1,240kmph வேகத்தில் பைக்கை ஓட்டியதாக கூறி மலையாளிக்கு அபராதம்! எதை பார்த்து போட்டாங்க தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க
போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தன்னுடைய எம்விடி (MVD) பிரிவை மிகவும் ஆக்டிவாக இயங்கச் செய்திருக்கின்றது. இந்த பிரிவு வாகன போக்குவரத்து விதமீறல்கள் மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிமீறல்கள் ஆகியவற்றை மிக உறுதியாக நடைமுறைப்படுத்தும் விதமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே மாநிலம் முழுவதிலும் முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) வசதிக் கொண்ட கேமிராவை கேரளா அரசு பொருத்தி இருக்கின்றது. இது மனிதர்களின் மூலையைக் காட்டிலும் மிக வேகமாகும், துள்ளியமாகவும் செயல்படும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமிரா சர்ச்சையான அபராதன செல்லாணைப் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மணிக்கு சுமார் 1,240 கிமீ வேகத்தில் சென்றதாக கூறி அபராத செல்லாண் அந்த கேமிரா வாயிலாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவமே மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது. இது ராக்கெட்டுகளுக்கு இணையான வேகம் ஆகும். இந்த வேகத்தில் செல்லக் கூடிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அப்படி என்றால் இத்தகைய வேகத்தில் செல்லும் மோட்டார்சைக்கிள் கேரளாவில் இருப்பது எப்படி கண்டறியப்பட்டது என்று நீங்கள் கேட்கலாம். இது தொழில்நுட்ப கேளாறால் வழங்கப்பட்ட அபராத செல்லாண் ஆகும். நம் நாட்டில் ரயில்களே இந்த வேகத்தில் செல்வதில்லை. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் எனும் யுட்யூப் செய்தி சேனல் வாயிலாகவே இந்த முறைகேடான அபராத செல்லாண் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

தலைக் கவசம் அணியாமல் சென்றதற்காக போட வேண்டிய அபராத செல்லாணே அதிக வேகத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. அதுவும், 1,240 கிமீ வேகம் என குறிப்பிடப்பட்டு செல்லாண் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவேதான் இந்த செல்லாண் விபரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த செல்லாண் பற்றிய தகவலை அறிந்து ஏற்கனவே அதன் மீது கேரளா எம்விடி ஆக்சன் எடுக்க களமிறங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், அந்த வாகன ஓட்டி இடம் ஹெல்மெட் அணியாததற்கான அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாநிலம் முழுவதும் கேரளா அரசு சுமார் 726 செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமிராக்களை பொருத்து இருக்கின்றது. இது மிக சிறந்த பார்வைத் திறன் கொண்டது. மனிதர்களின் பார்வையைவிட திறம்பட செயல்படக் கூடியது.

இவ்வாறு கூறக் கூடிய கேமிராவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்ச்சையான அபராத செல்லாணை வாழங்கி இருக்கின்றது. இந்த செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமிரா பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த முதல் நாளிலேயே 38 ஆயிரம் அபராத செல்லாண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் எத்தனை தவறாக வழங்கப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகத்தையே தற்போதைய அபராத செல்லாண் சம்பவம் எழுப்பி இருக்கின்றது.
இந்த சந்தேகத்தை இன்னும் ஸ்ட்ராங்காக்கும் வகையில் மாநிலத்தில் இன்னும் பல அபராத செல்லாண்கள் முறைகேடாக வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக நம்பர் பிளேட்டில் இருகும் ஸ்க்ரூ மற்றும் போல்ட்டுகளைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவுக் கொண்ட கேமிரா அதிகமாக குழப்பமடைவதாகக் கூறப்படுகின்றது.
இதன் அடிப்படையில் பலருக்கு தவறுதலாக அபராத செல்லாண் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த கேமிராக்கள் பயன்பாட்டிற்கு வந்தபோது, இதன் வாயிலாக அபராத செல்லாண் வழங்க மனித தலையிடுதல் தேவையே இல்லை என கூறப்பட்டது. ஆனால், அதிகம் கோளாறுகள் ஏற்படவே தற்போது மனிதர்களின் உதவியுடன் அபராத செல்லாண்கள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், அவ்வப்போது சர்ச்சையான அபராத செல்லாண்கள் வழங்கப்பட்டுவிடுகின்றன. எனவே இந்த கோளாறுகளையும், சர்ச்சைகளையும் குறைக்க புதியதாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு அபராத செல்லாண்களில் இருக்கும் சிக்கல்கள் களையப்பட்டு வருகின்றது. அதேநேரத்தில், மாநிலத்தில் மக்கள் தரப்பில் சில புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. அதாவது, மாநிலத்தில் முறைகேடாக வாகனம் ஓட்டியதாக அரசியல்வாதிகளுக்கு மட்டும் அபராத செல்லாண் வழங்கப்படுவதில்லை என்கிற புகாரே எழும்பத் தொடங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் மட்டுமல்ல தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலையேதான தென்படுகின்றது. அதாவது, அரசியல்வாதிகள் மற்றும் அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்படுவதில்லை. இந்தியா அளவிலும் இதுமாதிரியான சொற்ப அளவிலேயே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
