.

இது தெரியாமல் இவர் பாலத்தில் ஏறியுள்ளார். பாலத்தின் பணிகள் முடிக்காமல் இருந்ததால் பாலம் ஒரு இடத்தில் இணைக்கப்படாமல் இருந்தது. இதனால் இவர் காரில் செல்லும் போது அந்த பள்ளத்தை கவனிக்காமல் காரை ஓட்டி வந்துள்ளார். இவர் கார் பள்ளத்தில் வந்ததும் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த கார் கீழே விழாமல் இரண்டு பில்லர்களுக்கு நடுவே சிக்கியது.
இதனால் இந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் காருக்குள் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தை பார்த்ததும் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அக்கம்பக்கத்தில் பெரிய ஏணியை வாங்கி அதை பாத்தின் மேல போட்டு காரில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பின்னர் போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்த போது பாலம் ஏறும் போது அங்கிருந்த எச்சரிக்கை பலகையை தான் கவனிக்க தவறிவிட்டதாக தெரிவித்தார். இவர் விபத்தில் சிக்கி இவரை மீட்கவே 20 நிமிடங்கள் ஆனது. 20 நிமிடமும் கார் கீழே விழாமல் இரண்டு பாலங்களுக்கு நடுவே சிக்கியதால் இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் வேலைகள் நடந்துவருகிறது. இதனால் நீங்கள் செல்லும் இடத்தில் பணிகள் நடந்து வந்தால் கவனமாக செல்ல வேண்டும், பால வேலைகள் நடந்தால் பாலத்தில் ஏறும் முன்பு எச்சரிக்கை பலகை, தடுப்பு அமைப்புகள் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்யது பின்னர் தான் ஏற வேண்டும் கவனக்குறைவாக இருந்தால உயிரிழிப்பு ஏற்படவே வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








