கேரளாவில் மீண்டும் காருக்குள் ஏறிய பேய்! பதற வைக்கும் வைரல் புகைப்படம்! தீவிர விசாரணையில் இறங்கிய கேரள அரசு
கேரள மாநிலத்தில் ஏற்கனவே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சீட் பெல்ட் அணியாமல் பயணித்தவர் காரில் பேய் இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு அரசு விளக்கம் அளித்த நிலையில் தற்போது மற்றொரு நபர் தன்னுடன் காரில் யாருமே இல்லாத நிலையில் பெண் ஒருவர் இருப்பது போல புகைப்படம் வெளியாகி உள்ளதாக கூறியுள்ளார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கேரள மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் (AI Camera) பொருத்தப்பட்டது முதல் பல்வேறு விதமான செய்திகள் அடிக்கடி வைரல் ஆகிக்கொண்டே இருக்கிறது. இந்த கேமராக்கள் சாலையில் சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளை ஆதாரத்துடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. அதன்படி கேரள மாநிலத்தின் முக்கியமான பகுதிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த செயற்கை நுண்ணறிவு கேமராவில் மாருதி 800 காரில் கணவனும், மனைவியும் பயணித்துக் கொண்டிருந்தபோது பின் சீட்டில் யாரோ பெண் இருப்பது போல புகைப்படத்தில் பதிவாகி இருந்தது. ஆனால் அவர்கள் அந்த பயணம் செய்யும்போது பின் சீட்டில் யாருமே இல்லை, அதனால் இது பேய் என்று செய்திகள் எல்லாம் வைரலாக பரவியது. பலர் இது குறித்து அமானுஷ்ய கதைகளை எல்லாம் அவிழ்த்து விட துவங்கினர்.
ஆனால் இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவு கேமராவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவேறு புகைப்படங்களில் உள்ள வேறு வேறு அம்சங்கள் ஒன்றாக சேர்ந்து இந்த குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக விளக்கம் அளித்தனர். அதனால் இது பேய் ஒன்றுமில்லை எனவும் இதனை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் பையணூரை சேர்ந்தவர் மீதாலி குன்னத் அலி, இவர் சொந்தமாக டொயோட்டா கிளான்ஸா காரை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்ணூர் பகுதியில் சாலையில் வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். இதை செயற்கை நுண்ணறிவு கேமரா புகைப்படம் எடுத்து அவரது வாகன நம்பரை வைத்து அவருக்கு அபராதம் விதித்து செல்லானை அனுப்பியது.
இதற்கான செல்லானை அவர் பெறும் போது அவர் விதிமுறையை மீறியதற்கான ஆதாரமாக அவர் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கான புகைப்படம் அனுப்பப்பட்டது. அந்த புகைப்படத்தில் அவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார், அருகே பயணிகள் சீட்டில் ஒரு பெண் ஒருவர் அமர்ந்திருப்பது போல புகைப்படத்தில் இருந்தது.

இதை கண்டதும் அலி அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் இந்த செல்லானில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் இவர் அந்த காரில் குறிப்பிட்ட ரோட்டில் பயணிக்கவே இல்லை என்பதை உறுதியாக தெரிந்து கொண்டார். மேலும் அவர் அருகில் இருக்கும் பெண் யார் என்றே அவருக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட காரில் டிரைவர் சீட்டில் இருப்பது இவரது புகைப்படம் தான் என்றும், அவர் அருகே இருக்கும் நபர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் தான் சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்கான அபராதம் செலுத்த ரெடியாக இருப்பதாகவும், ஆனால் இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏற்கனவே காரின் பின் சீட்டில் பேய் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது காரின் பக்கத்து சீட்டிலேயே வடமாநில பெண் போல ஒரு பெண் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பெண் ஒரு பெண்ணை அல்ல பேய் எனவும் சிலர் பேசி வருகின்றனர். இது குறித்து கேரள மாநில போக்குவரத்து துறை எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
கேரள மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராவில் இரவு நேரத்தில் புகைபிடிப்பதில் ஏதாவது குழப்பங்கள் இருக்கிறதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது. தொடர்ந்து இது போன்ற தவறான புகைப்படங்கள் வெளியாவதாக சமூகவலைதளங்களில் பவர் பேசி வருகின்றனர். குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் ஏதாவது தவறு நடந்திருக்கிறதா என தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் தவறான தொழில்நுட்பக் கோளாறு பிரச்சனை காரணமாக ஏற்பட்ட உருவம் போல் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனித்து தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள ஏதோ பிரச்சனை காரணமாக இப்படியாக கூறலாம். ஆனால் இது குறித்த உண்மை தகவல் கேரள மாநில போக்குவரத்து துறை ஆய்வு செய்த பின்பே வெளியில் வரும்.


Click it and Unblock the Notifications
